பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை பொது தேர்வுகள் (அக்டோபர் 2020) மறுகூட்டல்/மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடல் இயக்குநரின் செயல்முறைகள் நாள் 11 .12.2020 - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 11 ديسمبر 2020

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை பொது தேர்வுகள் (அக்டோபர் 2020) மறுகூட்டல்/மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடல் இயக்குநரின் செயல்முறைகள் நாள் 11 .12.2020

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை பொது தேர்வுகள் (அக்டோபர் 2020) மறுகூட்டல்/மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடல் இயக்குநரின் செயல்முறைகள் நாள் 11 .12.2020 

விடுநர்

முனைவர்.சி.உஷாராணி, 

எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி., 

அரசுத் தேர்வுகள் இயக்குநர், 

சென்னை - 600 006. 

பெறுநர் 

செய்தி ஆசிரியர், 

அனைத்து செய்தி ஊடகங்கள். 

ந.க.எண்.020389/எச்1/2020 நாள் : 11 .12.2020 

 

ஐயா/அம்மையீர், 

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 - மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வுகள், செப்டம்பர் / அக்டோபர் 2020 – மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து – செய்திக் குறிப்பு – வெளியிடக் கோருதல் –தொடர்பாக. 

------ 

நடைபெற்ற செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வுகள், மறுகூட்டல் / மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் தேர்வெண்கள் விவரம் குறித்த ‘செய்திக் குறிப்பு’ இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதனை பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தங்களது நாளேட்டில் / வானொலியில் / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடுமாறும், ஒலி / ஒளிபரப்புமாறும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ‘இது விளம்பரம் அல்ல’ எனவும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இணைப்பு: செய்திக் குறிப்பு 

 

ஓம்/- 

இயக்குநர்




அரசுத் தேர்வுகள்இயக்ககம், சென்னை– 600 006  

செப்டம்பர் / அக்டோபர் 2020  மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வுகள்,மறுமதிப்பீடு / மறுகூட்டல் 

 நடைபெற்ற செப்டம்பர் / அக்டோபர் 2020, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் (Re Total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்கள்,  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் 15.12.2020 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலில் மாற்றம் இல்லாத தேர்வெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 

ஓம்/- 

இயக்குநர் 

தேதி: 11.12.2020 

இடம்: சென்னை– 600 006.


ليست هناك تعليقات:

إرسال تعليق

Comments System

[blogger][disqus][facebook]