தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,254 இடங்களுக்கான மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கியது 


மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (நவம்பர்) 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 10-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அதன் தொடர்ச்சியாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பின்னர், தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 562 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், 692 பி.டி.எஸ். இடங்களுக்கும் என மொத்தம் 1,254 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் 2 ஆயிரத்து 7 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

இதில் பெரும்பாலான மாணவர்கள் பங்கு பெறவில்லை. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதும், அடுத்த வாரத்தில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மீதம் இருந்த இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் மீண்டும் திரும்ப கிடைத்த இடங்கள் ஆகியவற்றுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!