குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 5 ஆண்டுகள் அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என தமிழக அரசு அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

الجمعة، 11 ديسمبر 2020

குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 5 ஆண்டுகள் அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என தமிழக அரசு அறிவிப்பு

குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிய 5 ஆண்டுகள் அவகாசம் மேலும் நீட்டிக்கப் படாது என தமிழக அரசு அறிவிப்பு 

பொது சுகாதரதுறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

குழந்தையின் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாகும்

குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்டம் வழிவகை செய்கிறது. 

இப் பிறப்பு சான்றிதழ் குழந்தையை... 

  • பள்ளியில் சேர்க்க 
  • வாக்காளர் அடையாள அட்டை 
  • ஓட்டுநர் உரிமம் 
  • பாஸ்போர்ட் மற்றும் 
  • விசா உரிமம் பெற இன்றியமையாததாகும் 

வயது குறித்த ஆதாரமாகவும் உள்ளது. குழந்தையின் பிறப்பை பெயரின்றி பதிவு செய்யப்பட்டு இருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் இடமளித்து எந்தவித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்யலாம்.  

12 மாதங்கள் பின் குழந்தையின் பெயரை 15 ஆண்டுகளுக்குள் உரிய கால தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம்.  

(அரசாணைக்கு இங்கே கிளிக் செயஙயவும் - PDF FILE)
2000 ஜனவரி 1க்கு முன் பிறந்த.... 

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகளின் படி கடந்த 2000 ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த கால அளவு முடிந்த பின்னரும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்ப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது. 

காலநீட்டிப்பு கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.  இதை தொடர்ந்து 15 ஆண்டு கால அவகாசம் முடிந்து அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்ய ஐந்து ஆண்டுகள் அவகாசம் நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை 

ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்தபின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. எனவே குழந்தையின் பெயரை உறுதியாக முடிவு செய்தபின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளருக்கு உறுதிமொழிப் படிவம் அளித்து பதிவு செய்யலாம். பெயர் பதிவு செய்ய கிராம ஊராட்சிகளில் கிராம நிர்வாக அலுவலரிடம், பேரூராட்சி செயல் அலுவலரிடமும்,  அல்லது துப்புரவு ஆய்வாளரிடமும்,  கண்டோன்மென்ட்,  நகராட்சி,  மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர்,  ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்கலாம். தற்போது வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

Comments System

[blogger][disqus][facebook]