பழங்குடியினர் நல பள்ளிகளில் 198 ஆசிரியர் காலி பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

பழங்குடியினர் நல பள்ளிகளில் 198 ஆசிரியர் காலி பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு உத்தரவு

பழங்குடியினர் நல பள்ளிகளில் 198 ஆசிரியர் காலி பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு உத்தரவு 

பழங்குடியினர் நல மாநில இயக்குநர் வி.சி.ராகுல், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு ஆணையிட்டுள்ளது. 

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 48 இடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியில் 117 இடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியில் 33 இடங்கள் என 198 இடங்கள் காலியாக உள்ளன. அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.8 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9 ஆயிரம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். 

தங்கள் மாவட்டத்தில் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, வகுப்பு நடத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

No comments:

Post a Comment