பிளஸ்1 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார் - EDUNTZ

Latest

Search here!

Friday 11 December 2020

பிளஸ்1 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்

பிளஸ்1 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்


பிளஸ்1 மாணவ மாணவிகளுக்கு 5.45 லட்சம் பேருக்கு 215 கோடியில் இலவச மிதிவண்டிகள் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 5.45 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ரூ 215 கோடியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு 

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் பிளஸ் 1 பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001 2002 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கி வைத்தார். 

பின்னர் 2005 2006 ஆம் கல்வியாண்டில் முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இத்திட்டத்தின்கீழ் மிதிவண்டி வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் பயிலும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 456 மாணவர்கள்,  மூன்று லட்சத்து 6 ஆயிரத்து 710 மாணவிகள் என மொத்தம் 5 லட்சத்து 45 ஆயிரத்து 166 மாணவிகளுக்கு ரூ 214.79 கோடியில் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 9 மாணவர்களுக்கு மிதிவண்டி அவர் வழங்கினார்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]