இந்து தமிழ் திசை’ - ‘டாப்பர்ஸ் கிளாஸ்’ இணைந்து நடத்தும் ‘கையெழுத்து பயிற்சி’ 2-வது ஆன்லைன் நிகழ்ச்சி- டிச.21-ம் தேதி தொடங்குகிறது


 ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாப்பர்ஸ் கிளாஸ் உடன் இணைந்து நடத்தும் ‘கையெழுத்துப் பயிற்சி’ 2-வது ஆன்லைன் நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. குழந்தைகளின் கையெழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் ‘கையெழுத்துப் பயிற்சி’யின் 2-வது ஆன்லைன் நிகழ்ச்சியில், 2-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 5-ம் வகுப்புக்கு மேல் பயிலும் அனைத்து மாணவர்களும் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். 

 இரு பிரிவுகளுக்கும் தனித்தனியாகப் பயிற்சிகள் நடைபெறும். ஜூனியர் பிரிவுக்கு டிச.21 முதல் 31-ம் தேதி வரை தினமும் மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி நடைபெறவுள்ளது. சீனியர் பிரிவுக்கு டிச.21 முதல் 27-ம் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பயிற்சி நடைபெறும். இப் பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் 100 பக்க அள விலான பயிற்சித்தாள் தரப்பட்டு, அதன் வழியே பயிற்சிகள் நாள் தோறும் வழங்கப்படும். 

பயிற்சிகள் முடியும்போது அனைவருக்கும் அழகான கையெழுத்து அமையும். இந்த கையெழுத்துப் பயிற்சியை பல ஆண்டுகள் அனுபவமிக்க புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளர் சிந்துஜா புவனேஸ்வரன் வழங்க உள்ளார். இதில், பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/special/handwriting என்ற இணையதளத்தில் ஜூனியர் பிரிவு எனில் ரூ.885-ம், சீனியர் பிரிவு எனில் ரூ.767-ம் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!