27.12.2020 அன்று நடைபெற உள்ள NTSE தேர்வுக்கான அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு 



பார்வை 1 மற்றும் 2-இல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் (Standard operating procedures) பின்பற்றி, 27.12.2020 -ல் நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக பின்வருமாறு வழங்கப்படும் அறிவுரைகளை தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவித்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்


தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்துதல் சார்ந்து வெளியிடப்பட்டுள்ள பார்வையில் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தேர்வு தொடர்பான பணிகள் அனைத்தும் நடைபெறுதல் வேண்டும். அவ்வரசாணையின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது


முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கேற்ப ஏற்கனவே உள்ள நடைமுறையினைப் பின்பற்றி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள் / வழித்தட அலுவலர்கள் / வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் ! அறைக் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்தல் வேண்டும்


பார்வை 1 மற்றும் 2-இல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்துதல் தொடர்பான அறிவுரைகளை, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் / வழித்தட அலுவலர்கள் / தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்குதல் வேண்டும்


தேசிய திறனாய்வுத் தேர்வுக்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 400 சதுர அடி கொண்ட ஒரு தேர்வறையில் 10 என்ற எண்ணிக்கையில் தேர்வர்களை சமூக இடைவெளியோடு அமர வைக்க வேண்டும்.


தேர்வுகள் துவங்குவதற்கு முன்பு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள்


அனைத்து தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்களும், தங்கள் மையத்திற்கு நியமனம் செய்யப்பட்ட துறை அலுவலர், எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளருடன் சேர்ந்து, தேர்வு துவங்குவதற்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்தை பார்வையிட்டு, இருக்கை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதையும், அங்கு விடைத்தாள்கள் மற்றும் வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இரும்பு அலமாரிகள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர், பெயர் பட்டியலினை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி அரசுத் தேர்வுத் துறை அறிவிக்கும் நாட்களில் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்


தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை


நடவடிக்கைகள்


தேர்வு மையங்களில் 400 சதுர அடி கொண்ட ஒரு தேர்வறையில் 10 என்ற எண்ணிக்கையில் தேர்வர்களை சமூக இடைவெளியோடு அமர வைக்க வேண்டும்.


II, தேர்வு நாளன்று நுழைவு வாயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கண்டிப்பாக சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளை கடைப்பிடித்தல் வேண்டும். ii. தேர்வறைக்குள் அனுமதிக்கும் நேரம் வரை, தேர்வர்கள் சமூக இடைவெளியுடன்


அமர்ந்து தேர்வுக்கு தயாராவதற்கு ஏதுவாக முதன்மைக் கண்காணிப்பாளர்


போதுமான எண்ணிக்கையில் காத்திருப்பு அறைகளை (Waiting rooms) அமைத்தல்


வேண்டும்


iv. தேர்வர்கள் காத்திருக்கும் அறைக்கு வெளியே இருப்பதற்கு அனுமதித்தல் கூடாது


V. தேர்வு மைய வளாகத்தில் மூன்று இடங்களில் தேர்வு நடைபெறக்கூடிய தேர்வறைகளின் வரைப்படத்தினை (Seating Plan) ஒட்டுதல் வேண்டும்.


Click here to download pdf



Post a Comment

Previous Post Next Post

Search here!