இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் ஆய்வு கூடத்திற்கு வெளியே நடந்த சில சம்பவங்கள் பகுதி-2 - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் ஆய்வு கூடத்திற்கு வெளியே நடந்த சில சம்பவங்கள் பகுதி-2

 

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் ஆய்வு கூடத்திற்கு வெளியே நடந்த சில சம்பவங்கள் பகுதி-2



சிறுகதைக்கு பரிசு 

போஸின் குணத்தில் எளிய பகுதி பற்றி மேலும் சில வார்த்தைகள். பலாட்டக் தூஃபான்  (மறையும் புயல்) என்ற சிறுகதை ஒன்றை அவர் எழுதினார். நகைச்சுவையுடன் எழுதும் அவருக்கு அது எடுத்துக்காட்டாக விளங்கியதுடன் போட்டி ஒன்றில் முதல் பரிசையும் பெற்றது.  (அந்த ஐம்பது ரூபாயை தர்மத்துக்கு கொடுத்துவிட்டார்) அது விஞ்ஞான கருவைக் கொண்ட கதை. வானிலை அறிக்கை ஒன்று பொய்த்துப்போனதை நயமாக கேலி செய்து இருந்தார்.  மற்றும் கொந்தளிக்கும் கடலை கூந்தல் தைலம் அமைதியுற அதிசய விளைவை நகைச்சுவை ததும்ப எழுதியிருந்தார்.  இடையே இந்நாட்டில் ஆண்கள் பெண்களை காட்டிலும் அதிக சுதந்திரம் அனுபவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.  இது இயற்கையின் விதிக்கும் முரணானது.  ஏனெனில் கனமான பொருட்கள் புவி ஈர்ப்பு சக்தியால் அதிவேகமாக இழுக்கப்படுகின்றன. அதனால் ஆண்கள் அதிக தளைகள் உள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். பெண்கள் லேசாக இருந்தும் குறைவான சுதந்திரமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

சமஸ்கிருத பெயர்கள் 

தமது கருவிகளுக்கு சமஸ்கிருத பெயர்கள் சூட்ட முயன்று முயற்சி படுதோல்வியில் முடிந்தது.  இங்கிலாந்தில் அந்தப் பெயர்கள் அடைந்த கோரமான சிதைவுகளே இதற்கு காரணம்.  சுருக்கமாணி என்ற பெயர் கஞ்ச்சன்மான் என்று மருவியது.  ஹிரண்யகசிபுவைகூட  கூட ஹரி என்று சொல்ல வைப்பது எளிது.  ஆனால் ஆங்கிலேயரை கொண்டு அதை சாதிக்க முடியாது.  அதனால் நமது ஹரீ "ஹாரிஸ்" ஆக மாற்றப்படுகிறது என்று ஒரு கட்டுரையில் அவர் குறிப்பிட்டார்.  அதனால் அவர் தமது கருவி ஒன்றுக்கு விருத்திமான் (வளர்ச்சி மணி) என்று பெயர் வைக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். ஏன் எனில் அது நிச்சயம் பர்த்வான்  ஆகிவிடும்.

ஹீலியோட்பிராபிஸம் (சூரியனை பின்பற்றுதல்) போன்ற பெரிதாக ஒலிக்கும் சொற்களின் விசித்திரமான சக்தி பற்றி அவர் இன்னொரு கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தார்.  கிரேக்கம் லத்தீன் சமஸ்கிருதம் மொழிகளில் தடபுடலாக குறிக்கும் சொற்கள் உண்மை காரணத்தை ஆராயும் ஆர்வத்தை கொள்வதில் மந்திரஜாலம் போல வேலை செய்தன. வெெப்ப இயக்கம் பற்றிய அவரது சொந்த ஆராய்ச்சியில் நன்கு பிரபலமான மந்திரங்களில் அவர் மயங்க மறுத்துவிட்டார்.

ஜெகதீஷ் தமது பொது சொற்பொழிவு ஒன்றில் நீர் அல்லியின் உறக்க நிலையையும் விழிப்பு நிலையையும் குறிப்பிட்டு நிலவின் காதலி ஆதலால் அல்லி இரவில் மலர்கிறது என்பது கவிஞரின் கூற்று என்றார்.  ஆனால் உண்மையில் சந்திரனால் அல்ல.  சந்திரன் இல்லா இரவுகளில் கூட அந்த மலர் இதழ் விரித்தது.  ஆனால் கவிஞன் ஒருவன் விளக்கை எடுத்துக்கொண்டு போய் இருட்டில் அல்லி மலர்கிறதா என்று பார்ப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த அசாதாரண ஆர்வம் விஞ்ஞானிக்குத்தான் இயல்பாக இருக்க முடியும் என்று அவர் கூறினார்.  பகலில் 16 மணி வரை மலரின் இதழ்கள் விரிந்து பலசமயம் காணப்படுவதை அவர் குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்ந்து ஒன்றைச் சொன்னார்.  பிரின்ஸ் அகராதி தயாரிப்பாளர் ஒருவர் நண்டு என்பதற்கு விளக்கம் எழுதுவதற்காக விலங்கியல் நிபுணரை ஆலோசனை கேட்க சென்றார்.  பின்னோக்கி நடக்கும் ஒரு சிறிய சிவப்பு மீன் என்று அகராதி தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்திருந்தார்.  இதைக்கேட்ட குவியர் சபாஷ் ஆனால் நண்டு சிறிதாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கொதிக்க வைக்கும் வரையில் அது சிவப்பாக இருக்காது.  அது ஒரு மீன் அல்ல.  அத்துடன் அது பின்னோக்கி நடக்க முடியாது.  இந்த விளக்கங்களுடன் பார்த்தால் உங்கள் விளக்கம் மிகப் பொருத்தமானதுதான் என்றார்  அப்போதுதான் அல்லி பற்றிய கவிஞரின் வர்ணனையும் அது, நிலா ஒளிக்காகமட்டும் மலர்வதும் இல்லை சூரியனை கண்டு கூம்பதுவதுமில்லை.

இலக்கிய எழுத்தாளர் 

ஜெகதீசின் இலக்கிய படைப்புத் திறனின் சில அறிகுறிகளை ஏற்கனவே பார்த்தோம்.  பாகிரதி நதியின் உற்பத்தி இடத்தை தேடி சென்ற யாத்திரையின் வரலாற்றை அவர் ராமானந்த சட்டர்ஜி நடத்தி வந்த ஒரு பத்திரிகையில் வங்க மொழியில் எழுதி இருந்தார்.  அதைப் படித்த வாசகர்கள் அவரது கவர்ச்சி மிக்க உரைநடையை கண்டு மனம் நெகிழ்ந்ததுடன் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற விஞ்ஞானி ஒருவரின் படைப்பாக அது இருக்க முடியுமா என்று வியப்ற்றார்கள். அது அவருடைய சகோதரியுடைய படைப்பாக இருக்கவேண்டும் என்று ஆச்சரிய பிசி ராய் வேடிக்கையாக குறிப்பிட்டார்.  ஏனெனில் அவரது சகோதரி அப்போது ஒரு நல்ல எழுத்தாளர் என்று பெயர் எடுத்திருந்தார். வங்கமொழியில் தாம் எழுதிய விஞ்ஞானக் கற்பனைக் கதைகளின் மற்றும் யாத்திரை கதைகளில் வங்கமொழி தொகுப்பு என்ற நூலின் பிரதி ஒன்றை ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்குகையில் இவ்வாறு எழுதிக் கொடுத்தார்.  கண்ணைப் பறிக்கும் கதிரவன் முன்னால் மின்மினிப்பூச்சி ஒளி போன்றது இது கவிஞர் எழுதிய பெருந்தன்மையான பதிலில் அவர் விஞ்ஞானத்தை நாடி ஓடாமல் இருந்திருந்தால் அலருடைய முதற்காதலுக்கு பாத்திரமாகியிருப்பாள் என்று நயம்பட குறிப்பிட்டிருந்தார்.  உண்மையில் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் வேலை மிகுந்த விஞ்ஞானிக்கு தாகூர் பதுப்பித்த வங்கதர்ஷன் உட்பட வங்க இலக்கிய பத்திரிகைகளைப் படிக்க வேண்டும் என்ற வேட்கை அளவிட முடியாமல் இருந்தது.  தாகூரின் படைப்புகளில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

வங்க சாகித்ய பரிஷத் (வங்க இலக்கிய கழகம்) அணியின் தலைவராக அவர் இரண்டு வருடங்கள் பணியாற்றியது மிகப் பொருத்தமே.  ஒரு விஞ்ஞானிக்கு கிடைத்த அரியதொரு கௌரவம் இது. இத்தகைய திறமை வாய்ந்த ஒருவர் விஞ்ஞானத்தை சரளமான மொழியில் சாதாரண மனிதனுக்கு புரியும்படி விளக்கும் ஆற்றல் பெற்று இருந்ததில் வியப்பில்லை.  அத்தகையதொரு சந்தர்ப்பம் அவரது குண இயல்பின் சுவையான அம்சத்தை வெளிப்படுத்தியது. 1911 ஆம் வருடம் வங்க சாகித்திய சனக்கூட்டம் மைமன்சிங்கில் நடந்தது. வரவேற்பு குழுத் தலைவர் மகாராஜா அவர்கள் போஸிடம் ஏராளமான மக்கள் அவரது கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கங்களை கேட்கவும் சோதனைகளை பார்க்கும் ஆவல் கொண்டிருப்பதாகவும் அதற்கென நுழைவு கட்டணம் ஒன்று வைக்கலாம் என்றும் ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் என்று வைத்தால் கூட மண்டபம் நிறைந்து விடும் என்றும் கூறினார்.

இக் கருத்தை ஏற்க மறுத்த ஜகதீஷ்,  பணக்காரர்களுக்கு மட்டும் தாம் உரையாற்ற போவதில்லை என்றும் ஒரே உரையை இரண்டு முறை நிகழ்த்த தாம் தயார் என்றும் ஆனால் நுழைவு கட்டணம் ஏதும் கூடாது என்றும் சொல்லிவிட்டார்.  இவ்வாறு ஆங்கிலத்தில் ஒரு நாளும் வங்க மொழியில் ஒரு நாளும் உரைகளை நிகழ்த்தினார்.  வங்கமொழி சொற்பொழிவில் எளிய சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தினால் சிக்கலான விஞ்ஞான விஷயங்களை விளக்க ஒரு கலைச் சொல்லைக்கூட உபயோகிக்கவில்லை.  விஞ்ஞான அறிவு ஏதும் அற்றவர் கூட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு சென்றனர்.

வெளிநாட்டு பயணங்களுக்கு இடையில் ஜெகதீஷ் தம் வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண மக்கள் கூட்டங்களிலும் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி சரளமான முறையில் விளக்கி உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  வங்கமொழியில் குழந்தைகளுக்காக கூட சில விஞ்ஞான கட்டுரைகளை எழுதினார்.  பொது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினால் நிறைய பணம் தருவதாக பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிலிருந்தும் வேண்டுகோள் வந்தன.  ஒரு சில தவிர்க்க முடியாத வேண்டு கோள்களை தவிர மற்றவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.  ஏனெனில் அது விஞ்ஞானத்தின் மதிப்பைக் குறைத்துவிடும் என்று அவர் கருதினார்.

நாட்டுப்பற்று 

ஜெகதீஷ் தனது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் தமது நாட்டுப் பற்று உணர்வுகளை அடிக்கடி வெளியிட்டு வந்தார்.  நான் 100 முறை பிறவி எடுக்க வேண்டுமானாலும் இந்தியாவின் தாயகமாக தெரிந்து எடுப்பேன் என்று தாகூருக்கு எழுதிய கடிதமொன்றில் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.  1903இல் ஒரு முறை எம் ஏ வகுப்பின்போது  தமது மாணவர்கள் அனைவரையும் தமது வீட்டுக்கு அழைத்திருந்தார்.  கிராமபோனில்  நாட்டுப் பாடல் ஒன்றை இசைக்கையில் அவர் பெரும் கிளர்ச்சி அடைந்து,  இதுதான் இந்தியாவின் உண்மையான பெருமையை எடுத்துக் காட்டுகிறது.  இங்கு துரதிஷ்டமாக மக்கள் பொய்யான தளங்களில் பிரமை கொண்டிருக்கிறார்கள் என்று கூறியதாக மாணவர் ஒருவர் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தார்.  எந்த நாட்டிலும் நாகரிகம் எவ்வளவு தாழ்வு நிலையை அடையவில்லை என்றும் அவர் கூறினாராம்.

லண்டனுக்கும் கேம்பிரிட்ஜ்க்கும் முதல்முறை சென்றபோது தேசபக்தி ஆவேசம் தம்மிலங நிறைந்து இருந்ததாக மற்றொரு சமயம் தமது மாணவர்களிடம் அவர் கூறினார்.  நமது மூதாதையருக்கு எல்லாம் தெரியும் என்று உங்களைப் போல நானும் நம்பினேன்.  நமது பண்டைய சரித்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.  ஆனால் அது எனக்கு அதிக வெறி உணர்ச்சியை கொடுத்தது.  எனினும் பயனுள்ள தேசபக்தியையும் உணர்ச்சிவசமான தேசபக்தி எதையும் பாகுபடுத்தி அறிய நான் விரைவிலேயே கற்றுக்கொண்டு விட்டேன் என்றார்.  பக்குவமடைந்த ஜெகதீஷ் குறுகிய தேசிய வாதி அல்ல அவரது பண்பாட்டு வேர்களை இந்தியாவில் ஊன்றி இருந்தன.  ஆனால் அவர் பரந்துபட்ட பொது நோக்கம் உடையவராக இருந்தார்.

வைசிராய் ஹார்டிங் பிரபு (Lord Hordinge) கல்கத்தாவில் வருகை தந்தார். அவருடைய நிகழ்ச்சி நிரலில் மாநில கல்லூரியில் போஸின் சோதனைகளை காண்பது இடம் பெற்று இருந்தது.  ஆனால் டில்லியில் வைசிராய் மீது குண்டு வீசப்பட்டது.  அவர்கள் லேசாக காயம் அடைந்தால் போஸின் பரிசோதனை நிகழ்ச்சியை அரசாங்க மாளிகைக்கு மாற்றினார்கள். தம் மாணவ உதவியாளர்கள் வாயிலில் சோதிக்கப்படுவார்கள் என்பதை அவர் அறிந்தபோது போஸ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்.  அதன்பிறகு அதிகாரிகள் இறங்கி வர வேண்டியதாயிற்று.

ஜெகதீஸ் சந்திரபோஸ் இலண்டனில் தாம் ஒரு சமயம் கண்ட கற்பனை காட்சி ஒன்றை எழுதி வைத்துள்ளார்.  எலும்பும் தோலுமாக துயர் நிறைந்த உருவம் ஒன்று விதவை கோலத்தில் கணநேரம் என் முன் தோன்றியது.  அது இந்தியத்தாய் என்பதில் சந்தேகம் இல்லை. "நான் உன்னை ஆசிர்வதிக்க வந்திருக்கிறேன்" என்று அந்த உருவம் கூறியது.  1915ல் விக்ரம்பூர்  சம்மேளனத்தில் அவர் அரசின் சுமையை உண்மையில் யார் தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு விவசாயிகளும் குடியானவர்களும் கிராமத்தில் வாழும் உணவற்ற நோய் நிரம்பிய எலும்புக்கூடுகள் தான் என்று தாமே பதிலளித்தார்.

சாதிகள் இல்லையடி பாப்பா 

தாழ்ந்த சாதிகள் என்றிருப்பது இந்து முஸ்லிம் பிரச்சினைகளில் ஒன்று இருப்பதேத தனக்கு குழந்தை பருவத்தில் தெரியவே தெரியாது என்று எங்கேயோ அவர் எழுதி இருக்கிறார்.  எல்லாரும் அவருக்கு நண்பர்களாக இருந்து வந்தனர்.  அந்த நட்பு உணர்ச்சியை மற்றவர்களும் அவரிடம் காட்டிய திருப்தி அவருக்கு இருந்தது. அவர் உலகப் புகழ் பெற்றிருந்த சமயத்தில் முஸ்லிம் கிராமவாசி ஒருவர் அவரை தனது வீட்டுக்கு அழைத்திருந்தார்.  தம் வீட்டுப் பெண்கள் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த கிராமவாசி அவரை அழைத்தாராம்.  ஜெகதீஸ் "நான் ஒரு அன்னிய மனிதன் இல்லையா? உங்கள் வீட்டில் பர்தா முறை கிடையாதா? என்று கேட்டார்.  நீங்கள் அன்னியர் அல்ல.  எங்களில் ஒருவர் என்று பதில் கிடைத்தது.

பட்டங்கள் 

ஜகதீச போன்ற பல அற்புத சாதனைகள் பல நிகழ்த்தியவர்கள் பட்டங்களும் பேரும் புகழும் கௌரவமும் வந்து குவிவது இயற்கையே.  அத்தகைய சிறப்பு விருதுகள் சிலவற்றை ஏற்கனவே குறிப்பிட்டோம். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சிஐஏ (கம்பணியன்ஷிப் ஆஃ இந்தியன் எம்பயர்) - (Companionship of the Indian empire)  விருது அவருக்கு அரசு வழங்கியது.  எனக்கு ஒரு வால் கிடைத்திருக்கிறது என்று அவர் தாகூருக்கு எழுதினார்.  ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவின்போது சிஎஸ்ஐ  (Companionship of the Star India) என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.  1917இல் சர் பட்டம் பெற்றார். ஆயிரத்து 912 கல்கத்தா பல்கலைக்கழகம் டாக்டர்  ஆஃப் சைன்ஸ் (D.Sc)பட்டம் கொடுத்தது.  1927இல் இந்திய விஞ்ஞான காங்கிரஸின் பொது தலைவராக கௌரவிக்கப்பட்டார். 1931ல் கல்கத்தா நகர பேரவை அவரை கௌரவித்தது. மேயர் சுபாஷ் சந்திரபோஸ் சிறந்த பாராட்டுரை வழங்கி னார்.  லட்சக்கணக்கான அவரது நாட்டு மக்களின் அன்பையும் மரியாதையையும் அவருக்கு வழங்கப்பட "ஆச்சார்ய" என்ற பட்டம் எடுத்துக் காட்டியது.

முதுமை 

முதுமை பருவமும் தள்ளாமையும் தீவிர ஆராய்ச்சி வேலைகளில் இருந்து அவரை கடைசியாக விலக வைத்தன.  ஆனால் போஸ் கழகப் பணியை உன்னிப்பாக மேற்க மேற்பார்வையிடுவது நிறுத்தவில்லை. சர்க்கரை நோயுடன் உயர் ரத்த அழுத்தமும் அவரை வாட்டியது. இதனால் ஆண்டிற்கு ஒருமுறை இடமாற்றத்திற்கு என டார்ஜிலிங் போக முடியாமல் போய்விட்டது.  அவரது கடைசி நான்கு வருடங்களில் பீகாரில் கிரீதி (Giridih) எனும் இடத்துக்கு ஒவ்வொரு இலையுதிர் காலத்திலும் சென்று ஓரிரு மாதங்கள் ஓய்வு எடுத்தார். 1937 ஆம் ஆண்டு வழக்கம்போல் கழகத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு என அவர் கல்கத்தாவுக்கு புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.  ஆனால் நவம்பர் 23ஆம் தேதி காலை குளித்துக் கொண்டிருந்தபோது அவரது இருதயம் நின்று விட்டது . அமைதியாக காலமாகிவிட்டார்.  அவரது 79 ஆவது பிறந்த நாளுக்கு ஏழு நாட்கள்தான் இருந்தன.  அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.  அவரது சடலம் தான் தகனத்துக்காக கல்கத்தா சென்றது.  துயரம் தாளாத பெரும் திரளான மக்கள் கூட்டம் இறுதியாக விடை கொடுத்தது 

நெல்லிக்கனி 

இறப்பதற்கு முதல்நாள் மாலைதான் ஜெகதீஸ் தமது உறவினர் ஒருவரிடம் (போஸ்கழக மேற்பார்வை அதிகாரி) நாலரை லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள தமது சொந்த நிதிகளை எவ்வாறு அறக்கட்டளைகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்பது பற்றி வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அவரது இறுதிக் கிரியைகள் முடிந்த பிறகு போஸின் மனைவி அவரது கட்டளையை நிறைவேற்றினார்.  அந்தப் பணம் முழுவதையும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கி விட்டார் அவரது துணைவியார்.  உண்மையான இல்லத்தரசியாகவும் ஆலோசகராகவும் தோழியாகவும் தொண்டாற்றிய அவரது வெற்றிக்கும் புகழுக்கும் பின்னணியிலிருந்தவாறே உறுதுணை புரிந்தார்.  அவர்களுக்கு பிறந்த ஒரே குழந்தை,  குழந்தை பருவத்திலேயே மடிந்துவிட்டது.  தாம் வாழ்ந்த காலத்திலேயே ஜெகதீஷ் பொறுப்பு நிதி (Trust Fund) டிரஸ்ட் பண்டு ஒன்றை ஏற்படுத்தி இருந்தார்.  அதிலிருந்து அவரது நூறாவது பிறந்த நாள் விழாவின் போது கிடைத்த வருமானம் 40 ஆயிரம் ரூபாய்.  இந்த தொகை போஸ் கழகத்தில் ஆராய்ச்சிக்கு ஆதரவாகவும் வெளிநாட்டு உபகாரச் சம்பளத்திற்கானவும்  செலவிடப்படுகிறது.  திருமதி போஸ் 1951 ஏப்ரல் 25 ஆம் தேதி காலமானார்.  அதுவரை இந்த நிதியிலிருந்து அவருக்கு ஆண்டுதோறும் தொகை கிடைத்து வந்தது.  திருமதி போஸ் தமக்கு எஞ்சிய  சொத்துக்களைக் கொண்டு மற்றொரு பொறுப்பை நிதியை அமைத்தார்.  அது 31 லட்சம் ரூபாய்க்கு மேலானது.  அதிலிருந்து கிடைக்கும் வருமானம் பல்வேறு விஞ்ஞான சமூக நடவடிக்கைகளுக்கு செலவிடப்படுகிறது.
 
ஜெகதீஷ் தமது வாழ்க்கையில் ஒரு அரை நெல்லிக்கனியை தன்னல தியாகத்தின் ஒரு சின்னமாக தேர்ந்து எடுத்து இருந்தார்.  மன்னர் அசோகர் தமது சாம்ராஜ்யம் அனைத்தையும் துறந்த பிறகு இந்த அரை நெல்லிக்கனிதான் அவரிடம் இருந்துதாம்.  இந்த எளிய அடையாளத்தை தமது இறுதி பரிசாகப் வழங்கினார். இத்துடன் இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களின் தேசிய வரலாற்று வரிசை நிறைவுப் பெற்றது. இவ்வரலாற்றை எழுதியவர் எஸ்,என்,பாஸ். தமிழாக்கம் ஆர்.எஸ், வெங்கட்ராமன் அவர்கள. 

நன்றி
நேஷனல் புக் டிரஸட் இந்தியா
புதுதில்லி.

JAGADIS CHANDRA BOSE (TAMIL)
DECEMBER 1973 (AGRAHAYAN 1895)

No comments:

Post a Comment