அதிசய விஞ்ஞானி தொழில் மேதை ஜி டி நாயுடு வாழ்க்கை வரலாறு The Amazing Scientist G T Naidu Life History | G T Naidu Adolescence ஜி டி நாயுடு இளமைப் பருவம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

அதிசய விஞ்ஞானி தொழில் மேதை ஜி டி நாயுடு வாழ்க்கை வரலாறு The Amazing Scientist G T Naidu Life History | G T Naidu Adolescence ஜி டி நாயுடு இளமைப் பருவம்

 அதிசய விஞ்ஞானி தொழில் மேதை ஜி டி நாயுடு வாழ்க்கை வரலாறு The Amazing Scientist G T Naidu Life History | G T Naidu Adolescence   ஜி டி நாயுடு இளமைப் பருவம்.



இளமைப் பருவம்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊர்தான் "கலங்கல்" என்பது.  இந்த ஊர்தான் தொழிலியல் விஞ்ஞானி ஜிடி நாயுடுவைத் தந்த பெருமை பெற்ற ஊராகும். 

இந்த விஞ்ஞானிக்கும் இதர விஞ்ஞானிகளுக்கும் வித்தியாசம் உண்டு.  மற்ற விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்தவற்றை இந்த உலகத்திற்கு கொடைகளாக வழங்கி விட்டு மறைந்தார்கள்.  சில விஞ்ஞானிகளின் புகழ் அவர்கள் மறைந்த பின்னர் தான் வெளிப்பட்டு பெருமையுடன் அவரைப் பற்றி கூறி மகிழ்ந்தார்கள். 

ஜிடி நாயுடு போன்ற சிலர் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே தமது கண்டுபிடிப்புகள் நாட்டுக்கு நல்ல பயன்களைத் தர ஆரம்பித்தது கண்டு மகிழ்ந்தார்கள்.  அனுபவித்து மகிழ்ந்தார்கள்.  தனது கண்டுபிடிப்புகளை அவரே இயக்கி மக்களையும் அவற்றின் மூலமாக வாழ வைத்தவர் இந்த விஞ்ஞானி ஆவார்.  அதாவது தாம் கண்டுபிடித்தவற்றின் அடிப்படையில் தொழிற்சாலைகளை நிறுவி அந்த தொழிற்சாலைகளில் பலரையும் அளித்து தொழில்களையும் வளர்த்து வந்தார்.

பிள்ளைப் பருவத்தில் 

துரைசாமி பிறந்த ஒரு ஆண்டிற்குள்ளாக கோபால்சாமி தன்னுடைய வாழ்க்கைத் துணைவியை இழந்துவிட்டார்.  எனவே துரைசாமி இளமைப் பருவத்திலேயே அதாவது ஓர் ஆண்டு நிறைவடையும் முன்னரே தன் தாயைப் பறி கொடுத்து விட்டார்.  குழந்தை துரைசாமி தன்னுடைய தாய் மாமனான ராமசாமி என்பவரின் ஆதரவோடு லட்சுமி நாயக்கன் பாளையம் என்ற ஊரில் துரைசாமி வளர்ந்து வந்தார்.  

தாயில்லாத பிள்ளையாக வளர்ந்து வந்த துரைசாமி அதிக அளவு குறும்புத்தனங்கள் செய்து வந்தார்.  பள்ளியில் மட்டுமன்றி வீட்டிலும், வெளியிலும் இதுபோன்று குறும்புத்தனங்கள் செய்து வந்ததால் கெட்ட பிள்ளை என்ற பெயரைத்தான் எடுத்து வந்தார்.  இது தாய் மாமனுக்கு பெரிய தொல்லையாக போய்விட்டது.  எப்படி துரைசாமி நல்ல பிள்ளையாக ஆக்குவது என்ற கவலைதான் தாய் மாமாவுக்கு.  பள்ளியிலும் தொல்லைதான். வீட்டிலும் வந்தாலும் தொல்லைதான்.  விளையாடப்போனால் அங்கும் குறும்புத்தனங்கள் தான். எனவே தாய்மாமன் ராமசாமிக்கு துரைசாமியால்  பெரிய தலைவலிதான்.

பள்ளிப் படிப்பின் மூன்றாண்டுகள் தான் 

எப்படியோ மூன்றாண்டு காலம் பள்ளிக்கு செய்து வந்த துரைசாமியாக பள்ளியில் உடன் பயின்று வந்த பிள்ளைகளுக்கும் தொல்லை. ஆசிரியருக்கு தீராத தொல்லை தான்.  பள்ளிப் பிள்ளைகள் அனைவரிடமும் தகராறும் குழப்பம்தான். 

மூன்றாம் வகுப்பு வரை படித்து வந்ததால் எப்படியோ தமிழ் மொழியில் கொஞ்சம் எழுதப் பழகிக் கொண்டார். கணக்குப் போடுவதிலும் ஓரளவு அனுபவம் இருந்தது.  வேண்டா வெறுப்பாக படித்து வந்த துரைசாமிக்கு பள்ளி வாழ்க்கை உண்மையில் மிகவும் வெறுப்பாக இருந்தது . ஆம் வேம்பாக கசந்தது. 

மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் ஆசிரியர் பாடல் ஒன்றை மனப்பாடம் செய்து வரும்படி கூறினார்.  மனப்பாடம் மூலம்தான் பிள்ளைகள் பாடல்களை நினைவில் கொள்ள வேண்டும்.  பிற மாணவர்கள் உரத்த குரலில் பாடுவதைக் கேட்டும் பாடல்களை மனப்பாடம் செய்து எப்படியோ பிள்ளைகள் ஒப்பித்து வைத்து விடுவார்கள். ஆனால் துரைசாமிக்கு படிப்பில் சுத்தமாக ஆர்வமே இல்லாமல் இருந்த காரணத்தால் அவர்கள் சொல்வதைக் கேட்டும் பாடம் செய்து கொண்டும் வரவில்லை.  எனவே துரைசாமி மீது ஆத்திரம் கொண்ட ஆசிரியர் துரைசாமியை அடிப்பதற்கு பிரம்பை எடுக்கவும் வகுப்பறையில் உள்ள மணலை வாரி ஆசிரியர் முகத்தில் இறைத்து விட்டுத் துரைசாமி ஓடிவிட்டார்.

திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மணலை விரித்து அதில் தானே உட்கார வேண்டும்.  எனவே,  துரைசாமிக்கு வசதியாகப் போயிற்று.  இவர் என்ன நம்மை அடிப்பது?  நாம் அவருடைய முகத்தில் மண்ணை வாரி இறைத்து விட்டு ஓடிவிடுவோம்.  அதன் பின்னர் அவர் எங்கே நம்மை அடிக்கப் போகிறார் என்ற எண்ணத்தில் துரைசாமி இவ்விதம் செய்து விட்டு ஓடினார்.  

எதிர்பாராத முறையில் துரைசாமி இவ்விதம் செய்யவும் ஆசிரியர் முகத்தை துடைத்து அதன் பின்னர் கண்களை ஊத செய்ததுதான் அவர் தன் நிலைக்கு மீண்டும் வந்தார். 

இனிமேல் துரைசாமி வந்தால் பள்ளியில் அனுமதிக்க கூடாது என்று அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களுடன் கூறினார்.  ஆனால் துரைசாமி அந்த பள்ளியின் பக்கமே செல்லவில்லை.  வீட்டிற்கு சென்றால் எப்படியும் மாமா அறிந்து உதை கொடுப்பார் என்று எண்ணிய துரைசாமி வீட்டின் பக்கமே செல்லவில்லை. 

மாலையில் அந்த ஆசிரியர் துரைசாமியின் மாமாவை சந்தித்து விவரத்தைக் கூறியதும் இவ்விதம் அத்து மீறிய செயலை செய்து துரைசாமியை எவ்விதம் கண்டுபிடிப்பது என்று எண்ணத்தில் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு துரைசாமியைத் தேடி மாமா ராமசாமி புறப்பட்டு சென்றார்.

எப்படியோ துரைசாமியை கண்டுபிடித்த மாமா இராமசாமி,  இனி தன்னுடன் துரைசாமி வைத்து இருந்தால் நம்முடைய பிழைப்பை பார்க்க முடியாது என்று எண்ணியவராய் துரைசாமியை அவருடைய தந்தை அடிமை கொண்டு போய் விட்டு விட்டார். 

அதன் பிறகு என்ன செய்ய முடியும்?

இராமசாமி துரைசாமியை தன்னுடைய அத்தான் கோபால்சாமியிடம் ஒப்படைத்து விட்டதால் அவர் தானே பார்த்து ஆக வேண்டும்.  வேறு வழி இல்லையே.  எப்படியாவது திருத்திவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் விவசாயத்தில் ஈடுபடுத்தினர் எண்ணினார்.

துரைசாமிக்கு திருமணம் 

திருமணம் செய்து வைத்தால் பொறுப்புகள் கூடும்.  வளரும் என்று கூறுவார்கள் அல்லவா?  இதைத்தான் கோபால்சாமி எண்ணினார்.  எனவேதான் கோபால்சாமி தன்னுடைய உறவில் உள்ள செல்லம்மாள் என்ற சிறப்பான குணநலன்கள் உடைய பெண்ணை பார்த்து ஏற்பாடு செய்தார்.  அவரே முன்னின்று எல்லா வேலைகளையும் செய்தார்.  துரைசாமி தாயில்லா பிள்ளை ஆயிற்றே? 

இதையெல்லாம் உணர்ந்து தானோ என்னவோ திருமணத்தை முன்னின்று நடத்த முயன்றார்.  திருமணம் நடக்க இருந்த நேரத்தில் அதாவது தாலி கட்டும் நேரத்தில் மணமகன் காணவில்லை.  மணமகனை காணவில்லையே என்று எண்ணி அவர்களை தேடி அலைந்தார்கள்.  குறும்புக்கார துரைசாமி தன்னுடைய திருமணத்தின் போதும் குறும்புத்தனளைக் காட்டி விட்டார் போலும்.

 மணமகனுடைய நண்பர்கள் தோட்ட வீட்டிற்கு சென்று துரைசாமி கூட்டி வந்து விட்டார்கள்.  மணமேடையில் அமர்த்தி செல்லம்மாள் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டார்கள்.  இளமையில் குறும்பாக இருந்து வந்த துரைசாமி போகப்போகத்தான் தன்னுடைய குறும்புத்தனங்கள் குறைத்துக் கொண்டார். என்பதைவிடவும் குறும்புத் தனகளை விட்டொழித்து உழைக்க ஆரம்பித்தார்.

உலகம் போற்றும் ஒரு ஒப்பற்ற விஞ்ஞானியாக மாறினார்.  இவ்விதம் துரைசாமி சிறந்து விளங்குவதற்கு அவருடைய உழைப்பு தான் காரணமாகும். ஒரு விஞ்ஞானியாக மட்டுமா இருந்து சிறந்து நின்றார்?   மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்ந்து பெருமை பெற்றார்.  அவருடைய சாதனைகள், அவருடைய கண்டுபிடிப்புகள் கொஞ்ச நஞ்சமா? எவ்வளவு போற்றத்தக்கவை. எவ்வளவு போற்றத்தக்கவை. கல்வி பெறாத ஒருவர் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சாதனைகள் பல புரிந்து உள்ளார். அவர் தான் துரைசாமியாகப் பிறந்து ஜிடி நாயுடு என்னும் பெயருடன் புகழ் பெற்ற ஒப்பற்ற விஞ்ஞானி ஆவார்.

அதிசய விஞ்ஞானி தொழில் மேதை ஜி டி நாயுடு வாழ்க்கை வரலாறு The Amazing Scientist G T Naidu Life History | G T Naidu Adolescence   ஜி டி நாயுடு இளமைப் பருவம்.

No comments:

Post a Comment