இந்திய அறிவியலாளர் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களின் சவாலான இளமைப்பருவம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியலாளர் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களின் சவாலான இளமைப்பருவம்

 

இந்திய அறிவியலாளர் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களின் சவாலான இளமைப்பருவம்.



பகவான் சந்தர்


கிழக்கு வங்கத்தின் டாக்கா மாவட்டத்திலுள்ள விக்ரம்பூர் இந்தியாவின் ஒரு பகுதியாக இப்போது இல்லை.  ஆனால் இது வங்க மட்டுமல்லாது இந்தியாவின் பண்பாடு மற்றும் அரசியல் வானில் தம் புகழை நிலை நாட்டிய பல ஆண் பெண் பிறப்பிடமாக திகழ்ந்தது.  பல்லோர் நினைவிலும் இடம்பெற்றுள்ளது.

பண்டைக் காலத்திலிருந்தே இது,  கல்வி பயிற்றும் இடமாக விளங்கியதுடன் பொருள் வளத்திலும் சிறந்துள்ளது.  கலாச்சார உணர்வு கொண்ட மத்திய தர வர்க்கத்தினர் பிரிட்டிஷார் காலத்தில் ஆங்கில கல்வி எளிதாக ஊடுருவி பரவியது.

துவக்க காலத்தில் ஆங்கில கல்வி உருவாக்கிய பகவான் சந்திர போஸின் மூதாதையர் இல்லம் விக்ரம் பூரின் ராரிகால்  கிராமத்தில் இருந்து. பிற்காலத்தில் புகழ்பெற்ற ஒரு மகனின் தந்தையான பகவான் சந்திரபோஸ் அவர்களே ஒரு சாதாரண மனிதர் அல்ல.  மைமென்சிங்கில் முதல் ஆங்கிலப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறிது காலம் வேலை பார்த்துவிட்டு பரித்பூரின்  மாஜிஸ்திரேட்டாக நீதிக்கும் ஊக்கமிகுப் பணிக்கும் நேர்மைக்கும் பெயர் எடுத்தார்.  இந்த பதவியில் அவருக்கு பல விரோதிகளும் கிடைத்தார்கள்.  அவரிடம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் பலர் அவருக்கு விரோதிகளானதில் அதிசயமில்லை.

கொள்ளையர்கள்

அக்காலத்தில் திருடர்களும் கொள்ளையர்களும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தனர்.  அவர்களை பிடிப்பதற்கு பகவான் சந்திரர் அடிக்கடி யானை மீது ஏறிச் செல்வர்.  ஒரு சமயம் ஒரு கூட்டத் தலைவன் அவனுடைய கோட்டையிலேயே தன் கைகளைக் கொண்டே பிடித்துவிட்டார்.  இம்மாதிரி இந்த முரடர்களை பிடித்து கடுங்காவல் தண்டனை விதிப்பதினால் எத்தனையோ அபாயங்கள் நேர்வதுண்டு.  தண்டனை பெற்றவர்கள் சிலர் பழிக்கு பழி வாங்குவதாக சூழுரைப்பார்கள்.  மற்றவர்கள் விடுதலையாகி வந்து அவருடைய அன்புக்கும் கருணைக்கும் பாத்திரமாகி அவருடைய விசுவாசம் உடைய ஆதரவாளர் ஆகிவிடுவார்கள்.

கொள்ளைக்காரன் வேலைக்காரன் ஆனால்

அத்தகையோரில்,  பிரபல கொள்ளைத் தலைவன் ஒருவன் தன் சிறை தண்டனை முடிந்த பின்னர் பகவான் சந்திரனிடம் வந்தார்.  நான் என்ன செய்வது?  எனக்கு கௌரவமான வேலை கிடைக்கவில்லை என்றான்.  உடனே அவர் அவனை தன் வீட்டில் வேலைக்கு வைத்துக் கொண்டுவிட்டார். தனது எஜமானன் வீட்டு குழந்தையை தோளில் சுமந்து பள்ளிக்கு சென்று வரவேண்டும்.  கொலைகாரன் தோளில் சவாரி செய்த சிறுவன் அவனிடமிருந்து வீரதீர சாகசக் கதைகளை கேட்டு வந்தான்.

சிறுவன் வியப்புடன் அலுக்காமல் கேட்க கேட்க தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை கொள்ளைக்காரன் உற்சாகத்துடன் சொல்லி வந்தான். அயர்ந்து உறங்கும் கிராமங்களின் மீது தனது கூட்டத்தினர் எப்படி பாய்வார்கள், தீவட்டிகளுடனும் கோரக்கூச்சல் கூப்பாடுகளுடனும் அவர்கள் எப்படி தாக்குவார்கள்.  சில சமயங்களில் கிராமவாசிகள் எவ்வாறு எதிர்த்து கடுமையாக போராடுவார்கள் என்பதையெல்லாம் முன்னாள் கொள்ளைக்காரன் வர்ணிக்க சிறுவன் மெய்சிலிர்த்துப் போவான்.

தன்னுடைய கதாசிரியரின் உடலில் காணும் ஈட்டி, அம்புக் காயங்கள் சிறுவனின் ஆவலை தூண்டும்.  அந்த சிறுவன் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் இந்திய விஞ்ஞான உலகில் விந்தைகள் பல புரிந்த ஜெகதீஸ் சந்திரர் தான்.

பகவானைக் காப்பாற்றிய கொள்ளைக்காரன்


ஒரு சமயம் பகவான் தமது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு படகில் சென்று கொண்டு இருந்தார்.  அப்போது எதிரே பலபேரை தாங்கிய மற்றொரு படகு வேகமாக வந்து கொண்டிருந்தது.  அது திருடர்கள் படகு என்பது சிறிது நேரத்தில் தெளிவாயிற்று.  அவர்களிடமிருந்து தப்பி செல்ல வழி ஒன்றும் தென்படவில்லை.  ஆனால் பகவான் சந்தர் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் திருடன் திடீரென்று படகின் கூரை மீது தாவினான்.  விசித்திரமான நீண்ட ஒளி  எழுப்பினான். அது கொலைகாரர்களின் சங்கேத மொழி போலம். அவ்வளவுதான்,  எதிரே வந்த படகு திரும்பி எங்கேயோ மறைந்துவிட்டது.  

பழி வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தது.  போஸ் குடும்பத்தின் கூரை வீட்டுக்கு கயவர்கள் சிலர் தீ வைத்து விட்டனர்.  தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துக் கொண்ட குடும்பம்,  வெளியே அலறி அடித்துக் கொண்டு ஓடியது.  பண்டம்பாடிகளை அப்படியே போட்டு விட்டு ஓடியது.  அண்டையில் வசித்து வந்த முஸ்லிம்கள் உதவிக்கு விரைந்து வந்தனர்.  ஜெகதீஷின் மூன்று வயது தங்கை கட்டிலில் அமர்ந்து அமைதியாக தீ  எரிவதை பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளை வெளியே எடுத்து வந்ததும் வீடு தீக்கிரையாகி விழுந்தது.  குதிரைகளும் பசுக்களும் செத்து மடிந்தன.  நகைகளும் நாணயங்களை உருகி கட்டியாகி விட்டது.  வேறு ஒரு நல்ல வீடு கட்டும் வரை பக்கத்து வீடு ஒன்றில் குடும்பம் வசிக்க நேரிட்டது.  பகவான் சந்தரின் போதாத காலத்துக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்தது.

ஏழைப்பங்காளன் 


பகவான் சந்திருக்கு தம் சுற்றுப்புற மக்களையும்,  அவர்தம் வாழ்க்கையையும் மிகவும் பிடிக்கும்.  திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்வதில் அலாதி நாட்டம். தெருக்கூத்து குழுக்களை அமைத்து நாடகமாக செய்வார்.  தாம் செல்லும் இடங்களில் எல்லாம் வழிவழி வந்த கிராம வாழ்க்கை முறைக்கு புத்துயிர் ஊட்ட முயன்றார். 

 தனித்தன்மையான குணமும் இலட்சியப் போக்கும் கொண்ட அவர் தாம் அரிதின் முயன்று ஈட்டிய சம்பாத்தியத்தை பற்பல முயற்சிகளில் மக்கள் நலனுக்காக ஈடுபடுத்தி கடனாளியாகி விட்டார்.  கிராம கடன் சங்கங்கள்,  சிறு தொழில்கள்,  தேயிலை தோட்டங்கள் போன்றவற்றில் அவரது பணம் விரையம் ஆயிற்று.  பம்பாயில் நெசவு கம்பெனி ஒன்றின் டைரக்டர்கள் அவருடைய பணத்துடன் மறைந்துவிட்டனர். 

சுதேசி முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர்கள் இனிய தேசாபிமான வார்த்தைகளைப் பேசி அவரை பணம் போட வைத்து சுருட்டிக் கொண்டு ஓடி விட்டனர்.  கவலைகளும் அளவுக்கு மிஞ்சிய உழைப்பும் பகவான் சந்திரன் சக்தியை உறிஞ்சி விட்டன.  நடுத்தர வயதிலேயே முடக்குவாதம் வந்துவிட்டது.  அவரது கவுரவத்தை மகன் ஜெகதீஷ் எவ்வாறு காப்பாற்றி நிலை நிறுத்தினான் என்பதை பின்னாளில் பார்ப்போம்.

மகன் பிறந்தான் 


1858 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி மைமன்சிங் என்னும் ஊரில் ஜெகதீஷ் பிறந்தான்.  பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை.  ஆனால் மூத்த மகன்.  ஜெகதீஸ்க்கு முன்னர் இன்னொரு மகன் பிறந்த இளம் வயதிலேயே இறந்துவிட்டான்.  ஜெகதீசன் சகோதரிகள் ஐவர் ஆவர்.  

பகவான் சந்தருடைய நண்பர்களும் தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தை பாட மொழியாக கொண்ட அரசு பள்ளிக்கு அனுப்பி வருகையில்,  தமது மகனை,  அவனுடைய ஐந்தாவது வயதில் தாய் மொழி பள்ளிக்கு தான் அனுப்பினார். இந்தப் பள்ளியை பரித்பூரில் சாதாரண மக்களின் குழந்தைகளுக்காக அவர் ஆரம்பித்திருந்தார்.  குழந்தைகள் ஆங்கிலத்தை கற்கும் முன்னர் தாய்மொழியில் கற்க வேண்டும் என்பது பகவான் சந்திரன் கொள்கை. 

அத்துடன் சமூகத்தின் மற்ற நிலைகளில் உள்ள எல்லா குழந்தைகளுடன் சேர்ந்து பழக வேண்டும் என்பது அவரது விருப்பம்.  பிற்காலத்தில் ஜெகதீஷ் தமது இளம் பருவத்தை நினைவு கூறுகையில்,  தமது பள்ளியில் தமக்கு வலது பக்கத்தில் தந்தையின் முஸ்லிம் பணியாளருடைய பிள்ளையும்,  இடது பக்கத்தில் மீனவர் ஒருவருடைய மகனும் அமர்ந்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய வகுப்பு தோழர்கள் இடமிருந்து ஜெகதீஷ் செடி கொடி தாவரங்கள் மிருகங்கள் முதலானவை பற்றிய புது புது விஷயங்கள் எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வது வழக்கமாம்.  பகவான்சந்தரும் பாடம் சொல்லிக் கொடுப்பதில் வல்லவர்.  இரவு உணவுக்குப்பின் ஜெகதீசன் பக்கத்தில் படுத்துக் கொள்வார்.  பையனுக்கு நாள் முழுவதும் தோன்றிய எண்ணற்ற வினாக்களுக்கு விடையளிப்பார்.  விடை தெரியாவிடில் தமது அறியாமையை  தமது மகனிடம் அறியாமையை ஒப்புக்கொண்டு விடுவார்.  பரம்பரை பண்பாட்டையும் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும் நேசிக்கும் குணத்தை ஜெகதீஷ் தனது தந்தையிடமிருந்து பெற்றார்.

இயற்கையில் நாட்டம் 


பரித்பூர்  ஒரு சிறு நகரம்.  பகவான் சந்திரன் பங்களாவை சுற்றிலும் பெரிய தோட்டம் அமைந்திருந்தது.  அந்த வீட்டு அருகே சிற்றோடை ஒன்று சலசலத்து கொண்டு ஓடியது.  மாபெரும் பத்மா நதியில் இருந்து பிரிந்து வந்த ஓடை அது. ஓடையின் மீது ஒரு பாலம்.  அதன் வழியேதான் அவரின்  வீட்டுக்கு பாதை சென்றது.  அந்த நீரோடையும் சிறுபாலம் ஜெகதீசன் மனதில் பசுமையாக பதிந்து மகிழ்வூட்டி வந்தன.  

இதுவே பின்னர் கல்கத்தாவில் கால்வாயை ஒன்றின் வழியாக செய்யும் பொறியியல் சாதனம் ஒன்று சமைப்பதற்கு தூண்டுகோலாக இருந்தது.  அந்தக் கால்வாய் மீதும் ஒரு பாலம் இருந்தது.  இன்னும் பிற்காலத்தில் கல்கத்தாவிலும் டார்ஜிலிங் மேலும் அவர் கட்டிய வீடுகளுக்கு இயற்கை எழில் நிரம்பிய தோட்டங்களை வடிவமைத்த போது பாலம் ஒன்றுக்கடியில் சிற்றோடை ஒன்றையும் சேர்த்தார். நீரோட்டத்தின் அழகை அவர் உள்ளத்தைக் கவர்ந்தது.  அதை ரசித்து மகிழ்ந்து கொண்டார்.  இந்த ஆசை அவரை பெரிய நதிகளின் கரையை நோக்கி ஈர்த்தது.  மனதில்  கவி ரவீந்திரநாத் தாகூரின் படகு வீட்டிலும் விஜ்போரியா, பால்டா,  சந்திரநாகூர் ஆகிய ஊர்களில் கங்கை நதிக் கரையிலும் விடுமுறையை கழிக்க அவர் சென்று விடுவார்.

குதிரை பந்தயத்தில் தோற்ற வீரன் 


சிறுவன் சதீஷ்க்கு பல துறைகளில் ஆர்வம் உண்டு.  எப்போதுமே வேலை வேலை என்று இராமல் விளையாட்டிலும் நல்ல ஈடுபாடு உண்டு.  அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களில் விளையாடுவதற்கு இடம் கிடையாது.  விளையாடுவது காலத்தை வீணாக்குவது ஆகும் என்று கருதப்பட்ட காலம் அது. ஆனால் ஜெகதீசன் அவனது தோழர்களும் ஆசிரியருக்கு கடுக்காய் கொடுத்து விட்டு கிரிக்கெட் விளையாட போய்விடுவார்கள்.  ஐந்து வயதில் ஜெகதீஸ்க்கு ஒரு மட்டக்குதிரை கொடுத்திருந்தார்கள்.  அவன் அதை துணிச்சலுடன் மிக சாமர்த்தியமாக ஓட்டுவான்.  ஒருநாள் பரித்பூர் நகரில் குதிரை பந்தயம் ஒன்று நடந்தது.  குதிரை சவாரியில் தேர்ந்த பலர் கூடினார்கள்.  சிறுவன் ஜெகதீஸ் தனது மட்டக் குதிரையில் பந்தயத்தை பார்க்க வந்தான். 

கூட்டத்தில் சிலர் அவனை கேலி செய்த வண்ணம் அவனையும் பந்தயத்தில் கலந்து கொள்ளுமாறு தூண்டினார்கள்.  சிறுவன் சற்றும் தயங்காமல் கலங்காமல் கோதாவில் இறங்கி விட்டான். அவனது சின்னஞ்சிறு கால்கள் சேணவார்களை  இறுக்கிப் பற்றிக் கொண்டு உடலில் பல இடங்களில் சிராய்ப்பு. எதையும் அலட்சியம் செய்யாமல் உற்சாகத்துடன் முன்னே பாய்ந்து அவன் குதிரை கடைசியாக வந்து நின்றபோது பார்வையாளர்கள் வெற்றி முழக்கம் செய்து அவனை வரவேற்றனர்.  அவன் தன் உடம்பில் காயங்களை பற்றி வாயே திறக்கவில்லை. உடம்பில் ரத்தம் கசிவதை பார்த்தவர்கள் உடனே அவனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்.

கர்ணனின் அபிமானி 


ஜெகதீஸ்க்கு தெருக்கூத்துக்கள் பார்ப்பதில் அளவு கடந்த ஆனந்தம் ஏற்படும்.  நமது இதிகாச புராணங்களிலும் அவற்றின் வீர கதாபாத்திரங்களிலும் ஒரு பற்று வளர்ந்தது.  ராமாயண மகாபாரத கதைகள் படிப்பதில் அவருக்கு அலாதி விருப்பம்.  மகாபாரத வீர பெருமக்களும்,  அவர்களுடைய அமானுஷ்ய செயல்களும் கருணை பண்பும்ம் சிறுவனின் உள்ளத்தைக் கவர்ந்தன. 

கர்ணன் அவன் மனதில் சிறப்பிடத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். பிற்காலத்தில் ஜெகதீஷ் இவ்வாறு சொல்வது வழக்கம்.  ''ராமனும் லட்சுமணனும் மனதை கவரும் குணச்சித்திர பாத்திரங்களில் அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும்,  மிகமிக முழு நிறைவுடவர்களாகவும் இருந்தார்கள். கர்ணன் அப்படி அல்ல. அவன் வாழ்க்கை முழுவதும் தோல்விகளும் ஏமாற்றங்களும் அடைந்தவன். அவன் மன்னனாக வேண்டியவன். 

தன் தியாகங்களாலேயே எல்லாவற்றையும் இழந்தான்.  இவையெல்லாம் எனக்கு உலகில் சாதாரண வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் தாழ்வான எண்ணத்தையே கொடுத்தன.  தோல்வியில் இருந்து தான் உண்மையான வெற்றி தோன்றுகிறது என்ற உண்மையை புலப்படுத்தின.  இது தம் தகப்பனார் தமது நாட்டு மக்களுக்காக செய்த தியாகங்கள் தோல்வியில் முடிந்த நிலையை நினைவு படுத்தி இருக்க வேண்டும்.

பள்ளியில் முதல் நாள் 


ஜெகதீஷ் தலைநகர் கல்கத்தாவுக்கு வந்த போது வயது 11.  வங்காள மறுமலர்ச்சியின் கேந்திரமாக விளங்கிய கல்கத்தா ஜெகதீசன் சாதனைகளுக்கு நிலைக்களனாக பின்னர் பரிணமிக்க இருந்தது.  ஜெகதீஷ் கல்கத்தா வந்தபோது ஆங்கில அறிவு சிறிதும் கிடையாது.  ஹேர் பள்ளியில் மூன்று மாதம் படித்துவிட்டு ஆங்கில பயிற்சிக்கு என புனித சேவியர் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.  அங்கு அப்போது ஐரோப்பிய சிறுவர்களும்,  ஆங்கிலோ-இந்திய சிறுவர்களும் தான் இடம்பெற முடியும். 

முதல் நாளே இந்த நாட்டுப்புற பையன் வகுப்பின் குத்துச்சண்டை வீரன் உடன் மோத வேண்டி வந்தது.  எதிரியோ நல்ல கொழுத்த தடியன்.  ஜெகதீசன் மூக்கை உடைத்து ரத்தம் சொட்ட செய்து விட்டது.  இந்த நிகழ்ச்சியை பிற்காலத்தில் ஜெகதீஸ்வரன் இவ்வாறு சொன்னார்.  ''எனக்கு அப்போது குத்து சண்டை என்றால் எதுவுமே தெரியாது,  இருந்தபோதிலும் சவாலை ஏற்றுக் கொண்டு களத்தில் குதித்து செம்மையாக வாங்கினேன்.  அப்படியும் நான் விடவில்லை எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் ஒரு காரியத்தை கை விடுவதில்லை என்ற உறுதியுடன் முயன்று இறுதியில் வெற்றி பெற்றேன்.  இந்த என் மனப்போக்கும் பிற்காலத்தில் அறிவுப் போட்டிகளில் எனக்கு உதவி செய்தது.''  

No comments:

Post a Comment