இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் குணநலன்கள் மற்றும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெற்ற பட்டங்கள் விவரம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் குணநலன்கள் மற்றும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெற்ற பட்டங்கள் விவரம்

 

இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸின் குணநலன்கள் மற்றும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெற்ற பட்டங்கள் விவரம்



செல்லப்பிராணிகள் 

ஜெகதீஷ் மாணவர்கள் மெஸ் ஒன்றில் வசித்து வந்தான்.  அங்கு கல்லூரி மாணவர்களும் அவனது வயதான உறவினர்களும் வசித்தனர்.  இந்த வாழ்க்கை அவ்வளவு சுவையானதாக இல்லை.  ஆனால் பையனுக்கு சில பொழுது போக்குகள் இருந்தன.  செல்லப்பிராணிகள் வளர்த்ததுடன் பொம்மை ஓடைகளையும் பாலங்களையும் கட்டி பார்த்தான்.  அப்போது பகவான் சந்திர் கட்வாவிற்கும் பர்த்வானுக்கும் உதவி கமிஷனராக இருந்தார்.  ஜெகதீஷ் விடுமுறைக்கு குடும்பத்துடன் தங்குவதற்கு என போய்விடுவான்.  முயல்கள் புறாக்கள் முதலான அவன் செல்லப் பிராணிகளும் அவனுடன் செல்லும்.  ஒரு முறை ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்து இருந்தான்.  அவன் தன் மட்ட குதிரையில் சவாரி செய்வான்.  வளர்ப்பு பிராணிகளுக்கு கூண்டுகள் கட்டிக் கொடுப்பதில் அவனுடைய சகோதரிகளும் ஈடுபடுவார்கள்.  இந்த விடுமுறை நாட்கள் அவனுக்கு மிக மிக மகிழ்ச்சியான நாட்கள் 

பீரங்கி செய்தான்

ஒரு முறை பர்த்துவானில் கடுமையான மலேரியா நோய் பரவியது.  இந்த கொள்ளை நோயை தமக்கே உரிய ஆற்றலுடன் பகவான் சந்தர் கவனிக்கலானார்.  நோய்க்கு பலியான  ஆயிரக்கணக்கான மக்கள் விட்டு சென்ற அனாதைகள் தொழில் செய்து பிழைத்துக் கொள்ள ஒரு வழி செய்தார்.  அவர்களுக்கு தொழிற்பயிற்சி கூடம் ஒன்றை வைத்திருந்தார்.  உலோகப் பட்டரைகளும் வார்ப்படசாலை ஒன்றும் கூட அமைக்கப்பட்டன.  இவற்றை எல்லாம் தமது சொந்த விஸ்தாரமான வீட்டின் பெரும் பகுதியிலேயே அமைத்துக் கொடுத்து விட்டார்.  வேறு தகுந்த கட்டடம் கிடைக்காததே இதற்கு காரணம். 

ஜெகதீஷ்,  பிற்காலத்தில் தமது சொந்த கருவிகளை தயாரித்து கொள்வதற்கு இங்கு முதல் பயிற்சி கிடைத்தது.  தனது தாயார் வசுமதி தேவியிடமிருந்து கெஞ்சி பழைய பித்தளை பாத்திரங்களை வாங்கி சிறு பீரங்கி ஒன்று செய்துவிட்டான்.  இந்த பீரங்கியை அவ்வப்போது சுட்டு பார்ப்பான்.  அது பின்னர் குடும்பத்தில் ஒரு பரம்பரை நினைவுப் பொருளாக விளங்கியது.

கல்லூரி புகுதல் 


உபகாரச் சம்பளத்துடன் 16 வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்ற ஜெகதீஷ் புனித சேவியர் கல்லூரியில் அடியெடுத்து வைத்தான்.  அங்கு பாதரி லா பாண்ட்  புகழ் பெற்ற  பெளதீக ஆசிரியர் அவனுக்கு அறிமுகமானார்.  ஜெகதீஸ் அவரது அன்புமிகு மாணவன்.  ஜெகதீஷ்க்கு  உயிர்வாழ்வனவற்றைப் பற்றி படிக்க வேண்டும் என்பதில் தான் அதிக ஆர்வம் இருந்தது.  ஆனால் அந்த ஆசிரியரின் செல்வாக்கினால் பெளதீகத்தை கற்கலானான்.  இந்த ஆசிரியரிடமிருந்து சோதனை செய்யும் முறை திறனையும் அவன் கற்றுக்கொண்டான்.  இந்தத் திறனை பிற்காலத்தில் பரிசோதனைகளை செய்து காட்டி பல மக்களை கவர்வதற்கு உதவியாக இருந்தது.  

கல்லூரி நாட்களிலும் ஜெகதீஸ்க்கு வெளிப்புற வாழ்க்கையில் நாட்டம் குறையவில்லை.  திமிரி ஓடும் குதிரைகளிலும் சவாரி செய்வான்.  அவனைப் பல தடவை கீழே தள்ளி இருக்கின்றன.  19 வயதில் காட்டு விலங்குகள் உடன் முதல் அனுபவம் ஜெகதீஸ்வரி ஏற்பட்டது.  இமயமலை அடிவாரத்தில் ஒரு மாதம் தங்கியபோது தராய் காடுகளில் புலிகள்,  யானைகள்,  எருமைகள் சுற்றி திரிவதை அவன் கண்டான்.  ராஜபுத்திர சிப்பாய் ஒருவன் இருந்தான் அவன் துப்பாக்கி சுடுவதற்கு கற்றுக் கொடுத்தான்.

இந்த காட்டு வாழ்க்கையிலும் வேட்டையிலும் ஜெகதீஷ் கொண்ட ஈடுபாடு ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒரு வேதனை தரும் அனுபவத்தில் கொண்டு விட்டது.  அது அவனுடைய வாழ்வின் போக்கை ஒரு விதத்தில் மாற்றி விட்டது.  அசாமில் விடுமுறையை கழிப்பதற்காக ஒரு நண்பன் ஜெகதீஸை அழைத்திருந்தான்.  அவன் ஒரு நிலச்சுவான்தார் மகன்.  காட்டெருமைகள் காண்டா மிருகங்களும் நிறைந்த காட்டில் வேட்டையாட லாம் என்று நண்பன் அழைத்தான்.  அந்த இடத்துக்கு மிக அருகாமையில் இருந்த ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 21 மையில்.  ஜெகதீஷ் இரவில் பல்லக்கில் அந்த இடத்துக்கு போக வேண்டியிருந்தது.  மறுநாள் முழுவதும் வேட்டையாடிய ஜகதீஷ்சுக்கு மாலையில் கடும் காய்ச்சல் வந்து விட்டது. அவன் நிலைமை மோசம் அடைவதற்கு முன்னால் கல்கத்தா திரும்புவதுதான் சரி எனப்பட்டது. 

அப்போது பல்லக்கு ஏதும் கிடைக்கவில்லை.  அதனால் குதிரையில் தான் போக வேண்டியிருந்தது. ஆனால் ஒரே ஒரு குதிரைதான் கிடைத்தது.  ஜெகதீஷ் க்கு முன்னால் சவாரி செய்த ஒருவரை அது யமப்பட்டணத்துக்கு அனுப்பாத தோஷம்தான்.  வேறு வழியில்லாமல் ஜெகதீஷ் அக்குதிரை மீது ஏறினான். அவன் ஏறினது தான் தாமதம் நாலுகால் பாய்ச்சலில் பிடித்துக் கொண்டு புறப்பட்டது அந்த குதிரை.  தனது நண்பனிடம் கூட சொல்லிக் கொள்ளக் கூட விடவில்லை . வழியில் ஆட்டம் கண்ட மூங்கில் பாலம் ஒன்றை கடக்க வேண்டியதாயிருந்தது குதிரை.  பறந்த வேகத்தில் அந்த பாலம் இடிந்து விழாத குறைதான்.  களைத்துப்போன குதிரை எஞ்சிய ஏழு  மையில்களை சற்று அமைதியாக நடந்தது.  எனினும் ஜெகதீஷ் ரயில் ஏறிய போது சிறிதும் தெம்பில்லாமல் சோர்ந்து இருந்தான்.  குவினைன் மாத்திரைகள் உட்பட எந்த வைத்தியத்துக்கும் ஜூரம் மசியவில்லை.  ஒரு ஆண்டு படிப்பு வீணாக போய் விட்டது. பிறகு 1880 பி ஏ  தேர்விலும் அவ்வளவு சிறப்பாக வர இயலவில்லை.

எண்ணமும் நடப்பும் 


அக்காலத்தில் இளைஞர்களின் இறுதி லட்சியம் ஐசிஎஸ் தேர்வு க்கு போய் வெற்றி பெறுவதுதான்.  அதுபோல பட்டதாரி ஜெகதீசன் இங்கிலாந்து சென்று இந்திய சிவில் சர்வீஸுக்கு தகுதி பெற விரும்பினான்.  அவரது குடும்ப வாழ்வு முறையும் அவரது சிந்தனை ஓட்டத்திற்கு உருக்கொடுத்தது.  

1880ல் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது.  உதவி நிலையங்கள் பலவற்றை அரசு திறந்தது.  ஆனால் எல்லா இடங்களிலும் மக்கள் மடிந்து கொண்டிருந்தனர். பகவானுக்கு மூச்சுவிட நேரமில்லை. காலை முதல் இரவு வரை குதிரை பயணம்தான். உணவுக்கு கையிலும் கையில் அவலும் பொரி கடலை மாவும் தான்.  எத்தனையோ மக்கள் உணவின்றி செத்து மடியும் போது தான் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிடுவது சரியாக படவில்லை அவருக்கு.  இந்த அரைகுறை சாப்பாடும் அளவுக்கு மீறிய வேலையும் அவரது உடல் நலத்தைப் பாழ்படுத்தி விட்டன.  குறைந்த சம்பளத்தில் இரண்டு வருடம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.  இதற்குள் அவர் தமது சேமிப்புகளை எல்லாம் உதவி முயற்சிகளில் செலவிட்டதோடு கடன் வேறுபட்டு இருந்தார்.  இந்த நிலையை கண்ட ஜகதீஷ் தாம் மாஜிஸ்திரேட் ஆகிவிட்டால் தந்தைக்கு உதவி செய்ய போதிய பணம் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தார்.

ஆனால் பகவான் சந்தர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.  ஜெகதீஸ் வெளிநாடு போவதை அவர் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ஐசிஎஸ்,  வக்கீல் படிப்பு இரண்டையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.  மக்களின் நலன்களுக்கு அவை வெகு தொலைவில் இருப்பதாக அவர் கருதினார்.  தம்மைப் போல் ஒரு அதிகார வர்க்க நிர்வாகியாக தமது மகன் வருவதை அவர் விரும்பவில்லை. அதற்கு பதிலாக அவர் தனது விஞ்ஞான அறிவை விவசாய நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் என யோசனை கூறினார்.  

இதற்குப் பணத்துக்கு எங்கே போவது?  ஜெகதீஷ் தமது தாயாரின் உணர்ச்சிகளை பற்றி வேறு யோசித்தார்.  அவருடைய ஒரே தம்பி பத்து வயதில் இறந்து விட்டான்.  இதனால் ஜெகதீஷ்,  தாய்க்கு ஒரே ஒரு அருமை பிள்ளை ஆகிவிட்டார்.  அவர் கடல் கடந்து தொலைதூர பிரதேசத்திற்கு செல்வதை அவள் விரும்பவில்லை.  வெளிநாடு செல்லும் யோசனையை கைவிட வேண்டியதாயிற்று.  தமது தாய் நாட்டிலேயே தமது வாழ்வை உருவாக்கிக்கொள்வதென ஜெகதீஷ் முடிவு செய்தார்.  ஆனால் எண்ணியபடி எதுதான் நடக்கிறது?  நிகழ்ச்சிகள் திடீர் என்று திசை திரும்பின.

தாயின் பரிவு 


ஓர் இரவு,  அவரது தாயார் அவரிடம் வந்தாள்.  ஜெகதீஷ் நீ இளைஞன்,  கெட்டிக்காரன்.  என் தாய் பாசத்தினால் உன் வருங்காலத்தை நான் கெடுக்க கூடாது.  நீ ஏதோ படிக்க விரும்புகிறாய்.  அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. உன் இருந்தாலும் ஆசையை நிறைவேற்ற உதவி செய்கிறேன்.  என்னிடம் கொஞ்சம் பணமும் நகையும் இருக்கின்றன என்று பணிவோடு கூறினாள்.  ஆனால் அதற்குள் பகவான் சந்திரன் உடல்நலம் தேறி பாட்னாவில் வேலையில் திரும்ப சேர்ந்துவிட்டார்.  தாயின் சொத்தில் கை வைக்காமலேயே ஜெகதீஷ் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். 

வைத்தியம் படிக்கும் அவருக்கு அவரது விருப்பத்தை தந்தை ஆமோதித்தார். விஞ்ஞானத்தை ஒரு தொழிலாக கொள்வது அக்காலத்தில் உயர்வாக கருதப்படவில்லை.  இந்த சமயத்தில் புனித சேவியர் கல்லூரியின் ரெக்டார் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி இருந்தார்.  இது அவரது மரணத்துக்குப் பிறகு வெகு நாட்கள் கழித்து அவரது கட்டுரைகள் இடையே கிடைத்தது.  தமது நற்சான்றிதழில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.  "கல்லூரியில் படிக்கும்போது ஜெகதீஷ் விஞ்ஞானத்திலும் கணிதத்தில் சிறந்து விளங்கினான்"  "அதேசமயம் சமஸ்கிருதத்திலும் லத்தின் மொழியிலும்  நல்ல அறிவு பெற்றிருந்தார் அவனது ஒழுக்க சிறப்பு பிறருக்கு உதாரணமானது."

இங்கிலாந்து பயணம் 


ஜெகதீஸ் 1880இல் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.  லண்டனில் மருத்துவப் படிப்பை துவக்கினார்.  விலங்கியல்,  தாவரவியல், உடற்கூறு ஆகிய பாடங்களும்,  பௌதீகம் ரசாயனம் படிக்க வேண்டி இருந்தது.  அவரது கடல் பயணத்தினால் மீண்டும் காய்ச்சல் வந்து பிடித்துக் கொண்டது.  இங்கிலாந்தில் தங்கியிருக்கையில் அது அவரை விடவில்லை.  "காலா அஸார்"  என்று இப்போது அந்த நோய்க்குப் பெயர்.  உடற்கூறு ஆசிரியரின் ஆலோசனையை செவிமடுத்து ஜெகதீஷ் மருத்துவப் படிப்பை கைவிட்டார்.  அதற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டதால் உடல்நிலை இடம் கொடுக்க வில்லை.  1881இல் ஜனவரி மாதம் கேம்பிரிட்ஜ் கிரைஸ்ட் கல்லூரியில் சேர்ந்தார்.  அங்கு விஞ்ஞானம் படிக்க உபகார சம்பளம் கிடைத்தது. 

கேம்பிரிட்ஜில் வாழ்க்கை சற்று சௌகரியமாக இருந்தது.  மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தினார்.  படகு ஓட்டுதல் ஈடுபட்டார்.  எனினும் இரண்டாவது ஆண்டு வரை அவர் உடல்நிலை தேறவில்லை.  கேம்பிரிட்ஜில் அவர் முதலில் பழகிய நண்பர்களை கைவிடுமாறு போஸுக்கு அவரது ஆசிரியர் ஆலோசனை கூறினார்.  பிறகு கூச்சமும் தனிமையும் நிறைந்த சில நாட்களுக்குப் பின்னர் உடல்நிலை தேறியது கல்லூரி வாழ்க்கையும் நண்பர்கள் உறவும் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கத் தொடங்கின இயற்கை விஞ்ஞான குழு ஒன்று அங்கு இருந்தது விரிவுரைகள் விவாதங்கள் ஆகியவற்றுடன் கழிப்போம் தோழமையும் அங்கு நிலவிய ஜெகதீஷ் தமது முதல் கோடை விடுமுறையை கழித்து ஒருநாள் படகு ஓட்டி செல்லும் செல்லுகையில் 3 மணி நேரம் மழையிலும் காற்றிலும் அகப்பட்டுக் கொண்டார் அடுத்து கொடைக்கு ஒரு சிறு கோஷ்டியுடன் மலைப் பகுதிகளில் சுற்றி சென்றார்

அக்காலத்தில் சிறந்து விளங்கிய அறிவாளிகளில் சிலர் அவரது ஆசிரியர்களாக இருந்தனர்.  மைக்கேல் பாஸ்டர் (உடலியல்),  பிரான்சிஸ் பால் (கருவியல்) டார்வின் (தாவர உடலியல்) அவர்களில் சிலர் ஆவர். இவர்களை விட சிறப்பானவர் ரேபிக் பிரபு. (Lord Raybigh)  (பெளதீகம்)  கடைசி இரண்டு பேரும் குறிப்பாக பாதிரியார் லாஃபான்டைப் போல ஜெகதீசன் வாழ்வை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தனர்.  அவர்கள் பிற்காலத்தில் அவரது ஆராய்ச்சிப் பணிகளில் ஊக்குவித்தனர்.  இங்கிலாந்துக்கு தமது முடிவுகளை எடுத்து விளக்க சென்றபோது அவரது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். போஸ் 1884 இல் கேம்பிரிட்ஜில் இயற்கை விஞ்ஞான ட்ரிபோஸ் (Tripos) பட்டத்தை பெற்றார்.  ட்ரிபோஸ் (Tripos) என்பதே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் ஒரு புகழ் தரும் தேர்வு.  இத்தேர்வில் பௌதீகம் ரசாயனம் தாவர இயல் மூன்றும் அவரது பாடங்கள்.  லண்டன் பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி பட்டம் ஒன்றையும் அதேசமயம் பெற்றார். இதற்கு அவருக்கு மேலும் முயற்சி எடுக்க வேண்டிய தேவைப்படவில்லை.

No comments:

Post a Comment