இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ அவர்களின் மின் அலைகளும் கம்பியில்லா தந்தியும் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ அவர்களின் மின் அலைகளும் கம்பியில்லா தந்தியும்

 இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ அவர்களின் மின் அலைகளும் கம்பியில்லா தந்தியும்


இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ அவர்களின் மின் அலைகளும் கம்பியில்லா தந்தியும். 

Add caption



போஸின் புதிய கருவி


புதிய கருவி 36வது பிறந்த நாள் உறுதியை செயல்படுத்த ஆராய்ச்சி தொடங்கியபோது ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்லும்படியாக போஸிடம் ஒன்றுமில்லை.  ஆனால் மூன்று மாதங்களுக்குள் புதிய கருவி ஒன்றை உருவாக்கி மின் கதிரியக்கம் பற்றிய முதல் ஆய்வு நடத்தினார்.  ஒரு வருட காலத்திற்குள் அவரது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் பொறுப்பை பிரிட்டனின் தலையாய விஞ்ஞானகழகமான  ராயல் சொசைட்டி ஏற்றுக்கொண்டது.  ஆராய்ச்சி மையம் ஒன்றை வழங்கியது.  சங்கத்தின் கூட்டு செயலாளர் ராலி பிரபுவின் (Lord Rayleigh)  சிபாரிசின் பேரில் அது அவ்வாறு செய்தது.  


1896 இல் லண்டன் பல்கலைக்கழகம் தேர்வுக்கு ஆகாமலேயே அவர் சமர்ப்பித்த ஆய்வுரை ஒன்றுக்கு பிஎஸ்சி பட்டத்தை வழங்கியது. டிஃப்ராக்ஸன் கிரேடிங்கை கொண்டு  மின்கதிர்களின் அலைநீள நிர்ணயம் பற்றிய கட்டுரை அது. போஸின் ஆய்வு பணி தம்மை பெரும் வியப்பில் ஆழ்த்தியதாக கெல்வின் பிரபு (Lord Kelvin) எழுதினார்.  பிரென்ச் விஞ்ஞானக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் பாராட்டு எழுதுகையில் உங்கள் ஆய்வுக் கருவியை நீங்கள் உருவாக்கி இருக்கும் சமநிலை பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.

தாய்நாட்டில் எதிர்ப்பு 


உள்நாட்டில் நிலைமை வேறாக இருந்தது.  அவரது நண்பர்களான கல்வித்துறை டைரக்டரும் கல்லூரி முதல்வரும் ஓய்வுபெற இருந்தனர்.  அவருடைய வெற்றிகளைக் கண்டு கல்வி இலாகாவில் பொறாமையும் புகைச்சலும் மண்டிக்கிடந்தன. பேராசிரியர் ஒருவரது முழுநேர கடமை பாடம் சொல்லிக் கொடுப்பதே.  ஆராய்ச்சி வேலை இந்த பணிக்கு இடையூறாக இருக்குமென்று வாதிக்கப்பட்டது. உண்மையில் போஸ் தமது சகாக்களை விட விரிவுரைகளும் செய்முறை சோதனைகளுக்கும் அதிக நேரத்தை செலவிட்டார்.  தமது அன்றாட நீண்ட கடமைகளை முடித்த பிறகுதான் அவர் சொந்த ஆராய்ச்சி வேலையில் ஈடுபடுவார்.  ஆராய்ச்சிக்கு மானியம் ஏதும் இல்லாமல் சொந்த பணத்தை தான் செலவிட்டார்.  அவருக்கு அது கட்டுபடி ஆகவில்லை. படிக்காத தகர வேலைக்காரன் ஒருவனைக் கொண்டு தமக்குத் தேவைப்படும் கருவிகளை செய்து வந்தார். 20 சதுர  அறையை தனக்கென வைத்துக் கொண்டிருந்தார்.  ஆய்வாளர்கள் தொல்லை தரும் இடர்பாடற்று வேலை செய்வதற்கு ஏற்ற தனி விஞ்ஞானக் கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார்.

ஆராய்ச்சிகளின் முதல் கட்டம் 


முந்திய நூற்றாண்டு முடிவு வரை போஸ் செய்த ஆராய்ச்சிகளின் முதல் கட்டத்தை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.  

வானொலியும் தொலைக்காட்சியும் பிரபலமாகி விட்ட இந்நாட்களில் மின்காந்த அலைகள் அல்லது கதிர்வீச்சு பற்றி படித்தவர் ஒவ்வொருவரும் கேள்விப் பட்டிருப்பார்கள்.  கடந்த நூற்றாண்டின் மத்தியில் அது ஒரு புதுமையாக இருந்தது.  புகழ்பெற்ற பிரிட்டீஷ் விஞ்ஞானி கிளார்க் மாக்ஸ்வெல் புதுமையை விளக்க முயன்றார்.  விண்வெளி எங்கும் பரவியிருக்கும் ஈதரில் ஏற்படும் அதிர்வுகளை ஒளி அலைகள் என்று அப்போது கருதப்பட்டது.  ஒலியின் மின்காந்த கொள்கையை விளக்குகையில் ஈதரில் விரைவாக எதிர்ப்படும் மாற்றங்களின் விளைவே ஒலி அலைகள் என்று எடுத்துரைத்தார். மின்காந்த அலைகள் அனைத்தும் இயற்கையில் ஒரே மாதிரியானவை என்று கணித ரீதியாக ஒரு கொள்கையை வெளியிட்டார்.  இதனால் மின் குழப்பத்தினால் தோன்றும் அலைகள் ஒளியின் குணங்களான பிரதிபலிப்பு,  துருவ காரணம் ஆகிய அனைத்தையும் கொண்டிருக்கும் என்று கூறினார்.

உணர்கருவி


1887 இல் ஜெர்மனியை சேர்ந்த ஹைன்றிக் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) மின்சார அலைகள் இந்த ஒலி இயல் குணங்களை கண்டுபிடித்து பொதுப்படையாக நிலைநாட்டியவர் ஓரளவிற்கு உறுதிப்படுத்தினார்.  பிற்காலத்தில் எக்ஸ் கதிர்கள் எவ்வாறு அற்புதம் ஆயிற்றோ அது போலச் அக்காலத்தில் ஹெர்ட்ஸினால் அற்புதம் என கருதப்பட்டது.  ஆனால் அவரால் தயாரிக்க முடிந்த மிகக் குறுகிய அலைநீளம் 660 மில்லி மீட்டர் தான். இதற்கு மிகப்பெரிய கருவி தேவைப்பட்டது. அதுவும் தவிர அவரது ரிஸீவர் அல்லது கண்டுபிடிக்கும் கருவி (Coherer) என்ற உணர்வு கருவி அவ்வளவு ஈர்ப்பு சக்தி உடையதாக இல்லை.  அதை உற்பத்தி இடத்துக்கு வெகு அருகில் வைக்க வேண்டியிருந்தது  அதனால் சோதனைகள் முழு திருப்தி அளிப்பதாக இல்லை.

ரிஸீவர்கள்


இங்குதான் இந்திய விஞ்ஞானி குறுக்கிட்டு அந்த கருவியை திருத்தி அமைத்தார்.  முதலில் போஸ் கதிர்வீச்சு கருவியில் பிளாட்டினம் பூசிய தகட்டை பயன்படுத்தியதால் தூசு அதைச் சீர் குலைக்கவில்லை.  கதிர்வீச்சின் சக்தியை புதிய வடிவமைப்பு ஒன்று அதிகரிக்கும் உணர்கருவி ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் மார்கோனி,  லாட்ஜ் ஆகியோர் தமது செய்திகளை அனுப்புவதற்கு 100 மீட்டர் அலைவரிசைகளை சோதித்து கொண்டிருந்தனர். லாட்ஜ் மார்கோனி ஆகிய இருவரது உணர் கருவிகள் கொண்டு இரண்டு உலக மக்களிடையே தொட்டும் தொடாமலும் வைக்கப்பட்டிருந்தன.  இந்த சீரற்ற நிலைகளை போஸ் மாற்றிவிட்டு மெல்லிய கம்பிகளைப் பொருத்தி அதிக உணர்வுடைய கருவியை அமைத்தார்.  வேறுவிதமான ரிஸிவர்களையும் கண்டுபிடித்தார். அவற்றில் பிரதான உறுப்பு இயக்கி பொருள் இதனால் முந்திய உணர்வுகளின் கருவிகளை போல இதற்கு உயர்வில்லையே நிலையை ஊட்டுவதற்கு அதை அவ்வப்போது தட்ட வேண்டியிருக்கவில்லை.  பொருள் பின்னால் கிறிஸ்டல் ரேடியோ செட்டுகளின் ஒரு உறுப்பாகி உருவாகி விட்டது போல் 5 மில்லி மீட்டர் வரைக்குமான சிறிய அறைகளை தயாரிப்பதில் வெற்றிகண்டனர்.  கையடக்கமான சிறு கருவி ஒன்றை உருவாக்க முடிந்தது. அதை செய்முறை சோதனைகளுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. 

மின் அலைகள் ஒளியின் குணங்களையே கொண்டிருக்கின்றன என்பதை காட்டுவதற்கு மின் உற்பத்திக் கருவியின் முன்னால் குழல் ஒன்றிணைத்தார்.  தமது உணர் கருவியை நேராக அதன் முன்புறமாக வைத்தார்.  மின் அலைகள் உற்பத்தி ஆனவுடன் உணர்கருவி அசைந்தது.  ஆனால் உணர்கருவி அப்பால் நகர்த்திய போது அது அசையவில்லை. ஒலி அலைகளைப் போல் இந்த அலைகளும் நேர்கோட்டில் செல்கின்றன என்பதை இந்த சோதனை காட்டியது. ஒளியை கண்ணாடி ஒன்று பிரதிபலிக்கிறது.  ஒழிப்புக்கு சாதனம் ஒன்றின் வழியே செல்லும்போது ஒலிக்கின்றன . விலகுகின்றன.  இதே காரியங்களை மின் அலைகள் செய்வதையும் ஜெகதீஷ் காட்டினார்.  ஆனால் இதில் முக்கியமான வேறுபாடுகள் இருந்தன.  தண்ணீரில் ஒளி புக முடியும்.  ஆனால் மின்னலைகள் தண்ணீரில் ஊடுருவ முடியவில்லை. ஆனால் மின்னலைகள் செங்கற்கள், தார்  முதலியவற்றில் சுலபமாக பயந்தன.  ஒளி நீரில் பாயும்போது வளைந்தும் விலகியும் சென்றது போல மின்சார அலைகள் செங்கல் வழியாய் வளைந்தும் விலகியும் சென்றன.

போஸின் அடுத்த சோதனை விஞ்ஞான உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது சாதாரண ஒளி அலைகள் எல்லா திசைகளிலும் கண்டபடி பயணம் செய்யும் ஆனால் டூர்மலைன் (Tourmaline)  போன்ற சில படிகள் வழியே பாய்ச்சும்போது ஒரே திசையில் அல்லது ஒரு முறை பட்டு செல்லும் மற்றொரு படிக்க வைத்தால் ஒளி முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.  இந்தப் படிகங்கள் செய்யும் வேலையை பருமனான புத்தகம் அல்லது சணல் நூற்பாட்டை மின்சார அலைகளுக்கு செய்கிறது என்பதை போஸ் காட்டினார். இந்த குறுகிய நிலையில் பிரதிபலிப்பு விலக காரணம் ஆற்றல் ஆகியவற்றை குணங்களைக் கொண்டவை என்பதை போஸ் காட்டினார் என்று பிரபல அமெரிக்க நிபுணர் ஒருவர் பிற்காலத்தில் ஒரு விமர்சனத்தில் குறிப்பிட்டார்.  ராயல் கழகத்துக்கு அனுப்பிய ஆய்வுரை தொகுப்பின் வாயிலாக இந்த கண்டுபிடிப்புகள் தற்கால விஞ்ஞானத்தில் குடி புகுந்தன.

இத்துறையில் ஜெகதீசன் ஆராய்ச்சிகள் ஹெர்ட்ஸ் அலைகளின் இயல்பு பற்றிய கோட்பாடு ஆய்வு மட்டுமல்ல மகத்தான பயன்முறை வாய்ப்புகளையும் கொண்டவை.  இந்த சாத்தியக்கூறுகளை தாமதமின்றி எடுத்துக்காட்டாக இயல்பான ரசனையுடன் செய்முறை சோதனைகளை செய்து காட்டினார். மின்சார அலைகள் தொலைவிலுள்ள உணர்கருவியின்  ஊசியைத் திருப்ப இயலுமானால் மணி அடித்தல் அல்லது வெடிமருந்தை பற்ற வைத்தல் போன்ற காரியங்களையும் செய்ய முடியும்.  அவை செங்கல் வழியே பாயுமானால் சுவர்களையும் ஊடுருவி செல்ல முடியவேண்டும். 

1895 ஆம் ஆண்டு துவக்கத்தில் மாநிலக் கல்லூரியில் ஒரு பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அப்போது கல்லூரியில் பணியாற்றிய ஆச்சாரியா பிரபுல்லா சந்திர ராய் அறையில் மின் உற்பத்தி இயந்திரம் வைக்கப்பட்டது.  அந்த மூடிய அறையை பாதிரியார் காத்து கொண்டு நின்றார்.  விடுவிக்கப்பட்ட மின் அலைகள்,  மற்றொரு பேராசிரியரின் பக்கத்து அறையில் உடனே ஒரு கைத்துப்பாக்கியை கடந்து சுட வைத்தன.  இப்படியாக கம்பியில்லாமல் ஒரு சமிக்கை அனுப்பப்பட்டது.

ஏரியல் (Aerial)


இன்னுமொரு பரபரப்பூட்டும் பரிசோதனை ஒன்று நகர மண்டபத்தில் நடந்தது. வங்காள கவர்னர் லெப்டினன்ட் கவர்னர் சர் அலெக்சாண்டர் மக்கள் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.  மின்னலைகள் உரையாற்றும் மண்டபத்தில் இருந்து 75 அடி தள்ளி இருந்து மூன்றாவது அறை  3 உறுதியான சுவர்களையும் சுவரின் பெரு உடலையும் கடந்து பாய்ந்தன.  மறுமுனையில் இரும்பு குண்டு ஒன்று எரியவும் கைத்துப்பாக்கி ஒன்றை வெடிக்க வைக்கும் சிறிய அளவு வெடிமருந்தை பற்றவைக்கும் தேவையான ஆற்றலை அவை விடுவித்தன. போஸ் தமது கருவியுடன் உலாக வட்டொன்று இணைக்கப்பட்ட கொடுத்திருந்தார்.  இதுதான் அவரது முதல் ஏரியல் (Aerial)  பின்னால் வந்த உயிர்சக்தி ஏரிகளுக்கு ஒரு எளிய வடிவம் என்று இதைச் சொல்லலாம்.  இந்த பரிசோதனை யை பார்த்து லெப்ட் தே ( சில நூலாசிரியர்கள் இந்த ஆண்டு ஆயிரத்து 806 96 என்று குறிப்பிட்டுள்ளனர் ஆனால் போஸ் அவர்களே ஒரு வங்கமொழி கட்டுரையில் 1895 என்று குறிப்பிட்டுள்ளார் அது போன்ற மாநில கல்லூரி சோதனை ஓராண்டு முன்னதாக நடந்திருக்கலாம்) கவர்னர் போஸுக்கு ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கி உதவினார்.  

ஜெகதீஸ் இன்னும் மேலான செய்முறைக்கு பாடுபட்டார்.  20 அடி உயர ஏரியலை அமைத்து ஒரு மைலுக்கு அப்பாலிருந்த தமது வீட்டுக்கு சமிக்கைகளை அனுப்ப திட்டமிட்டார். ஆனால் அவர் இதை செய்து பார்ப்பதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு புறப்பட வேண்டியதாயிற்று. 

டி சி எஸ் பட்டம்


லண்டன் பல்கலைக்கழகம் வழங்கிய டி ஸி எஸ் பட்டம் உள்பட போஸுக்கு கிடைத்த பெயரையும் புகழையும் கண்ட லெப்டினன்ட் கவர்னர் அவருக்கு புதியதொரு பதவியை உண்டாக்கினார். கூடுதல் சம்பளம் அதிக பொறுப்புகள் ஆராய்ச்சிக்கு நியாயமான அவகாசம் ஆகியவற்றை புதிய பதவி அளித்து அரசு கல்லூரிகளில் விஞ்ஞான சோதனைக் கூடங்களை தக்கபடி உருவாக்குதலும் சுயமான ஆராய்ச்சிக்கு மேல்படிப்பு மாணவர்களை பயிற்றுவிப்பது அவரது வேலை அரசு உத்தரவு கடிதம் விரைவிலேயே கிடைக்கும் என்றும் கூறினார்கள் ஆனால் சில நாட்களில் நிலைமை வேறுவிதமாக திரும்பியது. 

போஸ் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரசு நியமித்த உறுப்பினர் ஆவார்.  ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மற்ற அரசு உறுப்பினர்களுக்கு எதிராக ஓட்டு அளித்தார்.  இதனால் அவரது பதவி போனது.  அவரது புதிய பதவி நியமனம் உடனே ரத்து செய்யப்பட்டது.  அடுத்து நடந்த கூட்டத்திற்கு அவர் வராததற்கு காரணம் கேட்டு கடிதம் வந்தது.  பல்கலைக்கழகத்துக்கு உறுப்பினராக இருப்பதால் அதிகாரபூர்வமான நிலை எவ்வாறாக இருந்தாலும் தமது சுய கருத்துரிமை செலுத்த முடியாது என்று அர்த்தம்.  ஆனால் தம்மை அந்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவே விரும்புவதாக போஸ் பதில் அளித்துவிட்டார்.  லெப்டினன்ட் கவர்னர் போஸின் இந்த நிலையை பாராட்டினார்.  ஆனால் கல்வித்துறையின் விருப்பத்திற்கு எதிராக அவரை பதவி புதிய பதவியில் நியமிக்க இயலாது என கருதினார்.  ஆனால் போஸ் தனது ஆராய்ச்சிக்கு சொந்தமாக செலவிட்ட தொகையை வழங்க அரசு கவர்னரின் யோசனையின் பேரில் முன்வந்தது.  அதை நன்றியுடன் மறுத்துவிட்டார் பிறகு அரசு அவருக்கு ஆண்டுதோறும் ஆராய்ச்சி மானியமாக 2500 ரூபாய் வழங்கியது.

ஐரோப்பியப் பயணம் 


போஸ் நீண்ட நாள் பயணமாக ஐரோப்பா செல்ல விரும்பினார்.  மிதமிஞ்சிய வேலைப்பளுவினால் ஏற்படும் சிரமத்தை தணித்துக் கொள்ளவும் மற்ற விஞ்ஞானிகளையும் அவர்களது பணியையும் பரிச்சயம் செய்து கொண்டு தமது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் விரும்பினார்.  இது மிகவும் நல்ல யோசனை என்று அச்சமயம் அவரது ஆய்வுக் கூடத்துக்கு வந்த ராலி பிரபு கருதினார்.  கல்வி நோக்கத்துக்காக மட்டும் அவரை அடைத்து வைத்த பிரிட்டிஷ் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று லெப்டினன்ட் கவர்னர் கூறினார்.  பிறகு தமது சொந்த பொறுப்பிலேயே அவரை ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவது என முடிவு செய்தார். 

1806 - 97 ம் ஆண்டு இந்த சுற்றுப்பயணத்தில் போஸ் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் அழைப்பின் பேரில் சென்று செய்முறையுடன் உரை நிகழ்த்தினார்.  எல்லா இடங்களிலும் சக விஞ்ஞானிகள் அவரது கருவியின் கையடக்க அமைப்பைப் புகழ்ந்தனர்.  பல புதிய அம்சங்களை அது கொண்டிருந்தது.  அவர் பெருமளவில் தயாரித்துக் கொடுத்த பரிசோதனை புள்ளிவிவரங்கள் அனைவரையும் கவர்ந்தது.  லிவர்பூலின் சங்க கூட்டம் ஒன்றில் மின்னலைகள் ஆய்வுக்கான தமது கருவி பற்றி முதலில் போஸ் பேசினார்.  கெல்வின் பிரபு இதைப் பார்த்து மகிழ்ச்சி தாங்காமல் பெண்கள் அமரும் இடத்துக்கு சென்று திருமதி போஸை (அதாவது போஸின் மனைவியை) கைகுலுக்கினார்.  லண்டன் ராயல் கழகத்தில் செய்முறையுடன் உரையாற்றினார்.  போஸ் அது ஒரு வெள்ளிக்கிழமை சொற்பொழிவு.  மேல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் மட்டுமே அழைக்கப்பட்டனர்

வழக்கமாக இந்தியாவை குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டிருந்த டைம்ஸ் ஸ்பெக்டர் போன்ற பத்திரிகைகளிலும் வங்காள விஞ்ஞானியின் சாதனை களை பாராட்டின.  இந்திய ஆபீஸ் அவரது பணியை கண்டு பெரிதும் திருப்தியுற்ற அவரது விடுமுறையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து.  ராயல் கழகத்தின் தலைவர் லிஸ்தர் பிரபு கெல்வின் பிரபு சர் வில்லியம் ராம்சே முதலானோர் உட்பட அநேகமாக எல்லா தலையாய விஞ்ஞானிகளும் மகஜர் ஒன்றைஅ க்குமாறு இந்திய ஆராய்ச்சி செயலாளருக்கு (Secretary of State) அனுப்பினார்கள்.  மாநிலக் கல்லூரியில்  பெளதீக மேற்படிப்பு  போதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்குமாறு அவர்கள் அந்த மகஜரில் வற்புறுத்தி இருந்தார்கள்.  

ஆராய்ச்சிக் கூடம்


இந்திய ஆராய்ச்சிச் செயலாளர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.  40 ஆயிரம் பவுண்ட் செலவில் அத்தகையதொரு ஆராய்ச்சிக் கூடத்தை அமைக்கலாம் என இந்திய அரசு சிபாரிசு செய்தது.  ஆனால் வங்காளத்தில் கல்வி இலாகாவின் காரியங்கள் தடை பற்றி ஏதும் நிகழாமல் போய்விட்டது. சிறு மனம் படைத்தவர்கள் தனது முயற்சியை குறைத்து விட்டதாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு போஸ் எழுதினார்.  எனினும் மத்திய அரசிடமிருந்து அவரது ஆராய்ச்சிப் பணிக்கு ஆண்டுதோறும் 2,000 ரூபாய் கிடைக்க தொடங்கியது.  இதுதவிர வங்க அரசின் மானியம் ஏற்கனவே கிடைத்து வந்தது. 

தாமதமாக ஆராய்ச்சி கழகத்தை அமைத்து கொள்வது என்ற போஸின் தீர்மானத்தை இந்த கசப்பான அனுபவம் வலுப்படுத்தியது.  இதற்காக அவரும் அவரது மனைவியும் தங்கள் செலவுகளை குறைக்க ஆரம்பித்தனர். மிச்சப்படுத்தி தொகையை தக்க ஸ்தாபனங்களின் முதலீடு செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவை 20 வருடங்களில் மும்மடங்காக பெருகின.  கர்சன் பிரபு வைஸ்ராயாக இருந்த போது போஸக்கு மேலான ஆராய்ச்சி வசதிகள் வழங்கும் கருத்தை புதுப்பிக்க முயன்றார்.  ஆனால் அவர் ஆலோசனை கலந்து கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானத்துறையில் இடையே கருத்துவேற்றுமை இருந்ததால் இந்த முறை முயற்சிகள் தோற்றன. உடல் இயலாரிடையே போஸுக்கு  கடும் எதிரிகள் இருந்ததை நான் பின்னர் பார்ப்போம்.

அறியாமைக்கு அடைப்பான் 


பிரிட்டிஸ்  சங்கத்தில் போஸ் உரையாற்றிய பின்னர் அவரையும் அவரது மனைவியையும் பல இடங்களில் விருந்துக்கு அழைத்து உபசரித்தனர்.  விருந்து ஒன்றில் நடந்த ஒரு நிகழ்ச்சியை திருமதி போஸ் நினைவு கூறுகிறார். நிபுணராக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட திரும்பியிருந்த ஒரு விருந்தினர் புகழ்பெற்ற ரசாயனி ராம்சேஸுக்குப்  சேர்த்து பக்கத்தில் அமர்ந்து இருந்தார். பிறரைப் பார்த்து காப்பி அடிப்பதில் மட்டுமே கெட்டிக்காரத்தனம் உள்ள ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் செய்வதே தம்மால் நம்ப முடியவில்லை என்றார்.  உடனே ராம்சே அவரை வாயை மூடிக்கொண்டு இருக்கம்படியும் இந்தியர்களின் அறிவாற்றலை பற்றிய தமது அறியாமையை காட்டாதிருக்குமாறும் கூறினார். 

போஸின் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் பயன்படுத்தினால் வியாபார சாத்தியக் கூறுகள் இருந்தன என்பது தெளிவு.  அவரது முதல் ஆய்வுக் கட்டுரைகள் வங்காள ஆசிய சங்கத்தின் பத்திரிக்கைகளும் (Proceedings of the Asiatic Society of Bengal)  பிரிட்டிஷ் பத்திரிகையான எலக்டிரிஷியனிலும் (The Electrician) வெளிவந்தன.  சாதாரண கலங்கரை விளக்கங்களுக்குப் பதிலாக மின்காந்த சாதனம் ஒன்றை அமைப்பது நடைமுறை சாத்தியமானது என்று எலக்ட்ரீசியன் கட்டுரை யோசனை கூறியது.  ரிசிவரை வைத்து விட்டால் மனிதன் கண்ணுக்கு ஈடான மின் சாதனமாக அது இருக்கும்.  தக்கதொரு ரிஸிவர்தான் ஒரு பிரச்சனை.  ஆனால் போஸின் உணர்கருவி எதையும் சந்தேகத்துக்கு விடாது என்று அந்த கட்டுரை கூறியது.  அத்தகையதொரு ஏற்பாடு கலங்கரை விளக்கங்களின் குறைபாட்டை குறைக்கும் மூடுபனி பிரச்சனையை தீர்த்து விடும்.

ஹெர்ட்ஸைப் பின்பற்றி மேற்கத்திய விஞ்ஞானிகள் பலர் கம்பியில்லாமல் செய்திகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பல்வேறு கருவிகளை தயாரித்தனர்.  மார்கோனி 1896 ஆம் வருடம் கம்பியில்லாத் தந்தி சாதனத்துக்கு தமது பேடன்ட் (Patent) உரிமையைப் பெற்றார்.  மார்கோனி உருவாக்கிய வானொலி செய்திகளை பெருமளவிற்கு அனுப்புவதற்கு நூற்றுக்கணக்கான மீட்டர் அலை நீளங்களை உபயோகப்படுத்தியது. போஸ்  ஆராய்ந்த சென்டிமீட்டர் அளவு உபயோகிக்க வந்தது அண்மையில்தான்.  ரேடார் தொலைக் காட்சி முதலான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.  விளைவாகவே சென்டி மீட்டர்கள் அலைகள் பயனுக்கு வந்தன.  மற்றும் சடப்பொருளின் குணங்களை கோட்பாட்டு ரீதியில் ஆராய்வதற்கும் அவை பயன்படுகின்றன. 

பேராசிரியர் எம் என் ஸாகாவும், எஸ் கே மித்ராவும்  1945ஆம் வருடம் அமெரிக்காவுக்கு போயிருந்தபோது போஸின் பரிசோதனைக் கருவியை பல வழிகளில் ஒத்திருந்த சாதனங்களை ரேடார்  பயிற்சி அளிக்கும் பல்கலைகழக ஆய்வு கூடங்களில் உபயோகிக்கப் படுவதை கண்டார்கள்.  என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின் ஜே ஜே தாம்சன் போஸின் கருவியை ஏற்கனவே வர்ணித்திருந்தார். புகழ்பெற்ற விஞ்ஞானிகள் எழுதிய புத்தகங்களிலும்  குறிப்பிடப்பட்டிருந்தது. ஹெர்ட்ஸ், லாட்ஜ், போஸ்  முதலானோரின் பணிகளை 1958-ல் ராம்சே ஒரு நூலை (மார்க்கோனி கம்ப்பெனி கனடா) வெளியிட்டார்.  உலோகக் குழல் ஒன்றில் தமது நுண்அலை கருவியை (Microwave Emitter) அடக்கியபின் போஸின் பணி அந்த ஆய்வில் கணிசமான இடத்தை பெற்றது. அலவழிகாட்டிகளுக்கு(Wave Guides)  நுண் அலைகக்கி ஒரு முன்னோடி ஆகும்.  சென்டிமீட்டர் வரிசையில் ரேடியோ அலைகள் பரவுவதற்கான பிற்கால ஆதாரங்கள் பல போஸின் மாதிரி கருவிகளின் பகுதியே ஆகும் என்பதை இந்த ஆய்வு கட்டுரை காட்டியது.  சணல்நார் இழைகளிலும்  அவர் மாதிரி தயாரித்து வைத்திருந்தார்.  சடப்பொருள் அமைப்பின் நுண்ணிய மாதிரிகளை ஆராய்வதற்கு நுண்ணலைகளை பயன்படுத்தும் பெளதீகத்  துறையின் துவக்கத்தைப் படிம  அமைப்பு பற்றிய போஸின் ஆய்வுகளில் ராம்ஸே கண்டார்.


No comments:

Post a Comment