பால் பாக்கெட் பாதுகாப்புக்கு 


கொரோனா வைரஸ் ஏற்படுத்தி இருக்கும் பீதியால் பெரும்பாலானோர் பால் பாக்கெட்டை கையாளும் விஷயத்தில் விழிப்புடன் செயல்பட தொடங்கி விட்டார்கள். பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரீசரில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதால் சற்று குளிர்ந்த நிலையில்தான் இருக்கும். குளிர்ச்சி நிலை கொரோனாவுக்கு உகந்ததாக இருப்பதால் பால் பாக்கெட்டை வாங்கியதும் கழுவுவதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். 

குளிர்ந்த நிலையில் இருக்கும் பால் பாக்கெட் கவரில் வைரஸ் தொற்று படிந்திருக்குமோ என்ற அச்சமும் இன்னொரு காரணமாக இருக்கிறது. நிறைய பேர் சோப்பு கொண்டோ, கிருமிநாசினிகளை கொண்டோ பால் பாக்கெட்டை சுத்தம் செய்கிறார்கள். பால் பாக்கெட்டை எப்படி கழுவ வேண்டும் என்று மத்திய அரசின் உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) வழிகாட்டும் நெறிமுறையை வெளியிட்டுள்ளது. 

சோப்போ, கிருமி நாசினிகளை பயன்படுத்தியோ பால் பாக்கெட்டை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பால் பாக்கெட்டை வாங்கி வந்ததும் நன்றாக குழாய் நீரில் கழுவ வேண்டும். அப்படி வெறும் நீரில் கழுவினாலே போதுமானது. அதன் பிறகு பால் பாக்கெட் மீது படிந்திருக்கும் நீர்த்துளிகள் நன்றாக உலரும் வரை தனியாக வைத்திருக்க வேண்டும். பின்பு கைகளை சோப்போ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். 


பால் பாக்கெட் மீது இருந்த நீர்த்துளிகள் நன்றாக உலர்ந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்திய பிறகு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பாக்கெட்டை கழுவியதும் அப்படியே பாத்திரத்தில் ஊற்றினால் அதில் படிந்திருக்கும் நீர்த்துளிகள் பாலில் கலக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Post a Comment

Previous Post Next Post

Search here!