ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மருத்துவ விடுப்பு தவிர அதிகமான விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியான நடவடிக்கை




அதிகமாக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


கல்லூரி ஆசிரியர்கள் தங்களுடைய தேவைக்காக விடுப்பு எடுப்பது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக அதிகமாக விடுப்பும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர மற்ற காரணங்களுக்காகவும் அதிகமாக விடுப்பு எடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மருத்துவ விடுப்பு தவிர அதிகமான விடுப்பு எடுப்போர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!