அரசு பொது வேலைவாய்ப்புக்கு சமமான கல்வித்தகுதி கொண்ட படிப்புகள் எவை? 

அரசு பொது வேலைவாய்ப்புக்கு சமமான கல்வித்தகுதி கொண்ட படிப்புகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.ஏ.பயன்பாட்டு பொருளாதார அளவியல் (அப்ளைடு எக்கனாமெட்ரிக்ஸ்) படிப்பும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.ஏ. பயன்பாட்டு பொருளாதாரம் படிப்பும், சென்னைபல்கலைக்கழகம் வழங்கும் எம்.ஏ. கார்ப்பரேட் எக்கனாமிக்ஸ் படிப்பும் அரசு பொது வேலைவாய்ப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்.ஏ. பொருளாதாரம் படிப்புக்கு இணையானவை.

 அதேபோல், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்.காம். பிசினஸ் பைனான்ஸ் படிப்பானது எம்.காம்படிப்புக்கு இணையாக கருதப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ. கணினி பயன்பாட்டுடன் கூடிய ஆங்கில இலக்கியம் பட்டப் படிப்பு, பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்புக்கு சமமானது ஆகும். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் வழங்கப்படும் எம்எஸ்சி ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயட்டிக்ஸ் படிப்பானது எம்எஸ்சி மனையியல் படிப்புக்கு நிகராக கருதப்படும். 

 அதேபோல், சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிஎஸ்சி நியூட்ரிசன் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயட்டிக்ஸ் படிப்பு பிஎஸ்சி மனையியல் (ஃபுட் அண்ட் நியூட்ரிசன்) படிப்புக்குச் சமமானது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் எம்சிஏ, எம்எஸ்இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்சிஏ (லேட்ரல் என்ட்ரி) படிப்பு,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எம்சிஏபடிப்பு ஆகியவை எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்குஇணையானவை. வேலூர்திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிசிஏ படிப்பானது பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்குச் சமமாக கருதப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!