தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..! வானிலை ஆய்வு மையம் - EDUNTZ

Latest

Search here!

Friday 4 December 2020

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..! வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்..!

புரெவிப் புயல்


பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 


வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி பாம்பனுக்குக் கிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும் புரெவிப் புயல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.


இந்தப் புயல் இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பனுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.





கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக் கூடும் என்றும், நாளை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரம், தென்கேரளக் கடலோரம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காரைக்காலில் 16 சென்டிமீட்டரும், தலைஞாயிறு, திருப்பூண்டி ஆகிய இடங்களில் 15 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 14 சென்டிமீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 13 சென்டிமீட்டரும், மயிலாடுதுறை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 12 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment