அரசு விரைவு பேருந்து பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

அரசு விரைவு பேருந்து பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

அரசு விரைவு பேருந்து பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் 



தமிழகம் முழுவதும் விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 2021-ம் ஆண்டு ஜன.14-ம் தேதிமுதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள்பொங்கல் பண்டிகை விடுமுறை வருகிறது. 

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கிடையே, தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 

 தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு விரைவு, சொகுசுபேருந்துகளில் பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விரைவு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in மற்றும் தனியார் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

 தற்போதுள்ள சூழலில் கரோனா அச்சம் காரணமாக 40சதவீத மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். எனவே, பயணிகளின் தேவைக்குஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும். இதையடுத்து, ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பேருந்துகளின் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment