இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள் - உயிர் பொருள்கள் : உள்ள ஒற்றுமைகள் - தொடர் ஒன்று - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள் - உயிர் பொருள்கள் : உள்ள ஒற்றுமைகள் - தொடர் ஒன்று

 

இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் உயிரில்லா பொருள்கள்  - உயிர் பொருள்கள் : உள்ள ஒற்றுமைகள் - தொடர் ஒன்று

 

பௌதிகத்தில் இருந்து உடலியலுக்கு

தூய பௌதீக ஆராய்ச்சிகளில் முதலில் ஈடுபட்டிருந்தபோது பிற்காலத்தில் உயிரியல் துறையில் மேலும் ஈடுபாடு கொண்டார்.  முதலில் பார்க்கும் போது இம்மாறுதல்கள் இயலாததாக தோன்றும்.  ஆனால் அது எவ்வாறு இயலாத ஒன்று அன்று.

முதல் வெளிநாட்டு பயணத்தில் இருந்து போஸ் திரும்பியதும் தமது மின்சார ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் அதன் முடிவுகளை ராயல் கழகத்தின் சமர்ப்பித்தார் அந்த கழகம் 1897 நவம்பர் முதல் 1900 பிப்ரவரி வரையிலான காலத்தில் அவரிடம் இருந்து வந்த ஆறு கட்டுரைகளை வெளியிட்டது/  மிக்சிகன் ஆகிய இடங்களில் உள்ள பலரிடம் இருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்தன. 1899 இல் அவர் தமது ரிஸிவர் கருவியில் ஒருவித களைப்பை கண்டார். மிருகங்களின் திசுக்களில் காணும் சோர்வை வெகுவாக ஒத்திருந்தது.  உயிரற்ற சடப் பொருள்களை கொண்டு செய்யப்பட்டது.  அவரது உணர்கருவி தொடர்ந்து பயன்படுத்தினால் அது உணர்வு குறைந்தது.  ஆனால் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அந்த உணர்வை திரும்பப் பெற்று விட்டது.  அது இவரது கொள்கைக்கு துவக்கமாக அமைந்தது.  அதை பின்னால் பார்க்கலாம். 

இப்போது மேலெழுந்தவாரியாக சொன்னால் மிருகங்கள் களைப்பின்றி மீழ்வதை அந்நிகழ்ச்சி  ஒத்திருந்தது. போஸை இந்நிகழ்ச்சி ஒரேடியாக கவர்ந்தது.  அவர் அனேகமாக தம்மை அறியாமலேயே பகெளதீக துறையிலிருந்து உடலியல் துறைக்கு அடியெடுத்து வைத்திருந்தார்.  அவர் இது பற்றி ஆராய ஆராய ஒன்று உறுதியாக தெரிந்தது.  சடப்பொருள் உயிர் பொருளுக்கும் இடையே உள்ள எல்லை கோடு மிக மெல்லியதே. 

அவரது மின்அலை கண்டுபிடிப்பு அமைப்பில் உணர்கருவியும் மின் ஓட்ட அளவை கருவியும் தான் பிரதானமாக இருந்தன.  இவை இரண்டும் பேட்டரி செல் ஒன்று வழியே கம்பி ஒன்றினால் இணைக்கப்பட்டிருந்தன.  மின்னோட்டம் ஆணியன் ஊசிதான் ஊக்கியை பதிவு செய்தது.  மிருகத்தின் பார்வை அமைப்புமுறை ஒப்பிட்டு உணர்வு பதிவு கருவியை  கண் என்றும் மின்னோட்டம் ஆணையை மூளை என்றும் இணைப்பு கம்பியை பார்வை நரம்பு என்றும் அவர் அழைத்தார்.

சடப் பொருள்கள் மற்றும் உயிர்ப் பொருள்களின் அணுதிறள் (molecule) அதன் பிரதிகளை ஒப்பிட்டு ஆராய்ந்தார். அயகாந்த ஆக்சைடு லேசாக சூடு செய்த போது கிடைத்த விளைவு ஒரு தசை வளைவு போன்று இருந்தது.  இந்த செயலை அவர் விவரமாக ஒப்பிட்டார்.  அதேபோல் இந்த கரிமம் எல்லாப் பொருளிலும் ஒரு உச்சநிலைக்கு பிறகு மருதலிப்பு மீட்சியும் குறைந்தன. அதுபோல களைப்பையும் அயஆக்சைட்டில் தசையைப் போல லேசாக தேய்த்துவிட்டோ  கதகதப்பான நீரில் வைத்தோ போக்க இயலும்.  பல பொருள்களில் ரட்டை நிகழ்ச்சி ஒன்றையும் போஸ் கண்டார் சாதாரண எதிர்மறை விளைவு ஒன்றையும் போஸ் கண்டார். சாதாரண ஊக்கி எதிர்மறை விளைவு ஒன்றை கொடுத்தது.  லேசான ஊக்கி நேர் விளைவை கொடுத்தது.  பொட்டாசியத்தில் சில அந்நிய பொருள்களை  பயன்படுத்தியபோது  மீட்பு சக்தி அநேகமாக அறவே போய்விட்டது.  இது தசையில் சில விஷயங்களின் சில விளைவேப் போன்றது. 

இன்னொரு ஆராய்ச்சியில் உலக பரப்பு ஒன்றின் ஒரு பகுதியை போஸ் அமிலம் ஒன்றினால் சுரண்டி விட்டு சுரண்டிய சுவடு தெரியாமல் பாலிஷ் செய்தார். ஊக்கியை பயன்படுத்தியபோது சுரண்டப்பட்ட பகுதியும் தண்டுப் பகுதியும் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டன.  அமிலம் பட்ட ஒரு வகையான நினைவே இதற்கு காரணம் என்று அவருக்கு தோன்றியது. 

1900 ல் இந்த பரபரப்பூட்டும் முடிவுகளை வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு காட்டும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.  அந்த ஆண்டு புகழ்பெற்ற பாரிஸ் பொருட்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பெளதீக காங்கிரசுக்கு அவர் அன்புடன் அழைக்கப்பட்டார்.  ஆனால் அவரை அடக்குவதற்கு அரசை இணங்க வைப்பது பெரும்பாடு ஆயிற்று.  1900 வருடம் மார்ச் மாதம் அவர் எழுதிய கடிதங்கள் வங்காளத்தில் புதிய லெப்டினன்ட் கவர்னர் உட்பர்ன் (Sir J Woodburn) பரிவு காட்டி அவர் சொல்ல வேண்டும் என்று கூறியதாக தெரிவிக்கின்றன. அவரது ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்து பார்வையிட்டார்.  அது பெரிதும் அவர் மனதை கவர்ந்தது.  அது கண்டு முதல்வர் சிறிதும் பயப்படவில்லை.  ஆனால் கடைசி நேரத்தில் தான் போஸ் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பெளதீக மாநாட்டுக்கு போக முடிந்தது.  கீழ்மட்ட அதிகாரிகளின் மனப்போக்கினால் அவர் நம்பிக்கை அனைத்தையும் இழந்த பின்னரே பயணம் செய்ய முடிந்தது. 

பாரிஸ் மகாநாட்டில் அவர் வாசித்த ஆய்வுரை  "கரிமம்"  அல்லாப் பொருள்களிலும் உயிர்ப் பொருள்களில் காணும் மறுதலிப்புகளின் ஒற்றுமை என்பதாகும்.  உயிரற்ற சடப் பொருள்களுக்கு மறுதலிப்பு காட்டுவது பற்றிய அவரது முதல் அறிவிப்பு அது. பெளதீக நிகழ்ச்சி இங்கே முடிந்து உடல் நிகழ்ச்சி இங்கே துவங்குகிறது என்று வரையறுத்துக் கூறுவது கடினம் என்று அவர் முடித்தார்.  இயற்கையின் வெளியே காணப்படும் வேற்றுமை தோற்றங்கள் இடையே அடிப்படை ஒற்றுமை இருப்பதை அவர் வலியுறுத்தினார்.  அப்போதிலிருந்து சுவாமி விவேகானந்தர் அவரது உரையைக் கேட்பதற்காகவே மகாநாட்டுக்கு போயிருந்து அவர் பேச்சை கேட்டு நெகிழ்ந்து போனார். இந்தியாவின் இந்த வீர மகனைப் பற்றி அவர் பரவசத்துடன் எழுதினார். காங்கிரசில் செயலாளர் போஸின் கண்டுபிடிப்புகளை கல்லாய் சமைந்து போனார்.  பெருமக்களுக்கு அவரது உரை பெரிதும் திருப்தி அளித்தது.  அவரது கட்டுரையை மிக முக்கியமாக அம்சமாக ட்ரான்சாக்ஸன் (Transactions)  என்ற அந்த காங்கிரஸின் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார்கள்.

ஸோர்போர்ன் (Sorbonne)  பல்கலைக்கழகத்திலும் பிரஞ்ச் பெளதீக  விலங்கியல் சங்கங்களிலும் போஸ் உரையாற்றினார்.  ஜெர்மனி ரஷ்யா அமெரிக்கா முதலான பல நாடுகளின் சிறப்புமிக்க விஞ்ஞான துறையினரை சந்தித்து உரையாடினார்.  அவர்களில் ஒருவர் பெர்லினைச் சேர்ந்த பேராசிரியர் வார்பர்க் (Warburg) அவருடைய ஆராய்ச்சிகளில் ஒருவர்,  உணர்வு கருவியைப் பற்றி வேலை செய்ய விரும்பியதாகவும் இந்த விஷயம் மிகவும் மர்மமான தாகவும் சுவையானதாகவும் இருப்பதாக கூறினாராம்.  அதற்கு வார்பர்க் அளித்த பதில் இவ்விஷயம் மிகவும் சுவையானதாக  என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் இது இனிமேல் மர்மமானது அல்ல ஏனெனில் போஸ் என்று ஒரு மனிதர் எதையும் செய்வதற்கு விட்டுவைக்கவில்லை.  ஈபிள் கோபுரத்தில் ஏற சென்றபோது போஸுக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது.  பிரதிநிதி என்ற முறையில் அவர் கட்டணமின்றி செல்ல உரிமை இருந்தது.  ஆனால் அவரது மனைவிக்கு 5 பிராங்குகள் செலுத்த வேண்டி தான் இருந்தது.  பிரெஞ்சு மொழி அறியாத அவரின் சங்கடத்தை பார்த்த ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உதவிக்கு வந்தார்.  போஸ்  தமது சீட்டை அவரிடம் கொடுத்தபோது போஸ் உண்மையில் ஜெகதீஷ் போஸ் இல்லையே என்று வியப்பு கூச்சலிட்டார்.  பாவம் டிக்கெட் விற்பனையாளர் அவரது கடும் கண்டனத்துக்கும்  விரைந்து கூடிய கூட்டத்தினரின் நிந்தனைக்கும்  இலக்காக நேரிட்டது.

 உடலியலாரின் சந்தேகம் 

போஸ் இங்கிலாந்து சென்று பிரிட்டிஷ் சங்கத்தின் முன்னிலையில் (1900 செப்டம்பர்) அதுபோன்ற ஆய்வுரையை வாசித்தார். நிகழ்ச்சி மாபெரும் வெற்றி என்று போஸ் சொன்னார்.  பொது இயல்பு கருத்துக்கு அவர் எப்படி வர முடிந்தது என்று பலர் வியப்புற்றனர்.  அது மிக இயற்கையாக வந்தது என்று பின்னர் அவர் எழுதினார்.  முடிவுற்ற வாய்ப்புகளையும் தேவைப்படும் இடைவிடாத முயற்சி களையும் நான் இப்போது உணர்கிறேன்.  அவை இனி என்னுடையதாக இருக்கும்.  ஆனால் அவற்றைக் கொண்டு செலுத்த போதுமான நாள் நான் உயிர் வாழ்வேனா என்பது தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.  அவருடைய ஆய்வுரையை எலெக்ட்ரிசின் என்ற பத்திரிகை வெளியிட்டது.  ஐரோப்பாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கரடுமுரடான கோணல்மாணலாக கருவியில் முயன்று கொண்டிருந்ததைப் பேராசிரியர் போஸ் கல்கத்தாவில் தமது ஆய்வுக்கூடத்தில் ஆப்டிகல்பென்ச் எனும் கருவியில் சின்னஞ்சிறு அழகிய கருவிகளைக் கொண்டு சாதித்து விட்டார் என்று அந்த பத்திரிக்கை விமர்சித்து இருந்தது.

பிரிட்டிஷ் சங்கத்தின் கூட்டத்துக்குப் பிறகு போஸின் நன்மையை நாடி அவர்கள் தக்கதொரு பதவியில் இங்கிலாந்திலேயே தங்கும்படி வற்புறுத்தினார்கள். முக்கியமான பேராசிரியர் பதவி ஒன்று காலியாக இருப்பதாகவும் கேட்ட அளவில் கொடுத்து விடுவார்கள் என்றும் கூறினார்கள்.  

பெளதீக இயலார் பொதுவாக அவரை புகழ்ந்து போதிலும் உடலியலார்  திகைப்புற்று சந்தேகித்தனர். ஹெர்ட்ஸின்  கதிர்வீச்சை ஊக்கியாகப் பயன்படுத்தியமையும்  கடத்தும் திறன் மாறுபாட்டை மறுப்பின் அறிகுறியாக கொண்டதையும் அவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.  அவை சாதாரண உடலியல் நடைமுறைக்கு அப்பாற்பட்டதென்பது அவர்களது கருத்து. விரைவிலேயே மிகப் பெருமளவுக்கு வரவிருந்த உடலியலாரின் எதிர்ப்புக்கு புரியாத நிலையே காரணம் என போஸ் கூறினார்.  அவர்களைப் பொறுத்தவரை உயிர் என்பது பெளதிக இயலாரின் வரம்புக்கு உட்பட்ட வெறும் சடப்பொருளை விட உன்னதமானது.  ஆகையால் இரண்டும் ஒன்று போல் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை.  அககாலத்தில் விஞ்ஞானம் தனித்தனி பகுதிகளாக கடுமையான  வரையறைக்குட்பட்டு வந்தது.

போஸ்,  உடல் இயலாரின் சவாலை ஏற்று அவர்களை அவர்களுடைய களத்திலேயே சந்தித்து சந்தேகங்களை போக்க விரும்பினார்.  ஆனால் அப்போது அவருக்கு கடும் கோளாறு ஒன்றுக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.  இதனால் சுமார் 2 மாதங்களுக்கு படுக்கையில் விழுந்து விட்டார்.  நோய்ப் படுக்கையில் இருந்து விழுந்தவர் "பிசாசு" பிடித்தவர் போல் வேலை செய்ய ஆரம்பித்தார்.  ராயல் கழகத்தில் டேவிட் பாராடே  ஆய்வுகூடத்தில் திறமைமிக்க ஆங்கில உதவியாளர் ஒருவருடன் வேலை செய்ய தொடங்கினார்.  போஸின் கடத்தும் திறன் மாறுபாடு (Conductivity Variation) முறை பின்னர் உடலியல் துறையின் ஒரு பகுதியாகி விட்டது.  ஆனால் அந்த சமயத்தில் உடலியலாருக்கு  மிகவும் பழக்கமான மின்சார உந்து மாறுபாடு (Electro motive variation)  முறையை பயன்படுத்தி தசைகள் மற்றும் உலோகங்கள் மறுதலிப்பு உறவுகளை புதிதாக பதிவு செய்ய முற்பட்டார். களைப்பு, தூண்டுதல்  தளர்ச்சி,  விஷ மருந்து,  உபயோகம் ஆகியவற்றின் விளைவுகளையும் பதிவு செய்தீர். மறுபடியும் மறுதலிப்பு ஒன்றுபோலவே இருந்தது.  

பிறகு அவர் தமது கவனத்தை தாவரங்களில்  செலுத்தலானார்.  தமது சொந்த தோட்டத்தில் இருந்து கஷ்கொட்டை மர இலைகளையும் காய்கறி வியாபாரிகளிடமிருந்து காரட்டுகள், மற்றும் சீமை சிவப்பு  முள்ளங்கிகளையும் முழுவதையும் திரட்டி பரிசோதித்தார்.  உலோகங்களிலும் மிருக திசுக்களிலும் கண்ட மறுதலிப்பு அவற்றில் காணப்பட்டது.  குளோராபாமை (Chloroform) தாவரங்களிலும் மிருகத் திசுக்களிலும் பயன்படுத்தியபோது மறுதலிப்பு மறைந்தது.  துளித்துளியாக கொடுத்தபோது விஷங்கள் ஊக்கியாக  செயலபட்டன.

உலகத்துக்கு விஷமா?

உலோகத்துக்கு யார் விஷமூட்ட நினைப்பார்கள்?  போஸ் போன்ற பரந்த புதுமையை வரவேற்கும் மனம் படைத்த ஒருவரால்தான் முடியும்.  தகரம் துத்தநாகம் பித்தளை ஆகியவற்றிலும் கிரியைகளில் அதிகம் பங்கு கொள்ளாத பிளாட்டினத்தில் கூட பல்வேறு ரசாயன பொருட்களை பயன்படுத்தினார்.  திகைப்பூட்டும் விதத்தில் மறுதலிப்பு காணப்பட்டது.  போதைப்பொருள்கள் சிறு சிறு அளவில் தூண்டுதல் அளித்தன.  அனுபவமிக்க கேம்பிரிட்ஜ் உடலியல் வல்லுநர் சர் மைக்கேல் பாஸ்டரிடம் காட்டிய போது ஒரு குறிப்பிட்ட விளைவு புதிதல்ல என்று கூறினார்.  குறைந்தது அரை நூற்றாண்டு காலமாக இது நமக்கு தெரிந்து தான் என்றார்.  அது என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று போஸ் கேட்டதற்கு ஏன் தசை மறுதலிப்பு தானே அது என்று பதிலளித்தார்.  மன்னிக்கவும் அது தகரத்தின் மறுதலிப்பு என்று அடக்கத்துடன் கூறினார்.  
முழு வரலாற்றையும் கேட்ட சர் மைக்கேல் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை.  உடனே அவர்களின் கண்டுபிடிப்புகளை ராயல் கழகத்தின் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.  அப்போது அவர் அதன் செயலாளராக இருந்தார்.  

ஆனால் ராயல் கழகம் அதே விஷயம் பற்றி ஒரு வெள்ளிக்கிழமை மாலை உரை நிகழ்த்த போது ஏற்கனவே அழைத்திருந்தது.  ஆகையால் சர் மைக்கேல் ராயல் கழகத்துக்கு  பூர்வாங்க தகவல் ஒன்றை உடனே அனுப்பும்படி கூறினார் இதன் வாயிலாக முன்னுரிமை கிடைக்கும்.  அவ்வாறே செய்யப்பட்டது.  இது ஒரு விசேஷ ஏற்பாடு.  மைக்கேலின் தீவிர அக்கறையை அது காட்டியது.  ஏன் எனில் வேறு ஒரு ஸ்தாபனத்தின் முன்னிலையில் படித்த எதையும் ராயல் கழகம் ஏற்பதில்லை.

1991 மே 10ல் நிகழ்த்திய அந்த பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உரையில் போஸ் தமது விவரங்களை செய்முறைகளில் ஆதாரங்களுடன் கவனமாக எடுத்து விளக்கினார்.  பின்வரும் வார்த்தைகளில் தமது உரையை முடித்தார்.  இத்துறையில் அவரது பணியை சுருக்கமாக எடுத்துரைத்ததுடன் அவர் உருவாக்கிக் கொண்டு வந்த விஞ்ஞான தத்துவத்தின் கண்ணோட்டத்தையும் புலப்படுத்தி அவர் முடிவுரை உயிர்ப் பொருள்களும் சடப்பொருள்களிலும் அளர்ச்சி தளர்ச்சி வரலாற்றின் சுய பதிவுகளை இன்று மாலை உங்களுக்கு காட்டினேன்.  அந்தப் பதிவுகளில் தான் எவ்வளவு ஒற்றுமை ஒன்றே ஒன்று பிரித்துப் பார்க்க முடியாத ஒற்றுமை.  ஒன்றைப் போலவே மற்றவர்களும் மறுதலிப்பு துடிப்பு தோன்றியும் மறைந்தும் வருவதைக் கண்டோம்.  அழைப்பினால் மறுதலிப்பு மறைவதையும் ஊக்கிகளினால் அவை கிளர்ந்து எழுவதையும்  சடப்பொருள்களிலும் உயிர் பொருள்களிலும் விஷங்களால் அவைக்  கொல்லப்படுவதையும் பார்த்தோம்.  

"இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் எப்படி எல்லையை வரையறுத்து இங்கே பெளதீக எல்லை முடிந்து அங்கே உடல் இயங்குகிறது என்று எப்படி சொல்ல முடியும்.  அத்தகைய உறுதியான எல்லைகள் ஏதும் கிடையாது. பொருளின் சில குணங்கள் பொதுவானவை . நிலையானவை என்பதை இந்த பதிவுகள் நமக்கு தெரிவிக்கவில்லையா.  உயிரில் காணும் மறுதலிப்பு முறை உயிரில்லாத பொருளிலும் காணப்படுகிறது என்பது உடலியல் பௌதிக இரசாயனம் தொடர்புடையது என்பதையும் திடீரென்று முடிவு என்று ஒரே மாதிரியான விதி தொடர்ந்து செல்கிறது என்பதையும் புலப்படவில்லையா?  

அப்படியானால் நெடுங்காலமாக நமக்கு புலப்படாமல் இருந்த மரங்களை கண்டறிய புது துணிச்சலுடன் இறங்குவோம்.  முரண்பாடாக தோற்றமளிக்கும் ஒன்றை ஆராய்ந்து அறிந்து எளிமைப்படுத்திலேயே விஞ்ஞானத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மேற்கொள்ள பட்டிருக்கிறது.  வேற்றுமையாக தோற்றமளிப்பது பின்னணியில் காணப்படும் ஒற்றுமையை தெளிவாக எடுத்துக்காட்டும் வரையிலேயே விஞ்ஞான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சுய பதிவுகளின் மௌன சான்றை கண்டபோது ஒலி அலைகளில் நடுங்கும் துரும்பு நமது பூமியின் எண்ணற்ற ஜீவராசிகள் நமக்கு மேலே பிரகாசிக்கும்.  சூரியன் இவை அனைத்திலும் ஊடுருவி இருக்கும் ஒற்றுமையின் ஒரு கட்டத்தை நான் பார்த்தேன்.  அந்நிலையில் 30 நூற்றாண்டுக்கு முன்னர் எனது மூதாதையர் கங்கைக்கரையில் அறிவித்த உபதேசம் எனக்கு கொஞ்சம் புரிந்தது.  இந்த பிரபஞ்சத்தில் மாறுபாடும் தன்மைகள் அனைத்தும் ஒன்றையே காண்போருக்கு நிலை பேரிண்மை சொந்தம்.  வேறு எவருக்கும்.  அல்ல வேறு எவருக்கும் அல்ல. 

போஸின் இந்த உரையை கூட்டத்தினர் பெரிதும் பாராட்டினார்கள்.  அவரது கருத்துக்களை யாரும் எதிர்பாராதது.  அவருக்கு ஓரளவு வியப்பாக இருந்தது. தாகூருக்கு ஜெகதீஷ் எழுதிய கடிதம் ஒன்றில் இந்த உரையில் கடைசியாகக் கூறிய மேற்கோளை இராயல் கழகம் முறையை பிரசுரிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சர் வில்லியம் குரூப்ஸ் தம்மிடம் எவ்வாறு வற்புறுத்தினார் என்பதை குறிப்பிட்டிருந்தார். உலோகங்களில் பெரும் நிபுணர் என போஸ் வர்ணித்த சர்  ராபர்ட்  ஆஸ்டினும் மிகவும் மகிழ்ச்சி உற்றார்.  நான் என் வாழ்நாள் முழுவதும் உலோகங்களின் குணங்களை ஆராய்ந்திருக்கிறேன்.  அவற்றுக்கு உயிர் இருப்பதை நினைக்க நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.  அவர் அந்த சமய நூல் மேற்கோளை அவர் மறுபடியும் கேட்க விரும்பினார்.  பிறகு மறு வாழ்வு உண்டு என்று சொல்லமுடியுமா?  என்னுடைய உடல் செத்த பிறகு நான் என்ன ஆவேன் என்று அவர் வினவினார். 

நாணயச் சாலையில் தலைமை நிர்வாகியாக இருந்த சர் ராபர்ட் பின்னர் போஸை இரவு விருந்துக்கு அழைத்தார். உலோகங்களின் இயல்பை 30 வருடகாலமாக ஆராய்ந்ததில் போஸின் கருத்து போன்ற கருத்தையே கிட்டத்தட்ட தாமும் கொண்டதாக அவர் தெரிவித்தார்.  அதை ராயல் கழகத்தில் தயக்கத்துடன் குறிப்பாக தெரிவித்ததாகவும் கூறினார்.  துணிச்சலான பிழையற்ற வாதங்களைப் புகழ்ந்து சந்தேகங்கள் யாவற்றையும் அவை  போக்ககிவிட்டன என்று கூறினார்.

பத்திரிகைகளில் நையாண்டி 

தினப் பத்திரிகைகளில் அவ்வப்போது நையாண்டி செய்யும் நகைச்சுவை விமர்சனங்களும் வெளிவரலாயின. தி குளோப் (The Globe)  இவ்வாறு விமர்சித்தது.   தமது உரையின் போது உலகங்களை பல வகைகளில் சித்திரவதை செய்த பேராசிரியர் கண்கள் குளமாயிருந்தன.  இது அவருக்கு பெருமை அளிக்கிறது.  ஆனால் குளிர்காயும் கணப்பு கிராதியின்மீது நெருப்பு கிளரும் கம்பி விழுந்தால் வலிக்குமே என்று அதைவிட தடவிக் கொடுக்கும் படி பிரிட்டிஷ் வீட்டு எஜமானனைத் தூண்டுவதற்கு வெகுநாளாகும். இதற்கு போஸ் பதிலளிக்கையில் " வலிமை வாய்ந்த ஜான் ஃபுல் துரை வெறும் இரும்பு கம்பி கீழே விழுந்ததற்காக துயரப்படுவார் என்று எண்ணுவது தமது கனவுக்பார்பட்டது என்றார்.  தற்காலத்தில் அவரது கண்டுபிடிப்புகளை ஃபினகளின் விதி (Finagles Law) மேலும் ஒரு உதாரணம் என்று பற்றி கொன்றுவிடுவார்கள்.  சடப்பொருள்கள் நம்மை விழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன என்பது அந்த விதி.  இதன் மூலம் அவற்றுக்கு உணர்வு இருப்பதாக அவ்விதி கூறுகிறது.

(தொடரும்)

No comments:

Post a Comment