இந்திய விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திர போஸின் ஆசிரியர் பணி மற்றும் மணவாழ்க்கை விவரம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 December 2020

இந்திய விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திர போஸின் ஆசிரியர் பணி மற்றும் மணவாழ்க்கை விவரம்

 

இந்திய விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திர போஸின் ஆசிரியர் பணி மற்றும் மணவாழ்க்கை விவரம்



வைஸ்ராய்க்கு அறிமுகம் 

நான்கு வருடத்திற்கு பின் 1884இல் போஸ் இந்தியா திரும்பினார்.  அப்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தவர் ரிப்பன் பிரபு.  அவருக்கு அறிமுகக் கடிதம் ஒன்றை ஜெகதீஷ் கொண்டு வந்தார்.  கடிதம் கொடுத்தவர் பிரிட்டிஸ் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பேராசிரியர் பாஸ்ட்.  இவர் ஒரு பொருளாதார நிபுணர். ஜெகதீஷின் மைத்துனர் புகழ்பெற்ற பாரிஸ்டர் ஆனந்த் மோகன்.  போஸுக்கு அவர் நண்பர்.  ஆனந்த மோகன் போஸ் கேம்பிரிட்ஜில் கணக்கியலில் முதன்மை நிலையில் தேறிய முதல் இந்தியர்.  1902 இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ஆனார்.  

வைஸ்ராய் சிம்லாவில் ஜெகதீஸை அன்புடன் வரவேற்றார்.  இம்பீரியல் கல்வி சர்வீஸில் தக்க வேலை கொடுப்பதாக வாக்களித்து அதன்படி வங்காள அரசுக்கு எழுதினார்.  ஆனால் வங்காள கல்வித்துறை டைரக்டர் சர் ஆல்பிரட் இதை விரும்பவில்லை.  இந்தியர் ஒருவர் விஞ்ஞானம் போதிப்பதற்கு திறனற்றவர் என்று வெறுப்பு எண்ணத்தை கொண்டவர்.  அகில இந்திய சர்வீஸ் வேலை ஒன்று கொடுக்க முன் வந்தார்.  ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார்.  ரிப்பன் பிரபுவுக்கு விஷயம் தெரிந்த போது அவர் குறுக்கிட்டார்.  கடைசியில் 1855இல் பேராசிரியர் பதவி ஒன்று தற்காலிக முறையில் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் வழங்கப்பட்டது.  கல்லூரி முதல்வர் சி எஸ் தோனி அதை ஆட்சேபித்தும் பயனளிக்கவில்லை. 

ஆனால் ஜெகதீசன் சங்கடங்கள் தீர்ந்து விடவில்லை அந்த காலத்தில் இம்பீரியல் சர்வீஸில் வேலை பார்த்த இந்தியர் ஒருவர் ஐரோப்பியர் ஒருவரின் ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கு தான் பெறுவது வழக்கம்.  தற்காலிக பதவி வகிப்பதற்கு இது இன்னும் பாதி ஊதியமாக குறைக்கப்படும் என்று போஸ் பதவியில் சேர்ந்த பிறகு தெரிய வந்தது.  இதை எதிர்த்து அவர் எழுதிய கடிதத்திற்கு பலன் கிடைக்கவில்லை.  அவர் கல்வி புகட்டி வந்தபோதும் மூன்று வருடங்களுக்கு சம்பளம் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்.

பணியாற்றும் திறன் 


முதல்நாளே போல் போஸின் ஆசிரியர் திறனை மாணவர்கள் உணர தொடங்கிவிட்டனர்.  அவருடைய விரிவுரை என்றால் அவர்களுக்கு தேனாக இனித்தது.  அதை கேட்பதற்கும் பரிசோதனைகளை அருகாமையிலிருந்து நோக்குவதற்கும் மாணவர்கள் போட்டி போட்டு கொண்டு முன்னிடத்தில் வந்து உட்கார்ந்து விட்டு விடுவார்கள்.  வருகைப் பட்டியல் எடுக்கும் அவசியமே இல்லை.  புத்தகங்களை மனப்பாடம் செய்ய தேவை ஏற்படவில்லை.  அவரது போதனை முறை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். அதை அவரது மாணவர்கள் பிற்காலத்தில் நினைவு கூறுவது வழக்கம்.  மூன்று வருடங்களில் ஆசிரியரின் பெருமையை கல்வி டைரக்டரும் கல்வி முதல்வரும் உணர்ந்து போஸுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். கொள்கைகளில் போஸ் சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதை டைரக்டர் அறிந்தார்.  ஆங்கிலேயர் ஒருவரிடம் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி,  அவருக்கு விட்டுக்கொடுக்காமல் ஈடுகொடுத்து நிற்பது என்பதை போஸ் உணர்ந்தார் 

கடன் தீர்ந்தது


ஜெகதீஷ் க்கு முன் தேதியில் இருந்து வேலை நிலை ஆயிற்று.  மூன்று வருடத்தில் சம்பளம் மொத்தம் தொகையாக கிடைத்தது.  அவர் இந்த பணத்தை கொண்டு செய்த செயல் அவரது குணச்சிறப்பின் மற்றொரு அம்சத்தை வெளிப்படுத்தியது. தமது தந்தை பட்ட கடன்களை ஏற்கனவே அவர் தமது பூர்வீக வீட்டையும் குடும்ப சொத்துக்களை விற்று விட்டார் . அந்த நாட்களில் சாதாரணமாக இந்தியர் ஒருவர் இம்மாதிரி செய்வதற்கு அவர் அதுபற்றி உணர்வு இடம் கொடாது.  அவற்றை விற்றும் அரைவாசி கடன் பாக்கி இருந்தது. இதனால் ஜெகதீஸ் இன்னும் கடினமான ஒரு காரியத்தை செய்தார்.  அவருடைய தாய் தன் மகனுக்காக தனியே வைத்திருந்த சொத்தையும் விற்கும்படி கேட்டுக்கொண்டார்.  வயோதிகத்தாய் துணிச்சலுடன் மகனின் வேண்டுகோளின்படி செய்துவிட்டாள்.  இப்போது கடனில் கால்வாசிதான் எஞ்சியிருந்தது.  எதிர்பாராமல் திரும்பி வந்த பணத்தை கண்டு வியப்புற்ற கடன் கொடுத்தவர்கள் விஷயம் அத்துடன் முடிவடைந்தது என்று நினைத்தார்கள். ஆனால் ஜெகதீசன் கருத்துக்கள் வேறாயிருந்தன.  தமக்கு கிடைத்த மூன்றாண்டு சம்பளத் தொகை முழுவதையும் அடுத்த ஆறு வருடங்களில் தமது சேமிப்பு தொகை முழுவதையும் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதற்கு உபயோகித்தார்.  அப்போது அவருக்கு வயது 31.  அவரது தகப்பனார் பிறகு ஒரு வருடமும் தாயார் மேலும் இரண்டு வருடங்கள் உயிருடன் இருந்தார்கள். 

அறிவை நாடி 


மாநிலக் கல்லூரியில் ஆரம்ப நாட்களில் போஸ் பவுதிக ஆய்வுகூடங்களை உருவாதிலும் சோதனைகள் மூலம் உரையாற்றுவதிலும் ஈடுபட்டிருந்தார். 1894 நவம்பர் 26 ஆம் தேதி நவம்பர் 30 அவரது 36வது பிறந்த நாள் அன்று அவர் தமது வாழ்க்கையின் முக்கிய தீர்மானத்தை செய்தார்.  புதிய அறிவை நாடுவதில் தமது வாழ்நாளை செலவிடுவது என்று அவர் முடிவு செய்தார்.  இந்த முடிவின் பலன்தான் தற்காலத்தில் விஞ்ஞானத் துறையில் சிறப்புப் பணி செய்த முதல் இந்தியர் கிடைத்தார் என்று போஸின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் பேட்டரி கூறினார்.

அறிவாளிக்கு அன்பு மனைவி 

அவரது வாழ்வின் துவக்க காலத்தில் கல்வித்துறை தவிர்த்த நடவடிக்கைகளும் சுவையான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.  1887 ஜனவரி மாதம் ஜெகதீஷ் அபலாதாஸ் என்ற சென்னை வைத்தியக் கல்லூரி மாணவியை மணந்து கொண்டார்.  அவரது தகப்பனார் நண்பர் துர்கா மோகன்தாஸின் இரண்டாவது மகள் அந்தப் பெண்.  அபலாதாஸ் திறன் படைத்த மங்கை. கல்வி சமூக பணிகளில் பிற்காலத்தில் சிறப்பு படுத்தினார்.  பொதுமக்களும் 50 ஆண்டுகால மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை நடத்தினார்கள்.  அவர்கள் இல்லற வாழ்வு வறுமை நிலையில் தான் துவங்கிற்று.  திருமணம் நடந்தபோது போஸ் சம்பளம் வாங்காமல் பணி செய்து கொண்டிருந்தார்.  எவ்வளவு கஷ்டம் இருந்தபோதிலும் அவரது துணிச்சலான செயலை அவர் மனைவி மனமார பாராட்டினார்.  அப்பாவின் தகப்பனார் கூறிய ஆலோசனைக்கு இணங்க பிரஞ்சு பகுதியாக இருந்த சந்திரகாசன் நாகூரில் கங்கைக் கரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். கல்கத்தாவுக்கு போக வேண்டுமானால் கங்கையை கடந்து வந்து மறுகரையில் ரயில் ஏற வேண்டும்.  மாலையில் மலை சென்று அபலாதாஸ் கணவனை படகில் அழைத்து வருவாள்.  சில மாதங்கள் கடந்த பின்னர் அவர்கள் மீண்டும் கல்கத்தா திரும்பி ஜெகதீஷின் பெற்றோர்கள் உடனேயே வசிக்கலானார்கள்.  1890இல் துவக்கத்தில் தம்பதியர் பஜார் தெருவில் பெரிய வெட்டவெளி அமைந்த வீடு ஒன்றை ஜெகதீஷின் மைத்துனர் டாக்டர் எம் எம் போஸ் உடன் பகிர்ந்து கொண்டிருந் தார்கள்.


ஆண்டில் இரு முறை இளம் விஞ்ஞானி தனது மனைவியுடன் நீண்ட பயணங்கள் செய்து வந்தார்.  அவரது மனைவி பிற்காலத்தில் பல வெளிநாட்டுப் பயணங்களிலும் கணவருக்கு உற்ற துணையாக செல்வது வழக்கம்.  புகழ்பெற்ற யாத்திரைத் தலங்கள்,  பல்கலைக்கழகங்கள் இருந்த இடங்கள் கோயில்கள் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்,  இயற்கை எழில் பூத்துக் குலுங்கும் பிரதேசங்கள்,  இவையெல்லாம் ஜெகதீஷின் சுற்றுலா திட்டத்தில் அடங்கியிருந்தன.  ஜெகதீஷ் தன் காமிராவை எடுத்து சென்று படங்களை பிடிப்பார். பல வருடங்கள் கழித்து அவருடைய பணியாள் ஒருவர் எஜமானுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் நெகட்டிவ் தொகுப்பை சுத்தமாக துடைத்து வைத்துவிட்டார். 

அஜந்தா,  எல்லோரா,  தட்சசீலம்,  நாலந்தா,  பாடலிபுத்திரம்,  புத்தகயா,  சாரநாத், காஷ்மீர் பத்ரிநாத்,  கேதார்நாத்,  பிண்டாரி,  பனியாறு,  ராஜபுத்திர வீரர்கள் முதலிய நகரங்கள்.  பூரி,  புவனேஸ்வர் ஆலயங்கள் மற்றும் பல ஆலயங்கள் முதலானவற்றை ஜெகதீஸ் சென்று பார்த்தார்.  பத்த கதைகளும் வரலாறுகளும் ஜெகதீசைக் கவர்ந்தன.  அறிவு வேட்கை கேந்திரமாக பின்னர் அவர் அமைத்த ஆய்வுக் கழகத்தின் கற்பனைத் தோற்றம் அவருக்கு நாலந்தா தட்சசீலத்தில் கிடைத்ததாக சொல்லுவார்கள். இந்த பயணங்களின் போது சில சமயம் நண்பர்களும் போஸ் தம்பதியருடன் செல்வதுண்டு.  புத்தகயா,  நாலந்தா, ராஜ்கீர் ஆகிய இடங்களுக்கு அவர்களுடன் கவி ரவீந்திரநாத் தாகூரும் சகோதரி நிவேதிதையும் சென்றிருந்தார்கள். பத்ரிநாத் கேதார்நாத் யாத்திரை களிலும் மற்றும் சில இடங்களுக்கும் சகோதரி நிவேதிதை உடன் சென்றிருந்தார்.  எத்தனையோ இடர்பாடுகள் இருந்தும் இமயமலையிடம் ஜெகதீஷ் கொண்ட ஈடுபாட்டை குறைக்க முடியவில்லை. பிண்டாரி, பனியாறு போன சமயம் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.  ஆனால் அடுத்த வருடம் தமது மனைவியையும் சில நண்பர்களும் அங்கு அழைத்துச் சென்று கங்கையின் உற்பத்தி இடத்தை ஆராய்வதற்கு தூண்டுகோலாக அந்த நிகழ்ச்சி இருந்தது. மலைகளுக்கு அவர் சென்ற பயணங்களில் ஒன்றில் மாயாவதி இராமகிருஷ்ண மடத்துத் துறவிகளுடன் தங்கினார்.

வங்க மொழி கட்டுரைகள் 

இந்தியாவை அவர் கண்டறிந்த பாங்கினை எப்போதாவது வங்கமொழி கட்டுரைகளில் வெளியிட்டு வந்தார்.  பிற்காலத்தில் இந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்து அப்யக்தா என்ற புத்தக வடிவில் பிரித்தார்கள்.  1894-இல் ஜூத்காரா என்ற வங்க மொழி கட்டுரை ஒன்றில் அஜந்தா குகை கோவிலில் பார்த்த ஓவியத்தை வர்ணித்திருந்தார்.  அப்போதுதான் அந்த குகை கோயில்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.  ரயில் நிலையத்தில் இருந்து 24 மணிநேரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து அவர் அஜந்தா குகைகளை அடைந்தார்.  அவர் எழுதிய வர்ணனை மேகக்கூட்டங்கள் எதிர் திசைகளில் இருந்து வந்து மோதுகின்றன.  இப்படி முட்டி மோதி குமறும் மேகக்குவியல்களில் பயங்கர பூசலில் ஈடுபடும் இரண்டு முகங்கள் தோன்றுகின்றன.  படைப்புக் காலத்தில் தோன்றிய இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் தொடரும்.  ஒளியும் இருளும் உண்மையும்,  அறியாமையும் நேர்மையும், நேர்மையின்மையும் இந்தப் போரில் ஈடுபட்டிருப்பதை கிழக்கே கடலின் அடியிலிருந்து ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் சூரிய பகவான்  தோன்றும் போது இருள் தோற்று ஓடி விடுகிறது.

கங்கை நதித் தோற்றம்


கங்கை நதியின் கிழக்குக்கிளை கிழக்கு வங்காளத்தில் பத்மா நதி ஓடுகிறது. சிறுவனாக இருக்கையில் பத்மா நதி ஓடுவதை ஜெகதீஷ் பார்த்துக் கொண்டிருக்கையில் அது எங்கே தோன்றி எங்கே கடலில் சங்கமிக்கிறது என்று பயப்படுவது வழக்கம்.  பெரியவனாக வளர்ந்து அந்த நதியின் பிறப்பிடத்தை கஷ்டப்பட்டு தேடி வந்தவர் நந்தாதேவி திரிசூல் என்ற இரட்டை சிகரங்களை பார்க்க முடிந்தது.  பிண்டாரி,  பனியாறு,  திரிசூலி அடிவாரத்தில் உற்பத்தியாகிறது.  உயரே விசித்திரமான பனிப்படலம் ஒன்று திரள்வதை அவர் பார்த்தார். பிறகு அவரது கற்பனைகண்  மற்றவை அனைத்தையும் கண்டதும். 

மனதில் பதித்த இந்திய கலாச்சார ஒருமைப்பாடு 


நேபாளத்தின் மேற்கு எல்லையில் நிகழ்ந்த பெயர்பெற்ற ஒரு போரில் நேபாள தளபதியின் தலைமையில் 300 வீரர்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து கலுங்கா கோட்டையை எவ்வாறு காத்தார்கள் என்ற நிகழ்ச்சி ஜெகதீஸைக்  கவர்ந்தது. அவர் அந்த இடத்திற்கு சென்று ஒரு வரலாற்று கட்டுரைக்கு அக்னி பரிட்சை 1895 விவரம் சேகரித்தார்.  

தெருக்கூத்துகள்,  கிராமத்து திருவிழாக்கள் ஆகியவற்றை விபரம்  அறியா சிறுவனாக பார்த்து இதிகாசங்களையும் புத்தக புத்த ஜாதகக் கதைகளிலும் ரசித்து படித்தது.  இந்தியாவெங்கிலும் யாத்திரை செய்து சுற்றி பார்த்தது இவையாவும் ஜெகதீசன் மனதில் வாழ்வின் துவக்கத்திலேயே இந்திய கலாச்சாரத்தில் ஒற்றுமையை ஆழமாக பதிய வைத்து விட்டன.  அவரது பிந்தைய சிந்தனைகளிலும் உரையாடல்களிலும் அவற்றின் முத்திரை பதித்தன.  ஆனால் அவர் குறுகிய தேசப் பற்று உடையவர் என்று நினைப்பது தவறு என்பதை பின்னால் பார்க்கப் போகிறோம்.

போட்டோ ஆர்வம் 


போஸின் விஞ்ஞான ஆர்வம் விரிவுரை ஆர்வத்துடனும் செய்முறை சோதனைகளும் ஆரம்ப காலத்தில் நின்றுவிடவில்லை.  அவர் தமது புகைபடம் பிடிக்கும் ஆற்றலை தீவிரமாக வளர்த்துக் கொண்டார்.  பஜார் தெருவில் மைதானத்தில் புகைப்பட அரங்கு ஒன்றை அமைத்துக் கொண்டார்.  எடிஷன் போனோகிரா.பின் துவக்ககால மாடல் ஒன்றை அவரது கல்லூரி வாங்கியது. ஜெகதீசன் குரலை பதிவு செய்து மீண்டும் போட்டு கேட்கும் சோதனையில் ஈடுபட்டார்.  மின்காந்த அலைகளில் Hertz  ஏற்று நடத்திய சோதனைகளிலும் அவருக்கு மிகுந்த அக்கறை ஏற்பட்டது. அவர் இங்கிலாந்தில் இருந்தபோது இந்த சோதனை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.  போஸின் ஆரம்ப கால ஆராய்ச்சி சாதனைகளுக்கு இவைதாk; வித்துக்கள்.

No comments:

Post a Comment