உயர்படிப்புக்கு உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வு - EDUNTZ

Latest

Search Here!

Monday, 28 December 2020

உயர்படிப்புக்கு உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வு

உயர்படிப்புக்கு உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வு


தமிழகம் முழுவதும் நடந்தது: உயர்படிப்புக்கு உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர் 

 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது அதற்கு தேவையான உதவித்தொகையை பெறுவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் என 2 கட்டங்களாக நடைபெறும் தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 11, 12-ம் வகுப்பு மற்றும் அதற்கடுத்தபடியாக பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரையில் உதவித்தொகை மாதந்தோறும் கிடைக்கும். மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் இந்த தேர்வுகளை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) நடத்துகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். 

அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. தமிழகம் முழுவதும் 900 மையங்களில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக தேசிய அளவில் நடைபெறும் தேர்வை எதிர்கொள்வார்கள்.

No comments:

Post a Comment