அம்மா இருசக்கர வாகனம் பெற பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் - EDUNTZ

Latest

Search here!

Monday 7 December 2020

அம்மா இருசக்கர வாகனம் பெற பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

அம்மா இருசக்கர வாகனம் பெற பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம் 

சென்னை மாவட்டத்தில் தகுதியுள்ள பணிபுரியும் மகளிர், அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னைமாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

 சென்னை மாநகராட்சியில் நகர்ப்புறங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள, தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு உட்பட்ட ஏழை மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் 2017 – 18 நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது 2020–21 நிதிஆண்டில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களைச் சார்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத் திறனுடைய மகளிர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் உரிய சான்றுகளை இணைத்து அதே மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment