தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் இன்று (திங்கட்கிழமை) உதயமாகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம்தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமானது. புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு, சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
38 ஆக அதிகரிப்புஇந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி வழியாக மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயரும். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடியில் இருந்தபடி, மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக்காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, 12.30 மணிக்கு மருத்துவ குழுவினரையும் அவர் சந்தித்து, உருமாறிய புதிய கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார்
No comments:
Post a Comment