உங்கள் காரில் பெட்ரோல் டேங்க் எந்த பக்கம் இருக்கு? கண்டுபிடிப்பிக்க ஈஸியான ட்ரிக்ஸ்! 







உங்கள் சொந்த கார் பயன்படுத்தும் போது கண்டிப்பாக உங்களுக்கு பெட்ரோல் டேங்க் எந்த பக்கம் இருக்கிறதென்று கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால், அதுவே ஏதேனும் அவசர தேவைக்கு உங்கள் நண்பரின் காரையோ அல்லது வாடகை காரையோ பயன்படுத்துகிறீர்கள் என்றால் பெட்ரோல் போட செல்லும்போது பெட்ரோல் டேங்க் நிரப்புவதற்கான மூடி எந்த பக்கம் இருக்கிறது என்பது தெரியாது. 

தெரியாமல் மாற்றி தவறான லேனில் சென்றுவிட்டால் திரும்பவும் ரிவர்ஸ் எடுக்க வேண்டும், அதே சமயம் நமக்கு நேரமும் விரயம் ஆகும். ஆனால், இதுக்கு சிம்பிள் ட்ரிக்ஸ் ஒன்னு இருக்குங்க. அது தெரியுமா உங்களுக்கு? நீங்கள் பயணம் செய்யும் போது பெட்ரோல் எவ்வளவு இருக்குனு காண்பிக்கும் Fuel இண்டிகேட்டரின் பக்கத்திலேயே அம்புக்குறியுடன் பெட்ரோல் டேங்க் அடையாளம் ஒன்று இருக்கும். 

அது தான் Petrol Tank Side Indicator. அந்த இண்டிகேட்டரில் உள்ள அம்புக்குறி வலதுபுறம் நோக்கி இருந்தால் பெட்ரோல் டேங்கிற்கான மூடி வலதுபுறமும், அம்புக்குறி இடதுபுறம் நோக்கி இருந்தால் பெட்ரோல் டேங்க் மூடி இடப்புறமும் இருக்கிறது என்று அர்த்தம். சில கார்களில் Fuel Door என்றே அம்புக்குறி அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களுக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் இந்த விஷயம் தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமெனில் நீங்கள் தெரிந்துக்கொள்வதோடு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.

Post a Comment

Previous Post Next Post

Search here!