மருத்துவத் தாவரங்களின் விநியோக அமைப்பு மற்றும் நுகர்வு அமைப்பு பங்குதாரர்களிடையே இணைப்பை ஏற்படுத்த ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (என்.எம்.பி.பி) திட்டமிட்டுள்ளது.
தரமான நடவுப் பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சாகுபடி, மருத்துவத் தாவரங்களின் வர்த்தகம் / சந்தை இணைப்பு போன்றவை பற்றி என்.எம்.பி.பி கூட்டமைப்பு விவரிக்கும்.
விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே தொடர்பை ஏற்படுத்த, ‘விதை முதல் விற்பனை’ என்ற அணுகுமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
இதில் நடவுப் பொருள்களின் தரம், நல்ல வேளாண் நடைமுறை, அறுவடைக்குப் பிந்தைய நடைமுறை தொடர்பான அம்சங்கள் குறித்து விவரிக்கப்படும்.
முதல் கட்டத்தில் அஸ்வகந்தா (விதானியா சோம்னிஃபெரா), பிப்பாலி (பைபர் லாங்கம்), அன்லா (ஃபைலாந்தஸ் எம்பிலிகா), குகுலு (கமிபோரா வைட்டி), சதாவரி (அஸ்பாரகஸ் ரேஸ்மோசஸ்) போன்ற மருத்துவத் தாவர இனங்கள் குறித்து எடுத்துரைக்க என்.எம்.பி.பி கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
என்.எம்.பி.பி கூட்டமைப்பில், பதிவு செய்வதற்கான தொடர்பு என்எம்பிபி இணையளத்தில் உள்ளது. தகுதியான விவசாய அமைப்புகள், விதைப் பண்ணைகள், மருத்துவத் தாவரப் பண்ணைகள், சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் இந்தக் கூட்டமைப்பில் பதிவு செய்ய முடியும்.
No comments:
Post a Comment