வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வேலூர் மாவட்டம்

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ந.க.எண்: 307 /DC4/ஒபக/2020 நாள் : /12/2020


ஒபக - பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் - கற்போம்

எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம்

செயல்படுத்துதல் - கற்போம் மையம் செயல்பாடு- தொடர்பாக

பார்வை : 

மாநில திட்ட இயக்குநர் (ஒபக) அவர்களின் கடிதம்

ந.க.எண்: 743/ஆ3/2020 நாள்: 11.12.2020

பார்வையில் காணும் கடிதத்தின்படி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் வாயிலாக கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்த கற்போர் மையங்கள் துவங்கப்பட்டு 30.11.2020 தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கற்போர் மையங்களுக்கான வருகைப்பதிவு TN EMIS செயலியில் மேற்கொள்ள ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. தற்போது தன்னார்வலர்கள் மற்றும் கற்போர்களின் வருகைப்பதிவு 100% மேற்கொள்ள மைய பொருப்பாளர் (ஆசிரியர்

பயிற்றுநர் / மேற்பார்வையாளர் / வட்டார கல்வி அலுவலர்) தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் வட்டார அளவில் உள்ள கற்போம் எழுதுவோம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தினமும் மொத்த மையங்களின் எண்ணிக்கை பார்வையிட்ட மையங்களின் எண்ணிக்கையை மேற்பார்வையாளர் குழுவில் பதிவிடும் வண்ணம் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அனைத்து கற்போர் மையங்களிலும் கையேடுகளின் பயன்பாடு, கால அட்டவணை பின்பற்றுதல் மற்றும் வருகை பதிவேடு போன்றவற்றை மைய பொருப்பாளர்கள் (ஆசிரியர் பயிற்றுநர் / மேற்பார்வையாளர் / வட்டார கல்வி அலுவலர்) உறுதி செய்தல் வேண்டும். கற்போர் மையம் நடைபெறும் நேரம் குறித்த தகவல் மையம் வாரியாக வட்டார வளமையத்தில் இருத்தல் வேண்டும். மேலும் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு

மின்னஞ்சல் அனுப்புதல் வேண்டும்.


கொரோனா வைரஸ் (COVID - 19) பரவலிருந்து தற்காத்து கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளால்தெரிவித்துள்ள வழிமுறைகளின் படி, முககவசம், Sanitizer ஆகிய அனைத்து பாதுகாப்பம்சங்களுடன் கூடிய உரிய சமூக இடைவெளியை பின்பற்றி கற்றல் மையம் செயல்படுவதை வட்டார கல்வி அலுவலர்கள்கள் உறுதி செய்தல் வேண்டும்.


முதன்மைக் கல்வி அலுவலர் (ஒபக)

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

1. அனைத்து வட்டார வளமையமேற்பார்வையாளர் (பொ) .

2. வட்டார கல்வி அலுவலர், உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு.


நகல்


1. மாநில திட்ட இயக்குநர் (ஒபக) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பலாகிறது.

2. இயக்குநர், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை 06

3. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்/ இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர்

4. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை.

5. மாவட்ட கல்வி அலுவலர்கள். (அரக்கோணம்/இராணிப்பேட்டை வேலூர் வாணியம்பாடி/திருப்பத்தூர்)

Post a Comment

Previous Post Next Post

Search here!