'கதைகளின் மூலமாக கல்வி கற்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர்' - ஆய்வில் தகவல் Children want to be educated through stories - EDUNTZ

Latest

Search here!

Thursday 10 December 2020

'கதைகளின் மூலமாக கல்வி கற்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர்' - ஆய்வில் தகவல் Children want to be educated through stories

'கதைகளின் மூலமாக கல்வி கற்பதையே குழந்தைகள் விரும்புகின்றனர்'


கதைகளின் மூலமாக கல்வி கற்பதையே குழந்தைகள் விரும்புவதாகவும் இது குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்துவதாகவும் புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தின் மில்னர் சென்டர் ஆப் எவலூஷன் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வின் மூலமாக இதனை நிரூபித்துள்ளனர். சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், குழந்தைகளின் கல்வித்திறனுக்கும் கதைகளுக்கும் இடையே உள்ள தொடர்பினை கண்டறிந்துள்ளனர். 

 ஒரு விஷயத்தை மாணவர்களிடம் எடுத்துக்கூற ஆசிரியர் முயற்சிக்கும்போது செயல்முறைகளைக் காட்டிலும் கதைகளின் மூலமாக எடுத்துக்கூறும்போது அதனை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்கின்றனர். குறிப்பாக ஆரம்பப்பள்ளி மாணவர்களிடம் கல்வித்திறனில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வித்திறனில் வெவ்வேறு நிலை கொண்ட 2,500 தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். 

 பாத் பல்கலைக்கழகத்தின் மில்னர் சென்டர் ஃபார் எவல்யூஷன் இயக்குனரும் பேராசிரியருமான லாரன்ஸ் ஹர்ஸ்ட் இதுகுறித்து, 'ஆய்வின் முடிவுகளால் நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். மாணவர்கள் கதை கேட்பதை விட நேரடியாக செயலில்தான் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஆய்வின்போது எங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. நாங்கள் நினைத்ததற்கு நேர்மறையாக முடிவுகள் வந்துள்ளன. இது ஆரம்பப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனுக்கு அடித்தளமாக விளங்குவதால் பதிவு செய்யப்படவேண்டிய முக்கியமான விஷயமாகும். 

இருப்பினும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் அறிவியல் பின்னணி குறித்த அறிவு குறைவாக என்பதால் அவ்வாறு கற்பிப்பதில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது. இதற்காக விலை குறைந்த பொருள்களைப் பயன்படுத்தி பலவிதமான இலவச பாடத் திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம், அத்துடன் ஆசிரியர்களுக்கு இந்த விஷயத்தில் தங்கள் மாணவர்களை ஈடுபடுத்த உதவும் இலவச ஆன்லைன் பாடத்திட்டத்தையும் உருவாக்கியுள்ளோம். ஆய்வில் பங்கேற்ற பள்ளிகளுக்கு, குறிப்பாக பாடங்களை கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் பங்கேற்ற மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எதிர்காலத்தில் பாடங்களை கதைகளின் மூலமாக மாணவர்களிடம் கொண்டுசேர்ப்பதன் மூலம் பெரும் மாற்றத்தைக் காண முடியும்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment