எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் எவ்வளவு தெரியுமா? Current height of Mount Everest - EDUNTZ

Latest

Search here!

Thursday 10 December 2020

எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் எவ்வளவு தெரியுமா? Current height of Mount Everest

எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் எவ்வளவு தெரியுமா?



எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் - புதிய அளவு அறிவிப்பு!


சீனா, நோபாளம் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்து புதிய உயரத்தை அறிவித்துள்ளன. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்ட் போற்றப்படுகிறது. கடந்த 1954ம் ஆண்டு இந்த சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது சிகரத்தின் உயரம் 8,848 மீட்டா் என அறிவிக்கப்பட்டது. சீனா தனது அளவீட்டில், 8,844.43 மீட்டர் இருப்பதாக அறிவித்தது. 


இதற்கிடையே, நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்தன. இதனைத்தொடா–்ந்து, சிகரத்தின் உயரத்தை மறுமதிப்பீடு செய்ய நோபாளம் முடிவு செய்தது. அதன்படி, சீனாவும், நேபாளமு் இணைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மறு அளவீட்டு பணியை தொடங்கின. இப்பணி தற்போது நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எவரெஸ்ட்டின் புதிய உயரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், 86 செமீ அதிகமாக புதிய உயரம் 8,848.86 மீட்டர் என நேபாளம் அறிவித்துள்ளது..

No comments:

Post a Comment