தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பள்ளி மாணவர்களிடமிருந்து கண்டுபிடிப்புகள் வரவேற்கப் படுகின்றன - EDUNTZ

Latest

Search here!

Friday 4 December 2020

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பள்ளி மாணவர்களிடமிருந்து கண்டுபிடிப்புகள் வரவேற்கப் படுகின்றன

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பள்ளி மாணவர்களிடமிருந்து கண்டுபிடிப்புகள் வரவேற்கப் படுகின்றன


பத்திரிக்கைச் செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும் Download Here

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான கண்டுபிடிப்புகள்  பள்ளி மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து கடந்த 27 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. 

இந்த ஆண்டு "நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்" என்ற கருப்பொருளில் நடக்கிறது.  திருப்பூர் மாவட்ட கல்வியாளர் ஈஸ்வரன் கூறியதாவது 

குழந்தைகளுடைய அறிவியல்பூர்வ மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இம் மாநாடு நடத்தப்படுகிறது. நிலைப்புரு  வாழ்க்கைக்கான சுற்றுச்சூழல் அமைப்பு,  பொருத்தமான தொழில்நுட்பம்,  சமூக கண்டுபிடிப்பு,  நிலைப்புரு  வாழ்க்கைக்கான முன்மாதிரி,  மரபுசார் அறிவு, கொரோனா  தொற்று காலங்களில் குழந்தைகளின் பிரச்சினைகள் என்ற ஆறு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.. 

இதன் கீழ் மாணவர்கள் தங்கள் படைப்புகளை தமிழ் மற்றும் ஆங்கில பிரிவின்கீழ் தனித்தனியாக சமர்ப்பிக்கலாம்.  ஜூனியர் பிரிவில் 10 - 13 வயது மாணவர்களும்,  சீனியர் பிரிவில் 14  - 17 வயதினரும் பங்கேற்கலாம். 

டிசம்பர் 30-ல் இதற்கான ஆய்வை மேற்கொள்ளலாம். ஜனவரி முதல் வாரத்தில் இணைய வழியாக மாவட்ட அளவிலான மாநாடு நடக்கும்.  மேலும் விவரங்களுக்கு 9443024086  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

இவ்வாறு.  அவர் கூறினார்.

No comments:

Post a Comment