இஸ்ரோவிடம் இருந்து இலவச சான்றிதழ்; ஏஐசிடிஇ, இஸ்ரோ, ஐஐடி இணைந்து நடத்தும் மேப்பத்தான் போட்டி: டிச.31 வரை விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 9 December 2020

இஸ்ரோவிடம் இருந்து இலவச சான்றிதழ்; ஏஐசிடிஇ, இஸ்ரோ, ஐஐடி இணைந்து நடத்தும் மேப்பத்தான் போட்டி: டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவிடம் இருந்து இலவச சான்றிதழ்; ஏஐசிடிஇ, இஸ்ரோ, ஐஐடி இணைந்து நடத்தும் மேப்பத்தான் போட்டி: டிச.31 வரை விண்ணப்பிக்கலாம் 


இந்திய செயற்கைக்கோள் படங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏஐசிடிஇ, இஸ்ரோ, ஐஐடி பாம்பே ஆகியவை இணைந்து ஆன்லைன் மேப்பத்தான் போட்டியை நடத்த உள்ளன. 

 மேப்பத்தான் போட்டி என்பது போட்டியில் கலந்துகொள்வோர் தங்களுடைய பகுதிக்காக வரைபடங்களைத் திறம்பட மேம்படுத்தும் போட்டியாகும். இதில் வரைபட விவரங்களைச் சேகரிக்க இணையத்திலேயே தனித்தளம் இருக்கும். இயற்கைப் பேரிடர்கள், வெள்ளம், வறட்சி, பயிர்கள் காய்தல், மண்வள மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக இஸ்ரோ சாட்டிலைட் படங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், மேப்பத்தான் போட்டி நடத்தப்படுகிறது. 

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஆர்வமுள்ள மாணவர்கள் மேப்பத்தானின் அதிகாரபூர்வ இணையதளத்தில், டிசம்பர் 14 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான முடிவுகள் ஜனவரி 4 முதல் 10ஆம் தேதி வரை அறிவிக்கப்படும். போட்டியில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கு ஏஐசிடிஇ, இஸ்ரோ, ஐஐடி பாம்பே மற்றும் எஃப்ஓஎஸ்எஸ்இ ஆகியவை இணைந்து சான்றிதழை வழங்கும். மாணவர்கள் iitb-isro-aicte-mapathon.fossee என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்

No comments:

Post a Comment