பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Center மூலம் அதிக மாணவர்களை தவறாக சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
பார்வையிற்காண் சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக, தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password ஐ அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும், அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal -ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
எனவே, இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே, பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது மேலும் அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் (31.12.2020) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment