NMMS PROCEEDING NMMS தேர்வில் 2016-17 கல்வி ஆண்டு முதல் 2019 - 20 கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை NSP Portal ல் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Thursday 10 December 2020

NMMS PROCEEDING NMMS தேர்வில் 2016-17 கல்வி ஆண்டு முதல் 2019 - 20 கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை NSP Portal ல் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு

 NMMS  PROCEEDING NMMS தேர்வில் 2016-17 கல்வி ஆண்டு முதல் 2019 - 20 கல்வி ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை NSP Portal ல் பதிவேற்ற இயக்குநர் உத்தரவு






கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , இக்கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் விவரங்கள் National Scholarship Portal இல் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியை 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் , தேர்ச்சி பெற்ற 6695 மாணவ மாணவியரில் 04 டிசம்பர் 2020 வரை 6339 மாணவ மாணவியரின் தகவல்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . 


இதே போன்று , கடந்த 3 ஆண்டுகளில் NMMSS உதவித்தொகை பெற்றுவரும் அதாவது இந்த கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்துவரும் NMMSS உதவித்தொகைக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் மாணவர்களின் National Scholarship Portal ல் உதவித்தொகைக்கான Renewal செய்யும் பணியும் இன்னும் முழுமை பெறாமல் , 13492 மாணவர்களுக்கு 12598 மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே 04 டிசம்பர் 2020 வரை Renewal செய்யப்பட்டுள்ளது . இப்பணியையும் 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது...


No comments:

Post a Comment