NTSE தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 துறை அலுவலர் நியமனம் இயக்குநர் செயல்முறைகள் நாள் 11.12,2020 - EDUNTZ

Latest

Search here!

Friday 11 December 2020

NTSE தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 துறை அலுவலர் நியமனம் இயக்குநர் செயல்முறைகள் நாள் 11.12,2020

NTSE தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 துறை அலுவலர் நியமனம் இயக்குநர் செயல்முறைகள் நாள் 11.12,2020

அனுப்புநர் 

முனைவர்.சி.உஷாராணி, 
 M.Sc.,B.Ed.,Ph.D.,
அரசுத் தேர்வுகள் இயக்குநர், 
சென்னை - 600 006. 
பெறுநர் 
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள். 
(காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரி நீங்கலாக) 
 
ந.க.எண்.025847 /NTSE/2020 நாள் : 11.12.2020 
 
 
ஐயா / அம்மையீர், 

பொருள்: 

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தேசிய 
திறனாய்வுத் தேர்வு (NTSE), டிசம்பர் 2020 – துறை 
அலுவலர் நியமனம் - தொடர்பாக. 
------ 
27.12.2020 அன்று நடைபெறவிருக்கும் தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) 
தங்களால் பரிந்துரை செய்யப்பட்ட தேர்வு மையங்களின் பட்டியல் தெரிவு செய்து அனுப்பப்பட்டது முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி அத்தேர்வு மையங்களே இறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தங்கள் ஆளுகைக்குட்பட்ட இத்தேர்வு மையங்களுக்கான முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களை உடனடியாக நியமனம் செய்து கீழ்காணும் படிவத்தின்படி 
பெயர், பதவி, பள்ளி முகவரி, தொலைபேசி எண்/ கைப்பேசி எண் ஆகிய விவரங்களை 16.12.2020-க்குள் இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் 
தெரிவிக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் 
கொள்ளப்படுகிறார்கள். 

படிவம் 
 
வ.எண் 
வருவாய் 
மாவட்டம் 
தேர்வு மைய 
எண் பெயர் 
தேர்வு மைய முதன்மைக் 
கண்காணிப்பாளர் மற்றும் 
கைப்பேசி எண் 
துறை அலுவலர் 
மற்றும் கைப்பேசி 
எண் 
 
 
மின்னஞ்சல் முகவரி : ntsexam2019@gmail.com
 
ஒம்/- 
இயக்குநர் 
 
நகல் 

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் 
2. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்.



No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]