பொங்கல் பரிசு முழு விவரம் : தமிழக அரசின் செய்தி குறிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 22 December 2020

பொங்கல் பரிசு முழு விவரம் : தமிழக அரசின் செய்தி குறிப்பு

பொங்கல் பரிசு முழு விவரம் : தமிழக அரசின் செய்தி குறிப்பு 


செய்தி வெளியீடு எண்: 983 

நாள்:21.12.2020 
செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (21.12.2020) தலைமைச் செயலகத்தில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், தலா 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் 1 கோடியே 80 லட்சம் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக 9 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கி, துவக்கி வைத்தார்கள். 

தமிழர்களின் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு அறிவித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்பட்டு பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை, டெல்டா பகுதிகளிலே புயலினால் கடுமையான மழை, அங்கே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை, புயலால், கன மழையால் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கின்ற சூழ்நிலை ஆகிய இரண்டும் இந்த ஆண்டை பாதித்திருக்கிறது. இதையெல்லாம் அரசு கருத்தில் கொண்டு, தைப் பொங்கலை தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை தமிழர்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 2,500/- வழங்கப்படும். 

2021-ஆம் ஆண்டு ஜனவரி 4- முதலமைச்சர் அவர்கள் கடந்த 19.12.2020 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் அறிவித்தார்கள். அதன்படி, தைப் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு 2,500 ரூபாய் ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு நீள கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 9 அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி, துவக்கி வைத்தார்கள். 

இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டு 484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கிடும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 9 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில், 

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், 
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜூ, மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. இரா. காமராஜ், 
மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார், 
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், 
தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., கூட்டுறவு, 
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., 
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., 
வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் திரு. க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., 
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., 
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி மு. சுதாதேவி, இ.ஆ.ப., 
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் திரு. சஜ்ஜன்சிங் ஆர். சவான், இ.ஆ.ப., 
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., 
கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனைவர் மு.கருணாகரன், இ.ஆ.ப., 
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர். சீதாலட்சுமி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

வெளியீடு: 

இயக்குநர், 
செய்தி மக்கள் தொடர்புத்துறை, 
சென்னை-9

No comments:

Post a Comment