SAFETY AND SECURITY பயிற்சிக்கு செல்வதற்கு முன்பு இதையும் ஒருமுறைப் படித்துக் கொள்ளுங்களேன் 



School Safety Tips

பிரிவு 5. கண்காணித்தல் 


பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கீழ்க்கண்டவற்றை
பள்ளிகளில் நடைமுறைபடுத்த சரியான கண்காணிப்பு இருக்க வேண்டும். 

5.1. பள்ளி அளவிலான கண்காணித்தல் 

5.1.1. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியரின் பங்கு 1. பள்ளியின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்த பள்ளியின் தலைமையாசிரியரின் தலைமையில் உடன் பணிபுரிவோர், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆலோசகர் உள்ளிட்டோர் கொண்ட குழுவை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். 

2. இக்குழு முதன்மைக்குழுவாக செயல்படும். தலைமையாசிரியரின் வழிநடத்தலில் மூத்த ஆசிரியர்கள், தொடக்க மற்றும் நர்சரி பிரிவுகளின் பொறுப்பாளர்கள், பள்ளியின் மாணவத்தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர்கள், தீயணைப்புப் படையின் பாதுகாப்பு பிரிவின் முகவர்கள் ஆகியோர் இதன் உறுப்பினர்கள் ஆவர். 

3. இக்கையேட்டின் உதவியுடன் ஆசிரியர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறிப்பிட்ட சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை வலியுறுத்துதல். 

4. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கையேட்டின்படி உறுதிசெய்திட வெவ்வேறு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான குறிப்பிட்ட பங்கினை ஒதுக்குதல். 

5. பள்ளிகளில் அவசர மருத்துவ துலங்களுக்கான திட்டங்களை வகுத்தல். 

6. பன்ளிக்கட்டிடங்களின் பல முக்கியமான இடங்களில் முதலுதவிப் பெட்டியை நிறுவி, அவை எப்போதும் செயலில் இருக்கக்கூடியதாகவும் உறுதி செய்தல். 

7. குழந்தைநேய சூழல்களை உருவாக்குதல்

 School Safety 

8. முதலுதவி, நிலநடுக்காத்திகை மற்றும் நெருப்பிலிருந்து பாதுகாத்தலுக்கான பயிற்சிகளை அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் நடத்துதல். 

9. பள்ளிக் கட்டடங்களின் பல முக்கியமான இடங்களில் முதலுதவிப் பெட்டியை நிறுவி, அவை எப்போதும் செயலில் இருக்கக்கூடியதாகவும் உறுதி செய்தல். 

10. மாணவர்கள் பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்தும், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சட்டதிட்டங்களை மீறுவது பற்றியும், பயணம் செய்வோரிடமிருந்து பின்னறித்தகவல் ( (Feed Back) பெறுதல் பற்றியும் உறுதிசெய்தல். 

11. இன்றைய சூழ்நிலையில் Covid -19 சார்ந்து குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல். 

12. பெரும் தொற்று (Covid -19) பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி பிற பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். 

Covid-19 பாதுகாப்புக்கான நெறிமுறைகள்: . . . . 

கை சுத்தத்தைப் பாரமரித்தல், சுவாச சுத்தம், அடிக்கடி தொட்ட இடங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்திகரித்தல். 

உடல் / சமூக இடைவெளியைக் கடைபிடித்தல். கோவிட்-19 தொற்றைத் தவிர்க்க சுத்தமான பழக்கவழக்கங்கள். காய்ச்சலைக் கண்டறிய வெப்பநிலை மானியைப் பயன்படுத்துதல். 

தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தாலோ அல்லது மருத்துவச் சிகிச்சையில் இருந்தாலோ பள்ளி செல்வதைத் தவிர்த்தல்.

 நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலிருந்து மாணவர்களோ, ஆசிரியர்களோ பள்ளிக்கு வரக்கூடாது.


முழு நேரப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் / செவிலியர்/ மருத்துவர் மற்றும் ஆலோசகர்களை பள்ளியிலோ (அல்லது) எளிதில் போய் பார்க்கக் கூடிய தூரத்தில் இருக்கச் செய்து மாணவரது உடல்சார்ந்த மற்றும் மனநலம் சார்ந்த உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 

அடிக்கடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். . 

5.1.2. பள்ளி மேலாண்மைக்குழு (School Management Committee (SMC)

குழந்தைகள் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 (RTE 2009) பிரிவு 21 இன் பள்ளி மேலாண்மைக் குழுவானது உள்ளாட்சி அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அப்பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டிருக்கும். 

பள்ளி மேலாண்மைக்குழு, சரிபார்ப்புப் பட்டியல் உதவியுடன் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம். பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், பள்ளி மேலாண்மைக்குழு வட்டாரக்கல்வி அலுவலரை (Block Educational Officer (BEO) அணுக வேண்டும். வட்டாரக்கல்வி அலுவலர் அளவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படாவிட்டால், மாவட்டக்கல்வி அலுவலருக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்படவேண்டும். மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்திலும் இந்த பிரச்சினைக்குழு தீர்வு காணப்படாவிட்டால், மாவட்ட நீதிபதியிடம் முறையிடலாம் அல்லது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Tamil Nadu Commission for Protection of Child Rights (TNCPCR)) அல்லது குழந்தைகளின் உரிமை பாதுகாப்பிற்கான தேசியக் குழுவில் முறையிடலாம். 


School Safety 

5.1.3. பெற்றோர் ஆசிரியர் கழகம்; (PTA) 

பெற்றோர் ஆசிரியர் கழகம், சரிபார்ப்புப் பட்டியல் உதவியுடன் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம். பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப் படாவிட்டால், பெற்றோர் ஆசிரியர் கழகம் வட்டாரக் கல்வி அலுவலரை அணுக வேண்டும். வட்டாரக் கல்வி அலுவலர் அளவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படாவிட்டால், மாவட்ட கல்வி அலுவலருக்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்படவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் மாவட்ட நீதிபதியிடம் முறையிடலாம் அல்லது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (Tamil Nadu Commission for Protection of Child Rights (TNCPCR)) அல்லது குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசியக் குழுவில் முறையிடலாம். 

5.1.4. குழந்தைகள் 

பட்டியலில் இடம் பெற்றுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் உதவியுடன் மாணவர்கள் குழு ஒவ்வொரு காலாண்டிலும் ஆய்வு செய்தல் வேண்டும். அக்குழுவுக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு விதிகளுக்கு இடர்பாடு ஏற்படும் போது நேரடியாக தலைமை ஆசிரியரிடமோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழகத்திடமோ எடுத்துரைக்கும் உரிமை உள்ளது. 

5.1.5. பள்ளி நிர்வாகம் 

1. பள்ளி நிர்வாகம் பள்ளி பாதுகாப்பு குறித்து அவ்வப்போது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகளுடன் திட்டமிடல் வேண்டும். 

2. பரிந்துரைக்கப்பட்ட பள்ளிப் பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியப் போக்கு கண்டுபிடிக்கப்பட்டால் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி மாநில கல்வித்துறையில் உள்ள தகுதி வாய்ந்த அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.


School Safety 

5.2. வட்டார அளவிலான கண்காணித்தல் 

வட்டார அளவில் கட்டகத்தில் உள்ள நடைமுறைகளை செயல்படுத்தும் பொறுப்பு வட்டாரக் கல்வி அலுவலரைச் சார்ந்தது. 

5.3. மாவட்ட அளவிலான கண்காணித்தல் 

iv. மாவட்ட அளவில் பல்வேறு அரசுத்துறை மற்றும் அமைச்சக அலுவலகங்கள் திட்டத்தின் கீழ் நிறுவப்படும் பள்ளிகளில் கண்காணித்தல் நடைமுறைகளை செயல்படுத்துவது அத்திட்டத்தின் ஒருங்கிணைந்த பணியாகும். 

ii. தேசிய மற்றும் மாநில பாதுகாப்பு உரிமைக்குழுவில் உள்ள திறன் அலுவலர்களால் எந்த பள்ளியும் தேவை என்று கருதும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தலாம். ஆய்வு விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரியப்படுத்தலாம். 

iii. திறன் அலுவலர்கள் தங்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிவர்த்தி செய்ய நிர்வாகத்திற்கு உத்தரவிடுதல் வேண்டும்.

 iv. கையேட்டில் உள்ள செயல்பாடுகளை முறையாக பள்ளிகளில் செயல்படுத்துவதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உறுதி செய்திடல் வேண்டும்.










Post a Comment

Previous Post Next Post

Search here!