புரெவி புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும்; கனமழை பெய்யக்கூடும்: காற்றைப் பற்றிய அச்சம் தேவையில்லை: tamil nadu weatherman - EDUNTZ

Latest

Search here!

Friday 4 December 2020

புரெவி புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும்; கனமழை பெய்யக்கூடும்: காற்றைப் பற்றிய அச்சம் தேவையில்லை: tamil nadu weatherman

புரெவி புயல் வலுவிழந்து கரையைக் கடக்கும்; கனமழை பெய்யக்கூடும்: காற்றைப் பற்றிய அச்சம் தேவையில்லை: Tamil Nadu WeatherMan


பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே புரெவி புயல் கரையைக் கடக்கும்போது வலுவிழந்து கரையைக் கடக்கும், காற்றைப் பற்றிய அச்சம் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

 தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ‘புரெவி’ புயல் நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடையே இலங்கை கடற்கரையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது. தமிழகக் கடற்கரைப் பகுதியான பாம்பன் பகுதியை புரெவிப் புயல் மணிக்கு 70 முதல் 80 கி.மீ காற்றுடன் நெருங்கியுள்ளது. 

அடுத்த 3 மணிநேரத்துக்குப்பின் பாம்பன் பகுதியிலிருந்து கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி புரெவிப் புயல் மெல்ல நகரத் தொடங்கும். புரெவிப் புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: புரெவிப் புயல் தற்போது எங்குள்ளது? புரெவி புயல் தற்போது இலங்கையைக் கடந்து பாக் ஜலசந்தி பகுதிக்குள் வந்திருக்கிறது. 

இலங்கையில் நேற்று இரவு கரையைக் கடந்த புரெவிப் புயல் தரைப் பகுதியைக் கடந்து, தற்போது மீண்டும் கடல்பகுதிக்குள் வந்துள்ளது. புரெவிப் புயலால் பலத்த காற்று வீசுமா? பொதுவாக தரைப்பகுதியைக் கடந்து மீண்டும் கடற்பகுதிக்குள் நுழையும் புயல் வலுவிழக்கும். அதுபோல் தற்போது புரெவி புயலும் மிகவும் வலுவிழந்திருக்கிறது. 

கடலின் வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. காற்று அதிகமாக வீசுவதற்கு கடலின் வெப்பம் சாதகமாக இருந்தாலும், வின்ட் ஷீர் எனச் சொல்லப்படும் காற்றின் திசையை திருப்பக்கூடிய போக்கு சாதகமாக இல்லை. ஆதலால் புரெவிப் புயல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத்தான் இருக்கிறது

No comments:

Post a Comment