TNPSC: எந்த தேர்வுகள் எந்தெந்த மாதங்களில்? முக்கியத் தகவல்
TNPSC: எந்த தேர்வுகள் எந்தெந்த மாதங்களில்? முக்கிய அப்டேட்ஸ் |
TNPSC Annual Planner : 2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே
மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. துணை
ஆட்சியர்,காவல்துறை
துணை கண்காணிப்பாளர, உதவி
ஆணையாளர் (வணிக வரி), துணை
பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), உதவி இயக்குநர் (கிராமப்புற
வளர்ச்சி), மாவட்ட
அலுவலர் (தீ மற்றும் மீட்பு சேவைகள்) போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் எனத்
தெரிவிக்கப்பட்டது . குரூப் I முதல்நிலை தேர்வு, இந்தண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம்
தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவல்
காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, ஒத்திவைக்கப்பட்ட குரூப் – 1 தேர்வு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டது. TNPSC Annual Planner – 2021
தொழில்
மற்றும் வர்த்தக உதவி இயக்குநர் பணிக்கான தேர்வு மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர
தொழில்கள்(ரசாயனப் பிரிவு) உதவி கண்காணிப்பாளர் பணிக்கான தேர்வு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2A, தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம்
வெளியிடப்படுகிறது. குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுக்கான
அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்று வருடாந்திர திட்டத்தில்
டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. |
No comments:
Post a Comment