கல்லூரியிலிருந்து விலகிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தர UGC உத்தரவு


சென்னை, டிச. 19: கல்லூ ரிகளில் நடப்பு கல்வியாண் டில் சேர்க்கைக்கு பிறகு விலகிய மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கல்வி கட்டணத்தை திருப்பித் தர யுஜிசி உத்தர விட்டுள்ளது. இது குறித்து யுஜிசி பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: கொரோனா தாக்கத் தால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் செயல் படவில்லை. தரடங்கால் பெற்றோர்களும் வருமா னம் இன்றி பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்கள், நீதிமன்ற உத்தரவுகள், மக்கள் நல அமைப்புகளிடம் இருந்து பல்வேறு கடிதங்கள் என யுஜிசிக்கு வந்தது. 

அதன் அடிப்படையில், 2020-21 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்த பின் பல்வேறு காரணங்களால் விலகியிருக்கும் மாணவர்க ளுக்கு அவர்கள் செலுத் திய முழுத்தொகையும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் திருப்பித் தர வேண்டும். குறிப்பாக தனியார் உயர்கல்வி நிறு வனங்கள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் செலுத்திய தொகையை திருப்பித்தர வில்லை என புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த உத்தரவை மீறி செயல்ப டும் கல்லூரி மற்றும் நிர் வாகிகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!