10, 12 ம் வகுப்பு பாடங்களை மேலும் குறைக்கத் திட்டம்


கொரோனா தொற்று பரவல் காரணமாக, 10 மாதங்களாக, பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழியாகவும் பாடங்கள் நடத்தப்பட் டன. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 மாண வர்களுக்கு, கடந்த 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. 

இந்நிலையில், மாண வர்களின் கற்றல் திறனை அறிய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற் காக, 'ஆன்லைன்' தேர்வை நடத்த முடிவு செய்து, நேற்று தேர்வு தொடங்கி யுள் ளது. இதன் அடிப்ப டையில் பாடங்களை குறைக்க அரசு திட்டமிட் டுள்ளதாக கல்வி அதிகா ரிகள் தரப்பில் தெரிவிக் கப்படுகிறது. 

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், அர சுப்பள்ளிகளில் 'ஹைடெக் லேப்' வழியாக, இந்த தேர்வை நடத்த வேண் டும். இதில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் திறனை தெரிந்து, வரும் நாட்களில் பாடங்கள் நடத்த வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. 

அதற்கேற்ப 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர் களுக்கு மே 13ம் தேதிக்கு பின்னர் பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் கட -ந்த 19ம் தேதி முதல் காலை 9.30 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை மாண வர் களுக்கு வகுப்புகள் நடத் தப்படுகின்றன. தற்போது வாரம் 5 நாட்கள் வகுப்பு கள் என்ற நிலையில் 6 நாட் கள் வகுப்புகள் நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் பொதுத் தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களின் வருகை 90 சதவீதத்துக்கு மேல் இருந்த நிலையில் தற் போது 60 முதல் 70 சதவீதம் வரையே உள்ளது என்றும், மாணவர்களை ஒரேயடி யாக காலை முதல் மாலை வரை வகுப்புகளுக்குள் முடக்குவது அவர்களது மனநிலையில் ஒருவித தேக் கத்தை ஏற்படுத்தும் என் றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக வேலூரை சேர்ந்த அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, *பள்ளிகள் தொடங்கிய 4 நாட்களில் மாணவர்களின் வருகை குறைந்துவிட்டது. தற்போது ஆய்வகம் மூலம் ஆன்லைன் தேர்வு நடத்த சொல்லியிருக்கிறார்கள். பாடங்களில் முக்கிய பகு திகளை மட்டும் நடத்த சொல்லியிருக்கிறார்கள். தேர்வு முடிவின் அடிப்ப டையில் என்ன முடிவு எடுப்பார்கள் என் பது தெரியாது. அனேகமாக "சிலபஸ்' குறைப்பு இருக்க லாம்' என்றார்.

Post a Comment

أحدث أقدم

Search here!