பள்ளிக்கூடம் நடத்தி வரும் 102 வயது தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். கல்லாமை என்ற அறியாமை இருளை நீக்கி, கல்வி கண் தரும் இறைவன் ஆசிரியராக கருதப்படுவர். அந்த வகையில் ஒடிஷா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கந்திரா என்ற கிராமத்தில் வசித்து வரும் நந்த கிஷோர் பிருஸ்டி என்ற 102 வயதான தாத்தா, கடந்த 1946 முதல் தனது கிராமத்தில் சாட்டசாலி என்ற பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார்.
அந்த கிராமத்தை சுற்றி உள்ள ஊரக பகுதி மாணவர்களுக்கு அந்த பள்ளிக்கூடம் என்றால் விரும்பி சேருவார்கள். ஏழாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடத்தின் பக்கம் செல்லாத அவர் மாணவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை போதித்து வருகிறார். அவரது பணியை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
நான்காம் வகுப்பு வரை இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். நந்த கிஷோர் தாத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ள செய்தியை அறிந்ததும் அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்களும், இந்நாள் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் டாக்டர், பொறியாளர் மற்றும் அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment