தணிக்கை மற்றும் கணக்குத்துறை (சி.ஏ.ஜி) 10,811 காலி பணி இடங்கள்
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தணிக்கை மற்றும் கணக்குத்துறை (சி.ஏ.ஜி) சார்பில் 6409 ஆடிட்டர் பணி இடங்கள், 4402 அக் கவுண்டண்ட் பணி இடங்கள் என மொத்தம் 10,811 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாநில வாரியான காலி பணி இடங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆடிட்டர் (306), அக்கவுண்டண்ட் (288) பணி இடங்கள் உள்ளன. 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை https://cag.gov.in/en என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பிரதி எடுத்து ‘ஸ்ரீ வி.எஸ்.வெங்கடநாதம், அசிஸ்டெண்ட் சி&ஏ.ஜி (என்), ஓ/ஓ தி சி அண்ட் ஏ.ஜி, 9, தீன் தயாள் உபாத்யாய் மார்க், புதுடெல்லி - 110124’ என்ற முகவரிக்கு ஸ்பீடு போஸ்ட் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 19-2-2021.
No comments:
Post a Comment