மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையொட்டி, தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த 11 மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மருத்துவ இடங்கள் வீதம் மொத்தம் 1,650 மருத்துவ இடங்கள் புதிதாக கிடைத்துள்ளது எனவும், இக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதற்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
இதர மாநிலங்களில் நடப்பாண்டிலேயே புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கும், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது போல, தமிழகத்திலும் புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கிட, தமிழகத்தின் உரிமையை காப்பாற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
11 புதிய மருத்துவக்கல்லூரிகளில்
நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
No comments:
Post a Comment