கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி டெல்லியில் மிகக்குறைந்தபட்சமாக 0.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலை வேளையில் நிலவும் நடுங்க வைக்கும் குளிரால் மக்கள் கடும் சிரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. கடந்த 15 ஆண்டுகளில் பதிவான குறைந்தபட்ச வெப்ப நிலை இதுவாகும்.
கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி டெல்லியில் மிகக்குறைந்தபட்சமாக 0.2 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. அதன்பின் தற்போது, 1.1. டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியது. கடந்த ஆண்டில் மிகக்குறைந்தபட்சமாக 2.4 டிகிரி குளிர் டெல்லியல் நிலவியது என இந்திய வானிலைமையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment