2020-2021 HSE பொதுத் தேர்வு (புதுச்சேரி)- பெயர்ப்பட்டியல் தயாரித்தல் பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – DGE Proceed - EDUNTZ

Latest

Search Here!

Monday, 25 January 2021

2020-2021 HSE பொதுத் தேர்வு (புதுச்சேரி)- பெயர்ப்பட்டியல் தயாரித்தல் பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – DGE Proceed

 2020-2021 HSE பொதுத் தேர்வு - பெயர்ப்பட்டியல் தயாரித்தல் பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – DGE Proc


மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பெயர் பட்டியல் தயாரித்தல் - பள்ளி மாணவர்கள் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து-அரசுத்தேர்வு துறை இயக்குநர் செயல்முறைகள்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி. 

 அனுப்புநர் 

முனைவர்.சி.உஷாராணி, எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி., அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 600 006. 

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி. 

 நாள்:25.01.2021 ந.க.எண்.025650/எச்.1/2020 

 ஐயா/ அம்மையீர், பொருள்: சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - பெயர்ப்பட்டியல் தயாரித்தல் பள்ளி மாணாக்கர் விவரங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் – சார்பு அரசாணை (நிலை) எண்.58, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (D.M- IV)துறை, நாள்.22.01.2021. பார்வை : பார்வையில் காணும் அரசாணையில், 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கு பெயர்ப்பட்டியல் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2020-ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கு தயாரிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலினை (Nominal Roll) அடிப்படையாகக் கொண்டு, 2020-2021 ஆம் கல்வியாண்டின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. எனவே, இது குறித்தான பின்வரும் அறிவுரைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 1. அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 27.01.2021 பிற்பகல் முதல் 01.02.2021 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்கள் பள்ளிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி 2020-2021- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள தங்களது பள்ளி மாணாக்கரின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்ததேதி, பாடத்தொகுதி 2. பதிவிறக்கம் செய்யப்பட்ட மாணவர் விவரம் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் 

தங்கள் பள்ளியில் +2 பயிலும் மாணாக்கரது பெயர் (தமிழ்மற்றும் ஆங்கிலத்தில்- Initial and Spelling Mistake only), புகைப்படம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின், அதன் விவரங்களை பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து 02.02.2021 தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ளப்படும். 3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பின்னர், அரசிதழில் (Gazette) பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணாக்கர்களுக்கு மட்டும், பத்தாம் வகுப்பு சான்றிதழில் உள்ளவாறு இல்லாமல் அரசிதழில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும். அவ்வகை மாணாக்கரது பெயர் திருத்தம் கோர அரசிதழின் நகலை கண்டிப்பாக முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 4. ஒரு பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு (+1) பயின்று, மார்ச் 2020-ல் மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதிய பின்னர், மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறொரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் (+2) சேர்ந்து பயிலும் மாணவரது பெயரை, அன்னார் தற்போது +2 பயிலும் பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலில் சேர்த்திடலாம். ஆனால், அம்மாணவர் ஏற்கனவே +1 பயின்று தேர்வெழுதிய பாடத் தொகுப்பு, பயிற்று மொழி மற்றும் மொழிப்பாடம் ஆகியவற்றில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. 5. மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வுக்கு பின் வேறு பள்ளியில் சேர்ந்து +2 பயிலும் மாணாக்கரின் பெயரை, தற்போது +2 பயிலும் பள்ளியின் பெயர் பட்டியலில் சேர்க்க வேண்டுமெனில், -1 மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்களை முதன்மைக் கல்வி அலுவல� [8:19 PM, 1/25/2021] ♏iller: ..3... 6. மேல்நிலை முதலாமாண்டு (+1) பயின்று +1 தேர்வெழுதிய பள்ளி மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே பெயர்ப்பட்டியலில் இருந்து அம்மாணவரின் பெயர் நீக்கம் (Deletion) செய்திடலாம். 7. 2017-2018 / 2018-2019 கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு பயின்று தேர்ச்சி பெற்று / பெறாமல் இடைநின்று தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பயின்று வரும் மாணாக்கர் பெயர், பிறந்த தேதி, நிரந்தரப் பதிவெண், பாடத்தொகுப்பு மற்றும் பயிற்று மொழிகள், அடங்கிய விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக 05.02.2021 க்குள் பதிவஞ்சல் மூலம் இவ்வலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேல்நிலை பள்ளிகளில் இருந்து 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் கோரி பெறப்படும் விவரங்களை 01.02.2021 முதல் 05.02.2021 வரையிலான நாட்களில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password-ஐக் கொண்டு இணையதளம் (www.dge.tn.gov.in) ) வழியாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு கீழ்க்காணும் கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கைபேசி எண்: 9498383073/9498383081 ஓம்- இயக்குநர் நகல்: 1 அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் - தகவலுக்காக 2





No comments:

Post a Comment