இந்திய விமான ஆணையம் (ஏ.ஏ.ஐ) சார்பில் மானேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் பதவிகளில் 368 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மானேஜர் பதவிக்கு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் எக்சிகியூட்டிவ் பதவிக்கு பி.எஸ்.சி, எம்.பி.ஏ, பி.இ, பி.டெக் படிப்பு தகுதிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. ஏற்கனவே விண்ணப்பிக்க இறுதி தேதி முடி வடைந்த நிலையில் தற்போது 29-1-2021 வரை விண்ணப்பிக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் அப்ரண்டீஸ் அடிப்படையில் 180 பயிற்சி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-1-2021. மேலும் விரிவான விவரங்களை https://www.aai.aero/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
Post a Comment