Android 11 update பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் - EDUNTZ

Latest

Search here!

الثلاثاء، 19 يناير 2021

Android 11 update பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்

Android 11 update பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் 


ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எனினும், இது சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கேலக்ஸி போல்டு எல்டிஇ வேரியண்ட்டிற்கும் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் கேலக்ஸி போல்டு 5ஜி வேரியண்ட்டிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 சாட் பபுள்கள், மேம்பட்ட யூசர் இன்டர்பேஸ், உரையாடல்களுக்கென தனி பகுதி என பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. 

முன்னதாக கேலக்ஸி இசட் போல்டு 2, கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி இசட் ப்ளிப் மற்றும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது. சாம்சங் தனது கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 2019 வாக்கில் ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق