உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பி.எச்.டி. ஆய்வு படிப்பு கட்டாயம் என்பதா? கி.வீரமணி கண்டனம்


 திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எச்.டி., ஆய்வு படிப்பு கட்டாயம் என்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி, இடஒதுக்கீட்டு வாய்ப்புகளை அறவே பறித்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக உயர்கல்வித்துறையின் அரசாணையை திரும்ப பெற வேண்டும். தொடர்ந்து சமூகநீதியையும், இடஒதுக்கீட்டையும் குறிவைத்து தகர்க்கும் நிலையில், முழுமூச்சாக மத்திய பா.ஜ.க. ஆட்சி தீவிரம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!