2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 18-ந ்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி நிறைவு பெற்றது. முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கும், அதேபோல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அந்த வகையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. பொதுப்பிரிவில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 182 எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 206 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 68 பி.டி.எஸ். இடங்களும், சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 965 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் இருந்தன.
தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்த பி.டி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 65 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) காலையுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. பிற்பகலில் இருந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கி, நாளை மறுதினம் (புதன்கிழமை) வரை நடக்கிறது.
மருத்துவ படிப்பில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரம்பின
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்று மதியம் கலந்தாய்வு
No comments:
Post a Comment