தினசரி காலை உணவோடு குடிக்க உகந்தது டீயா?.. அல்லது காபியா? - EDUNTZ

Latest

Search here!

Thursday, 28 January 2021

தினசரி காலை உணவோடு குடிக்க உகந்தது டீயா?.. அல்லது காபியா?

தினசரி காலை உணவோடு குடிக்க உகந்தது  டீயா?.. அல்லது காபியா? 



 காலை எழுந்தவுடன் குடிப்பதற்கு டீ நல்லதா? காபி நல்லதா? என்ற கேள்வு காலம் காலமாக ஏன் டீ காபி கண்டுபிடிப்பதற்கு முன் இருந்திருக்கலாம். இந்த கஃபைன் நிறைந்த இரண்டு பானங்களும் உலக மக்கள் அனைவராலும் காலையில் குடிப்பதற்கு சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

 சில மக்கள் டீயை பாலுடனும் அல்லது சுடு தண்ணிரில் தேன் மற்றும் லெமன் சேர்த்து பயன்படுத்தி வருகின்றனர். இதேபோன்று காபியையும் தங்களுக்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய வகையில் அதைக் குடிக்கின்றனர். இரண்டுமே காலை சோர்வைப் போக்கி புத்துணர்வை அளிக்கக்கூடியது. ஆனாலும் மக்களிடையே உள்ள ஒரு கேள்வி. இரண்டில் எது சிறந்தது. அதிகப்படியான கஃபைன் உடலுக்குத் தீங்கானது என்று நாம் அனைவருமே அறிவோம். அளவுக்கு மீறினால் அமுதம் நஞ்சு தானே. அதிக அளவில் உடலில் கஃபைன் சேரும்போது நரம்பு தளர்ச்சி கவலை எரிச்சல் வயிறு மற்றும் வாயு பிரச்சனை சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

 இதனாலேயே கஃபைன் சார்ந்த பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளக்கூடாதென்று எக்ஸ்பர்ட்டுகள் எச்சரிப்பார்கள். அமெரிக்க அரசு உணவு ஆராய்ச்சி மையம் 4-5 ஸ்மால் கப் காபியில் 400மிகி அளவு மட்டுமே கஃபைன் இருக்க வேண்டும் கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. இந்த டீ-காபி இரண்டில் எது சிறந்தது என்று பார்ப்போம். டீ-காபி இரண்டும் சேர்ந்து பல நன்மைகளையும் சில தீமைகளையும் நமக்குத் தருகின்றன. பொதுவாக டீயோ காபியோ பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பதே நல்லது. 

அதையும் மீறி பால் சர்க்கரைத் தேவைப்பட்டால் அதை அளவோடு குடிப்பதே நல்லது. ப்ளாக் காபி ப்ளாக் டீயை விட அதிகமான கஃபைன் கொண்டது. ஒரு கப் ப்ளாக் டீயில் 55மிகி கஃபைன் இருந்தால் ஒரு கப் ப்ளாக் காபியில் 100மிகி அளவுக்கு கஃபைன் உள்ளது. ஒருவேளை உங்களுக்கு கஃபைனால் கேஸ் ப்ராப்ளம் அல்லது அலர்ஜி இருக்குமான ப்ளாக் காபியை விட ப்ளாக் டீக்கு மாறுவது உங்களுக்கு நல்லது. ப்ளாக் காபி இரண்டு விதமான பிரச்சனைகளை சரிசெய்வதாக ஆராய்ச்சி ஒன்று விளக்குகிறது. அவை டைப் 2 டயாபடீக்ஸ் எனெர்ஜி மற்றும் உடல் வலிமையை பெருக்கவும் உதவுகிறது. அல்ஸைமர் மற்றும் டெமின்டியாவின் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. டீயை விட ப்ளாக் காபி வளர்சிதை மாற்றத்தை பெருக்குகிறது. டீ இப்பொழுது பலவகையான ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. 

க்ரீன் டீ ப்ளாக் டீ வொயிட் டீ மற்றும் ஊலாங். டீயில் நிறிய ரிச் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இது இதயத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. இந்த இரண்டு கஃபைன் நிறந்த பானங்களில் உங்களுக்கு சரியானது எது என்று தேர்ந்தெடுத்து குடியுங்கள். அதிகப்படியான வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை நீக்க இன்ஸ்டன்ட் எனர்ஜி வேண்டும் என்றால் காபி நல்லது. 

ஆனால் அதீத கஃபைனால் பாதிப்பு ஏற்படாமல் உடல் சோர்வை போக்க டீ ஒரு சிறந்த் தீர்வு. ஹெர்பல் டீ ஒரு சிறந்த் கஃபைன் ப்ரீ காலை பானம். முடிந்த அளவு காபி டீயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொளவதை தவிருங்கள். ஆரோக்கியமான உடலைப் பெறுங்கள்.

 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment