தரையில் இது எரிய ஆரம்பித்தால், விமானம் புறப்பட தயாராகி உள்ளது என்று பொருள்.
புறப்பட முறையான அனுமதி பெற்றவுடன் விமானி முதலில் இந்த எச்சரிக்கை விளக்கைத் தான் எரியவிடுவார், பகலிலும்.. தரையில் இருப்பவர்கள் உடனே விமானத்தை விட்டு விலகி விடுவர்.
இது சிகப்பாகவும் விட்டு விட்டு எரிவதாலும் எல்லோராலும் கவனிக்கப்படும்.
இந்தவிளக்கு பயணம் முழுவதும் எரிந்து கொண்டே இருக்கும்.
சேரும் இடத்தில் நின்றபிறகு இயந்திரங்களை அணைத்த பிறகு மற்றவர்கள் விமானத்தை அனுகலாம் என்றபோது தான் இந்த விளக்கை அணைப்பார்.
இறக்கையின் இரண்டு பக்க முடிவில் இருப்பது ஸ்டோரோப் விளக்கு ( strobe light) அதிக ஒளியை விட்டு விட்டு அளிக்கும். இதைப் பொதுவாக ஓடுபாதையில் நுழைவதற்கு முன்னர் எரியவைக்கப்படும்.
இந்த இரண்டு விளக்குகளுமே மற்ற விமானங்களுக்கு எச்சரிக்கையை அளிக்கும். குறிப்பாக மேகத்தின் ஊடே பறக்கும் போது மிகவும் பயனளிக்கும்.
தெரிந்து கொள்வோம் : விமானத்தில் சிவப்பு மினுமினுக்கும் விளக்கு எரிய காரணம் என்ன?
No comments:
Post a Comment