மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் 


 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன இதற்கிடையே சென்னை,சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பள்ளி வளாகம் மூடப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பள்ளி தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நுழைவு வாயிலிலேயே வெப்பமானி வாயிலாக உடல் வெப்பநிலை தினமும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாறுபாடு கண்டறியப்பட்டால் உடனே ‘பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ ஆக்சிஜன் அளவை அளவிட வேண்டும். இவ்விரு சோதனைகளிலும் சராசரியை விட வித்தியாசம் காணப்பட்டால் அவர்களை உடனே தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா சோதனை மேற்கொள்வது அவசியமாகும்” என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post

Search here!